மி டூ இயக்கம்
மி டூ இயக்கம் அல்லது நானும் பாதிக்கப்பட்டேன் (#MeToo movement) என்பது உலக அளவில், பணியிடங்களில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல்[1] மற்றும் பாலியல் தாக்குதல்களை [2][3][4][5] டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் வெளியுலகிற்கு அம்பலப்படுத்தும் முறையை நோக்கமாகக் கொண்ட இயக்கமாகும்.
மி டூ இயக்கத்தை அமெரிக்க நாட்டின் சமூக ஆர்வலரும், சமூக ஏற்பாட்டாளருமான தாரன புர்கே என்பவர் முதன்முதலில் 2006 இல் "Me Too" எனும் சொற்றொடர் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை சமூக ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தார்.[6] பின்னர் ஹாலிவுட் நடிகை அலிசா மிலனோ என்பவர் தனக்கு யார்யாரால் பாலியல் துன்புறுத்தல்கள் நேர்ந்தது என்பது குறித்து, டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தினார்.
மிலானோ மற்றும் மைக்கேல் பேக்கர் போன்றோர், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களை, டுவிட்டர் மூலம் தங்களுக்கு யாரால், எவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம் என்பதை வெளியிட ஊக்குவித்தனர். இதன் மூலம் "பிரச்சனையின் அளவை மக்கள் உணர்கிறார்கள்" என்றார்கள்.[7][8]
2017 ஆம் ஆண்டு மி டூ இயக்கத்த்தின் தாக்கத்தால், கிவ்வினெத் பேல்ட்ரோ[9] எனும் ஹாலிவுட் நடிகை, 1996இல் எம்மா எனும் திரைப்படத்தில் நடித்த போது, அதன் தயாரிப்பாளர் ஹர்வெய் வெய்ன்ஸ்டெய்ன் தனக்கு இழைத்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து டுவிட்டர் மூலம் தனது துயரங்களை மக்களிடம் வெளிப்படுத்தினார்.[10]
2017 இல் நடிகை அலிஸ்சா மிலனோ முதன்முதலில் டுவிட்டரில் #Me Too குறியிட்டு, நடிகர் ஹார்வி வெனிங்ஸ்டனால் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து செய்தி வெளியிட்டார்.
இந்தியாவில்
தொகு- முன்னாள் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா 27 செப்டம்பர் 2018 அன்று நடிகரும், இயக்குநருமான நானா படேகரால் பணியிடத்தில் தனக்கு முன்னர் ஏற்பட்ட பாலியியல் துன்புறுத்தல்கள் குறித்து, மி டூ இயக்கத்தின் உந்துதலால், டுவிட்டரில் வெளியிட்டார்.[11][12] இதன் மூலம் மி டூ இயக்கம் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமானது. இவ்வியக்கத்தால் பணியிடங்கள், ஊடகங்கள் மற்றும் அரசியலில் பணியாற்றிய பல பெண்கள், தங்களுக்கு முன்னர் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து டுவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டனர்.[13][14][15]
- நரேந்திர மோடியின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த மொபசர் ஜாவேத் அக்பர் மீது, ஊடகவியல் துறையில் பணியாற்றிய பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை #மி டூ மூலம் வெளியிட்டதன் மூலம்[16][17][18][19][20] 17 அக்டோபர் 2018 அன்று எம். ஜெ. அக்பர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[21][22]
தமிழ்நாட்டில்
தொகு2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்த போது திரைப்படக் கவிஞர் வைரமுத்து, தன்னை பாலியல் உறவுக்கு அடுத்தவர் மூலம் மறைமுகமாக அழைத்தாக திரைப்பட பாடகி சின்மயி அக்டோபர் 2018 ஆம் ஆண்டில் தனது டுவிட்டரில் குற்றம் சாட்டினார்.[23][24] சின்மயியின் இந்தக் குற்றசாட்டை வைரமுத்து காட்சி ஊடகங்கள் மூலம் மறுத்தார்.[25]
மி டூ இயக்கம் குறித்த பிணக்குகள்
தொகுமி டூ இயக்கம் மூலம், பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளைப் பதிவிடும்போது சமூக விழிப்புணர்வு ஏற்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களை அச்சுறுத்த அச்சப்படுவார்கள் என்பது உண்மை. அதேநேரத்தில் #மி டூ இயக்கம் மூலம், யாரும் யாரையும் எளிதில் பழி சுமத்திவிட முடியும் என்பதும் உண்மையே. குற்றம் சுமத்தப்படுபவர் தன்னை நிரூபிப்பதற்குள் அனைவரும் அதுபற்றி விவாதித்து அவரை அவமானப்படுத்தி முடித்துவிடுவார்கள்.
பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த, #வி டூ என்ற ஹேஸ்டேக் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் பிரபலமாகி வரும் அந்த ஹேஸ்டேக் மூலம், 1600 பேர் தங்களுக்கு பெண்களால் நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பதிவிட்டுள்ளனர்.[26]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ எது பாலியல் துன்புறுத்தல்? - விளக்கும் காணொளி
- ↑ The Silence Breakers
- ↑ Smartt, Nicole. "Sexual Harassment in the Workplace in A #MeToo World". Forbes. Archived from the original on January 16, 2018. பார்க்கப்பட்ட நாள் January 16, 2018.
- ↑ "TIME'S EDITOR-IN-CHIEF ON WHY THE SILENCE BREAKERS ARE THE PERSON OF THE YEAR".
- ↑ Carlsen, Audrey. "#MeToo Brought Down 201 Powerful Men. Nearly Half of Their Replacements are Women." (in en). https://www.nytimes.com/interactive/2018/10/23/us/metoo-replacements.html?nl=top-stories&nlid=72995439ries&ref=cta. பார்த்த நாள்: 23 October 2018.
- ↑ உலக அளவில் எதிரொலிக்கும் மீ டூ... அது என்ன மீ டூ?
- ↑ Khomami, Nadia (October 20, 2017). "#MeToo: how a hashtag became a rallying cry against sexual harassment". Archived from the original on November 21, 2017 – via The Guardian.
- ↑ Guerra, Cristela (October 17, 2017). "Where'd the "Me Too" initiative really come from? Activist Tarana Burke, long before hashtags – The Boston Globe". Boston Globe. Archived from the original on October 17, 2017. பார்க்கப்பட்ட நாள் October 18, 2017.
- ↑ "Celebrities Share Stories of Sexual Assault for #MeToo Campaign". Vogue. Archived from the original on December 29, 2017. பார்க்கப்பட்ட நாள் January 4, 2018.
- ↑ "Gwyneth Paltrow, Angelina Jolie and Others Say Weinstein Harassed Them".
- ↑ "India's #MeToo: Some of the sexual harassment charges that have surfaced this month".
- ↑ Fathima, Misbah (20 October 2018). "#METOO – CAUSE OR JUST ANOTHER BRICK IN MODERN-DAY FEMINISM". Laffaz Media.
- ↑ Goyal, Divya (September 27, 2018). "Nana Patekar Dismisses Tanushree Dutta's Allegations, Asks 'What Sexual Harassment?'". NDTV.com.
- ↑ Alluri, Aparna (9 October 2018). "#MeToo firestorm consumes Bollywood and media". BBC News.
- ↑ Ramachandran, Naman (11 October 2018). "Bollywood's Expanding #MeToo Movement Hits Productions". Variety.
- ↑ "#MeToo campaign: Six women speak up, accuse Minister M J Akbar of sexual harassment when he was Editor" (in en-US). The Indian Express. 2018-10-10. https://indianexpress.com/article/india/metoo-movement-six-women-speak-up-accuse-minister-mj-akbar-of-sexual-harassment-when-he-was-editor-5394625/.
- ↑ https://www.firstpost.com/politics/mj-akbar-must-resign-if-former-journalist-cant-explain-sexual-harassment-charges-says-congress-jaipal-reddy-5352051.html
- ↑ https://thewire.in/media/mj-akbar-sexual-harassment
- ↑ https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/mj-akbar-faces-metoo-heat-asked-to-cut-short-nigeria-visit-may-be-back-today/articleshow/66157559.cms
- ↑ https://www.financialexpress.com/india-news/metoo-sexual-harrassment-charges-against-mj-akbar-put-modi-government-in-a-spot-final-call-likely-soon/1345170/
- ↑ "MJ Akbar Resigns Over #Metoo Allegations". headlinestoday.org இம் மூலத்தில் இருந்து 17 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181017203218/https://headlinestoday.org/national/3793/mj-akbar-resigns-over-metoo-allegations/. பார்த்த நாள்: 17 October 2018.
- ↑ "central-minister-mj-akbar-resigns-over-sexual-harassment-charges". thenewsminute.com. https://www.thenewsminute.com/article/central-minister-mj-akbar-resigns-over-sexual-harassment-charges-90121. பார்த்த நாள்: 17 October 2018.
- ↑ #MeToo: Twitterati play caste card, question singer Chinmayi Sripaada’s claims against lyricist Vairamuthu
- ↑ Singer Chinmayi Sripaada Names Poet Vairamuthu In #MeToo Story
- ↑ #MeToo நான் நல்லவனா, கெட்டவனா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும் - வைரமுத்து
- ↑ மி டூ பெண்களுக்கு எதிராக களமிறங்கிய வி டூ ஆண்கள்[தொடர்பிழந்த இணைப்பு]