தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan, பிறப்பு: சூன் 2, 1961) ஓர் இந்திய அரசியல்வாதியும் தெலங்காணா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.[5] புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்திருந்தார்.[6]
மருத்துவர். தமிழிசை சௌந்தரராஜன் | |
---|---|
![]() | |
இரண்டாவது தெலங்கானா ஆளுநர் | |
பதவியில் செப்டம்பர் 08, 2019 – 19 மார்ச்சு 2024[1] | |
முன்னையவர் | ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் |
பின்னவர் | கோ. போ. இராதாகிருஷ்ணன் |
25வது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (கூடுதல் பொறுப்பு)[2] | |
பதவியில் 18 பெப்ரவரி 2021 – 19 மார்ச்சு 2024 | |
முன்னையவர் | கிரண் பேடி |
பின்னவர் | கோ. போ. இராதாகிருஷ்ணன் |
மாநில தலைவர் பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு | |
பதவியில் 16 ஆகத்து 2014 – 01 செப்டம்பர் 2019 | |
இயக்குநர் (அலுவல் சாரா), பாரத் பெட்ரோலிய நிறுவனம்[3] | |
பதவியில் 2017–2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 2, 1961[4] நாகர்கோவில், மெட்ராஸ் ஸ்டேட், இந்தியா (தற்போதைய தமிழ்நாடு) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மருத்துவர் பி. சௌந்தரராஜன் |
பிள்ளைகள் | சுகநாதன் |
பெற்றோர் | குமரி அனந்தன் கிருஷ்ணகுமரி |
வாழிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
முன்னாள் மாணவர் | மதராசு மருத்துவக் கல்லூரி |
பணி | |
தமிழிசை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின்[7] மகள் ஆவார். ஆளுநர் பொறுப்பு ஏற்பதற்கு முன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர், மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். இவரே பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்த முதல் பெண் ஆவார்.
பிறப்பு
தமிழிசை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் சூன் 2, 1961-ஆம் ஆண்டு குமரி அனந்தன், கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். மதராசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை படித்து முடித்தார். சௌந்தரராஜன் என்பவரை மணந்தார். இவருடைய கணவரும் ஒரு மருத்துவர் ஆவார். இவர்களுக்குச் சுகநாதன் என்னும் மகன் உள்ளார்.[8]
அரசியல் வாழ்க்கை
2006, 2011 சட்டமன்றத் தேர்தல்களிலும், 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்டுத் தோற்றார். பின்னர், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக வேட்பாளராக, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியடைந்தார்.
2017 ஆம் ஆண்டு, இந்திய ஒன்றிய அரசு பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராகத் தமிழிசையை நியமித்தது. இந்தப் பதவியில் இவர் மூன்றாண்டு காலம் இருப்பார் என ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.[9]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
ஆண்டு | தேர்தல் | கட்சி | தொகுதி | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்கு சதவீதம் % |
---|---|---|---|---|---|---|
2006 | சட்டமன்றத் தேர்தல் 2006 | பாஜக | இராதாபுரம் | 5ஆவது இடம் | 5,343 | 4.70% |
2011 | சட்டமன்றத் தேர்தல் 2011 | பாஜக | வேளச்சேரி | 4ஆவது இடம் | 7,040 | 4.63% |
மக்களவைத் தேர்தல்
ஆண்டு | தேர்தல் | கட்சி | தொகுதி | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்கு சதவீதம் % |
---|---|---|---|---|---|---|
2009 | 15வது மக்களவைத் தேர்தல் | பாஜக | வட சென்னை | 3ஆவது இடம் | 23,350 | 3.54% |
2019 | 17வது மக்களவைத் தேர்தல் | பாஜக | தூத்துக்குடி | 2வது இடம் | 2,15,934 | 21.8% |
பதவிகள்
தெலுங்கானா ஆளுநர்
