ந. ரங்கசாமி

இந்திய அரசியல்வாதி

ந. ரங்கசாமி (N. Rangasamy) நடேசன் ரங்கசாமி பிறப்பு: ஆகத்து 4, 1950)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், புதுச்சேரி மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.[2][3] இவர் புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை இருந்துள்ளார்.

ந. ரங்கசாமி
மார்ச் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்
புதுச்சேரி மாநில முதல்வர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
துணைநிலை ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன்
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
தொகுதிதட்டாஞ்சாவடி
பதவியில்
16 மே 2011 – 6 சூன் 2016
முன்னையவர்வி. வைத்தியலிங்கம்
பின்னவர்வி. நாராயணசாமி
தொகுதிஇந்திரா நகர்
கதிர்காமம்
பதவியில்
1 அக்டோபர் 2006 – 4 செப்டம்பர் 2008
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்வி. வைத்தியலிங்கம்
தொகுதிதட்டாஞ்சாவடி
9ஆவது பாண்டிச்சேரி முதல்வர்
பதவியில்
27 அக்டோபர் 2001 – 1 அக்டோபர் 2006
முன்னையவர்ப. சண்முகம்
பின்னவர்பதவி நீக்கப்பட்டது
புதுச்சேரி சட்டப் பேரவையின்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
16 மே 2016 – 22 பிப்ரவரி 2021
துணைநிலை ஆளுநர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 ஆகத்து 1950 (1950-08-04) (அகவை 74)
பாண்டிச்சேரி, பிரெஞ்சு இந்தியா (தற்போது - பாண்டிச்சேரி, புதுச்சேரி, இந்தியா)
அரசியல் கட்சிஎன். ஆர். காங்கிரஸ் (2011—தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (1990—2011)
பெற்றோர்தந்தை : நடேசன் கிருஷ்ணசாமி கவுண்டர்
தாயார் : பாஞ்சாலி
வாழிடம்(s)எண்: 9, விநாயகர் கோவில் தெரு, லாசுபேட்டை, புதுச்சேரி - 605 009.
வேலைஅரசியல்வாதி, விவசாயம்
புனைப்பெயர்(s)மக்கள் முதல்வர்
என். ஆர்

இளமைக் காலம்

தொகு

இவர் ஆகத்து 4, 1950 ஆம் ஆண்டு நடேசன் கிருஷ்ணசாமி கவுண்டர் - பாஞ்சாலி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் புதுச்சேரியில் உள்ள தாகூர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும் மற்றும் புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பும் படித்தார்.[4]

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் 2001 முதல் 2008 வரை புதுச்சேரியின் முதலமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார் மற்றும் மே 16, 2011 அன்று மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். இவர் மிகவும் எளிமையான முதலமைச்சர் என்று பெயர் பெற்றவர். முதலமைச்சரான பின்பும் இருசக்கர வாகனத்தில் சட்டசபைக்கும், தொகுதிகளுக்கும் வந்தவர்.[5] இவர் 2011 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து விலகி அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார். 2011 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 30 இடங்கள் உள்ள பேரவையில் 20 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தார். பின்பு 2016 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் அணி 15 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

வகித்தப் பதவிகள்

தொகு
 

தேர்தலில் போட்டியிட்ட ஆண்டுகள்

தொகு
ஆண்டு தொகுதி முடிவு பெற்ற வாக்குகள் எதிர்க்கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு வித்தியாசம்
1990 தட்டாஞ்சாவடி  N தோல்வி 8521 வி. பெத்தபெருமாள் 9503 982
1991 தட்டாஞ்சாவடி  Y வெற்றி 12545 வி. பெத்தபெருமாள் 5285 7260
1996 தட்டாஞ்சாவடி  Y வெற்றி 9989 வி. பெத்தபெருமாள் 7699 2290
2001 தட்டாஞ்சாவடி  Y வெற்றி 14323 வி. பெத்தபெருமாள் 8769 5554
2006 தட்டாஞ்சாவடி  Y வெற்றி 27024 தி. குணசேகரன் 2026 24998
2011 கதிர்காமம்  Y வெற்றி 16323 வி. பெத்தபெருமாள் 6566 9757
2011 இந்திரா நகர்  Y வெற்றி 20685 வி. ஆறுமுகம் 4008 16677
2016 இந்திரா நகர்  Y வெற்றி 15463 வி. ஆறுமுகம் 12059 3404
2021 ஏனாம்[6][7][8]  N தோல்வி 16475 கோல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் 17131 656
2021 தட்டாஞ்சாவடி  Y வெற்றி 12978 கே. சேது (எ) சேது செல்வம் 7522 5456

மேற்கோள்கள்

தொகு
  1. "N. Rangaswamy Biography".
  2. "புதுச்சேரி: முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி! மருமகன் துணை முதல்வரா?!". விகடன் இதழ் (May 7, 2021)
  3. "Rangasamy's clean image helped him humble Congress in Puducherry". India Today (May 13, 2011)
  4. "Puducherry Assembly Elections 2016: Know your leader Profile- N Rangasamy". Oneindia (March 30, 2016)
  5. "N Rangasamy: Meet the 'Junior Kamaraj' of Puducherry". Times Of India (May 18, 2016)
  6. https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/independent-wins-yanam-assembly-seat/articleshow/82359938.cms
  7. https://www.news18.com/news/politics/yanam-election-result-2021-live-updates-yanam-winner-loser-leading-trailing-mla-margin-3696779.html
  8. https://www.maalaimalar.com/news/tnelection/2021/05/02195439/2600284/NR-congress-rangasamy-loss-yanam-constituency.vpf

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ந. ரங்கசாமி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
அரசியல் பதவிகள்
முன்னர் புதுச்சேரி முதல்வர்
2001-2008
பின்னர்
முன்னர் புதுச்சேரி முதல்வர்
2011-2016
பின்னர்
முன்னர் புதுச்சேரி முதல்வர்
மே 2021 -தற்போது வரை
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._ரங்கசாமி&oldid=3962402" இலிருந்து மீள்விக்கப்பட்டது