இராம. வீரப்பன்
ஆர்.எம்.வீ. என அறியப்படும் இராம. வீரப்பன் (R. M. Veerappan, 9 செப்டம்பர் 1926 – 9 ஏப்ரல் 2024) தமிழக அரசியல்வாதி. திரைப்பட தயாரிப்பாளர். தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.
இராம. வீரப்பன் | |
---|---|
தகவல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் | |
பதவியில் 30 சூன் 1977 – 17 பெப்ரவரி 1980 | |
பதவியில் 9 சூன் 1980 – 9 பெப்ரவரி 1985 | |
உள்ளாட்சித் துறை அமைச்சர் | |
பதவியில் 10 பெப்ரவரி 1985 – 24 திசம்பர் 1987 | |
பதவியில் 24 திசம்பர் 1987 – 7 சனவரி 1988 | |
பதவியில் 7 சனவரி 1988 – 30 சனவரி 1988 | |
கல்வி மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் | |
பதவியில் 24 சூன் 1991 – 12 மே 1996 | |
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணைப் பொதுச் செயலாளர் | |
பதவியில் 1989–1993 | |
Deputy | இரா. நெடுஞ்செழியன் |
பொதுச் செயலர் | ஜெ. ஜெயலலிதா |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | எவருமில்லை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வல்லாதிரகோட்டை, புதுக்கோட்டை அரசாட்சி, இந்தியா (தற்போது புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு) | 9 செப்டம்பர் 1926
இறப்பு | 9 ஏப்ரல் 2024 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 97)
அரசியல் கட்சி | திமுக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் கழகம் |
துணைவர் | ராசம்மாள் |
பிள்ளைகள் | 6 |
பெற்றோர் | இராமசாமி, தெய்வானை |
வேலை | அரசியல்வாதி, தயாரிப்பாளர் |
இளமைக்காலம்
தொகுபுதுக்கோட்டை நகருக்கு அருகிலுள்ள வல்லாதிரகோட்டை எனும் சிற்றூரில் தெய்வானை-இராமசாமி இணையருக்கு மகனாக 9 செப்டம்பர் 1926 அன்று பிறந்தார் இராம. வீரப்பன்.
நாடக, திரைப்பட வாழ்க்கை
தொகுஎம்.ஜி.ஆர் 1953ல் "எம்.ஜி.ஆர் நாடக மன்றம்" மற்றும் "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஆரம்பித்தார். இந்த இரண்டு நிறுவனத்திற்கும் இராம. வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக நியமித்தார். இராம. வீரப்பன் 1963ல் "சத்யா மூவிஸ்" என்ற பெயரில் சினிமா பட நிறுவனம் ஆரம்பித்தார்.[1] தென்னிந்திய நடிகர்சங்க செயற்குழு உறுப்பினராக 1956ஆம் ஆண்டில் இருந்தார்.[2]
அரசியல்
தொகுஇருமுறை 1977 - 1986 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும், இருமுறை 1986 இடைத்தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும்1991 இடைத்தேர்தலில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.[3] எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
சத்யா மூவிஸ் தயாரித்த பாட்ஷா பட வெள்ளி விழாவில் ரஜினிகாந்த், வெடிகுண்டு கலாச்சாரம் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தார். அப்போது, ஜெ. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தார். அவருடைய மந்திரி சபையில், வீரப்பன் உணவு அமைச்சராகப் பதவி வகித்தார். இதன்பின் திடீரென்று அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். சில நாட்களில், அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார்.[4] இதன் காரணமாக, "எம்.ஜி.ஆர். கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி இராம.வீரப்பன் தொடங்கினார்.
திருமணம்
தொகுமதுரை திருப்பரங்குன்றத்தில் 12-3-1956ஆம் நாள் இவருக்கும் இராஜம்மாள் என்பவருக்கும் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதில் என். எஸ். கிருஷ்ணன். எம். ஜி. சக்ரபாணி. ம. கோ. இராமச்சந்திரன். எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.[2]
இறப்பு
தொகுஆர். எம். வீரப்பன், 2024 ஏப்ரல் 9 திங்கட்கிழமை அன்று சென்னையில் தனது 97-ஆவது அகவையில் காலமானார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ இராம. வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று நூல் ("ஆர்.எம்.வீ. ஒரு தொண்டர்)
- ↑ 2.0 2.1 திராவிடநாடு (இதழ்) நாள்:1-4-1956, பக்கம் 11
- ↑ http://eci.nic.in/eci_main/ByeElection/Bye-ele-results%2052-95.xls
- ↑ http://rajinifans.com/history/part95.php
- ↑ "RM Veerappan passes away". News Today. 9 April 2024. https://newstodaynet.com/2024/04/09/rm-veerappan-passes-away/.