2019-ஆம் ஆண்டு, தமிழிசை சௌந்தரராஜன் தெலங்காணாவின் முதல் பெண் ஆளுநராகவும் இரண்டாவது ஆளுநராகவும் பதவியேற்றார்.[10] இவர் ஆளுநர் பொறுப்பேற்றபோது, அனைத்து மாநில ஆளுநர்களிலும் இவரே வயதில் இளையவராகத் திகழ்ந்தார்.[11] ஏப்ரல் 2023 இல், தெலங்காணா அரசு 10 சட்டமுன்வடிவுகளைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஏழு மாதங்களான பிறகும், தமிழிசை தனது ஒப்புதலை வழங்கத் தவறியதற்காக சௌந்தரராஜனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதிப்பேராணை மனு தாக்கல் அரசு செய்தது.[12]
புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
தமிழிசை, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக 18 பிப்ரவரி 2021 அன்று கூடுதல் பொறுப்பேற்றார்.[13] சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தமிழிசையை இரகசிய காப்பு உறுதிமொழி ஏற்கச் செய்து ஆளுநர் பதவியேற்கச் செய்தார். ஆளுநர் பதவிகள் விலகல்
தமிழிசை, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக 2024 மார்ச் 18 அன்று தெலுங்கானா ஆளுநர் பதவியையும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியையும் துறந்தார்.[14] பாஜகவில் இணைந்து மீண்டும் முழுநேர தேர்தல் அரசியலுக்குத் திரும்பினார்.[15]
மேற்கோள்கள்
- ↑ "President Murmu accepts Tamilisai Soundararajan's resignation, Jharkhand Governor gets charge". 19 March 2024. https://www.aninews.in/news/national/general-news/president-murmu-accepts-tamilisai-soundararajans-resignation-jharkhand-governor-gets-charge20240319122511.
- ↑ https://www.ndtv.com/india-news/kiran-bedi-removed-as-puducherry-lieutenant-governor-amid-crisis-in-congress-government-2371971?pfrom=home-ndtv_topscroll
- ↑ "பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதிய பதவி!". தினமணி (15 செப்டம்பர் 2017)
- ↑ https://timesofindia.indiatimes.com/city/chennai/TN-BJP-chief-Thamilisai-Soundararajan-turns-55-vows-to-take-Bedi-govt-schemes-to-all-villages-in-state/articleshow/52558365.cms
- ↑ "ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் - தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்!". விகடன் (செப்டம்பர் 01, 2019)
- ↑ "புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு". விகடன் (பிப்ரவரி 16, 2021)
- ↑ https://web.archive.org/web/20131203041415/http://www.hindu.com/thehindu/holnus/004200904132112.htm
- ↑ "தமிழிசை சவுந்தரராஜன் மகன் திருமணம்: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து". (தி இந்து 18 பிப்ரவரி 2016)
- ↑ "தமிழிசை சௌந்தரராஜனுக்குப் புதிய பதவி வழங்கிய மத்திய அரசு!". விகடன் (16 செப்டம்பர் 2017)
- ↑ PTI (10 September 2019). "Telangana Governor Tamilisai Soundararajan is the youngest governor". www.thehindubusinessline.com (in ஆங்கிலம்). Retrieved 24 April 2022.
- ↑ "Tamilisai Soundararajan youngest governor Andhra's Harichandan oldest at 85". The Week (in ஆங்கிலம்). Retrieved 24 April 2022.
- ↑ "'Raj Bhavan nearer than Delhi': Telangana Governor as state moves Supreme Court". India Today (in ஆங்கிலம்). Retrieved 18 April 2023.
- ↑ "Tamilisai Soundararajan assumes office as Puducherry Lt governor". The New Indian Express. Retrieved 24 April 2022.
- ↑ The Hindu (18 March 2024). "Tamilisai, Telangana Governor and Puducherry Lt. Governor, resigns to contest Lok Sabha polls". https://www.thehindu.com/elections/lok-sabha/telangana-governor-dr-tamilisai-resigns-to-contest-lok-sabha-polls/article67963569.ece.
- ↑ "`ஆளுநர் பதவியைத் துறந்ததில், 1% கூட வருத்தமில்லை..!' - மீண்டும் பாஜக-வில் இணைந்தார் தமிழிசை". விகடன். 2024-03-20. Retrieved 2024-03-26.