சின்மயி

இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர்

சின்மயி ஸ்ரீபதா (தெலுங்கு: చిన్మయి శ్రీపాద) (பிறப்பு: செப்டம்பர் 10, 1984) இந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ளார்.

சின்மயி ஸ்ரீபாத

2018இல் சின்மயி
பின்னணி விவரம்
பிறப்பு பெயர் சின்மயி ஸ்ரீபாத
பிறந்த தேதி செப்டம்பர் 10, 1984 (1984-09-10) (அகவை 40)
வகை கருநாடக இசை
தொழில்கள் பின்னணிப் பாடகி
வானொலித் தொகுப்பாளர்
மொழிபெயர்ப்பாளர்
வலைத்தளப் பயனர்
தொலைக்காட்சித் தொகுப்பாளர்
ஒலிச்சேர்க்கை
இசைத்துறையில் 2002-இன்றுவரை
இணையத்தளம் http://www.chinmayionline.com/

சின்மயி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சென்னையில் ஒளிபரப்பாகும் ஆஹா பண்பலையில் 'ஆஹா காப்பி க்ளப்' எனும் வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் திரைப்படத்தில் பின்னணிக் குரல் தருபவராகவும் இருக்கிறார். சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா சாவ்லாவிற்கு, உன்னாலே உன்னாலே படத்தில் தனிஷா முகெர்ஜிக்கு, சத்தம் போடாதே படத்தில் பத்மபிரியாவிற்கு, தாம் தூம் படத்தில் கங்கனா ரனாத்திற்கு, ஜெயம் கொண்டான் படத்தில் லேகா வாஷிங்டனிற்கு, சக்கரகட்டி படத்தில் வேதிகாவிற்கு மற்றும் வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டிக்கு என பல திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு இவர் பின்னணிக் குரல் தந்துள்ளார்,

ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில், மணிரத்னம் இயக்கத்தில், சிம்ரன் மற்றும் கீர்த்தனாவின் நடிப்பில் படத்தில் இடம்பெற்ற இவரது முதல் பாடல் வெற்றிப்பாடலாக அமைந்தது. சின்மயி, ஏ. ஆர். ரகுமானின் இசையமைப்பிலேயே நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். குரு படத்தின் தேரே பினா மற்றும் மையா மையா பாடல்களைப் பாடினார்.

சர்ச்சை

தொகு

சின்மயி டிவிட்டர், முகநூல், வலைப்பதிவு போன்ற சமூக ஊடகத் தளங்களில் இயங்குபவர். அங்கு இட ஒதுக்கீடு, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து கருத்து சொல்வதால் அவருக்குக் கடுமையான எதிர்வினைகள் வருவதாகப் பலரும் கூறுகின்றனர்.[1] "மீனவர்கள் மீன்களைக் கொல்வது பாவமாயில்லையா?" என்று அவர் டிவிட்டரில் சொன்னது மீனவர்களுக்கு எதிரானது என்று பலரால் கருதப்படுகிறது.[2] 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், உலகு தழுவிய #Metoo இயக்கத்தின் ஒரு பகுதியாக, சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் ஒன்றை எழுப்பினார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சி விழாவிற்காக சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார்.[3]

திருமணம்

தொகு

சின்மயி மே 06, 2014 அன்று நடிகர் ராகுல் ரவீந்திரனைத் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம், மணமக்கள் பரிசு பொருள் எதுவும் வாங்கவில்லை. அதற்கு பதில், லடாக்கில் உள்ள மலை சாதியினரின் பள்ளிக்கு கட்டிடம் கட்ட உதவும்படி கேட்டுக்கொண்டனர்.[4]

சின்மயி பாடிய பாடல்கள்

தொகு
ஆண்டு பாடல் திரைப்படம் இசையமைப்பாளர்
2002 ஒரு தெய்வம் தந்த பூவே கன்னத்தில் முத்தமிட்டால் ஏ.ஆர்.ரஹ்மான்
ஒரு தடவை சொல்வாயா வசீகரா எஸ். ஏ. ராஜ்குமார்
கிறுக்கா கிறுக்கா விசில் இமான்
உயிர் பிரிந்தாலும் சேனா
இதயமே நம்ம ஊரு
பூந்தேனா ஈரநிலம் சிற்பி
2003 மைனாவே மைனாவே தித்திக்குதே வித்யாசாகர்
பூ பூ பூங்குருவி தத்தி தாவுது மனசு தேவா
என்ன இது நள தமயந்தி ரமேஷ் விநாயகம்
பிளீஸ் சார் பாய்ஸ் ஏ.ஆர்.ரஹ்மான்
கண்ணா அன்பே உன் வசம் தினா
பிரிவெல்லாம் பிரிவல்ல சூரி தேவா
பூவே முதல் பூவே காதல் கிறுக்கன் தேவா
சந்திப்போமா எனக்கு 20 உனக்கு 18 ஏ.ஆர்.ரஹ்மான்
ஒரு நண்பன் இருந்தால் எனக்கு 20 உனக்கு 18 ஏ.ஆர்.ரஹ்மான்
என் உயிர் தோழியே கண்களால் கைது செய் ஏ.ஆர்.ரஹ்மான்
2004 புது காதல் காலமிது புதுகோட்டையிலிருந்து சரவணன் யுவன் சங்கர் ராஜா
என்னை தீண்டிவிட்டாய் குத்து ஸ்ரீகாந்த் தேவா
நீ தானே என் மேல ஜனனம் பரத்வாஜ்
இஃப் யு வோன கம் அலோங்க் நியூ ஏ.ஆர்.ரஹ்மான்
ஒப்பனக்கார வீதியிலே கிரி இமான்
எங்கு பிறந்தது விஷ்வ துளசி இளையராஜா - எம். எஸ். விஸ்வநாதன்
காதலிக்கும் ஆசையில்லை செல்லமே ஹாரிஸ் ஜெயராஜ்
2005 நூதனா கற்க கசடற பிரயோக்
சில் சில் அறிந்தும் அறியாமலும் யுவன் சங்கர் ராஜா
2006 காதல் நெருப்பின் வெயில் ஜி. வி. பிரகாஷ் குமார்
2007 சஹானா சிவாஜி ஏ.ஆர்.ரஹ்மான்
ஆருயிரே,மைய்யா குரு 2007 ஏ.ஆர்.ரஹ்மான்
2008 ஆவாரம் பூ பூ எஸ்.எஸ்.குமரன்
சின்னம்மா,ஐ மிஸ் யூ டா சக்கரகட்டி ஏ.ஆர்.ரஹ்மான்
2009 லேசா பறக்குது வெண்ணிலா கபடி குழு செல்வகணேஷ்
நிலா நீ வானம் பொக்கிஷம் சபேஷ்-முரளி
வாராயோ வாராயோ ஆதவன் ஹாரிஸ் ஜெயராஜ்
2010 பூவே பூவே சித்து +2 தமன்
கிளிமஞ்சாரோ எந்திரன் ஏ.ஆர்.ரஹ்மான்
அன்பில் அவன் விண்ணைத்தாண்டி வருவாயா ஏ.ஆர்.ரஹ்மான்
2014 இதயம் கோச்சடையான் ஏ.ஆர்.ரஹ்மான்
2015 என்னோடு நீ இருந்தால் ஏ.ஆர்.ரஹ்மான்
ரோஜா கடலே அனேகன் ஹாரிஸ் ஜெயராஜ்
இதயத்தை ஏதோ ஒன்று என்னை அறிந்தால் ஹாரிஸ் ஜெயராஜ்
நான் அவள் இல்லை மாஸ் யுவன் சங்கர் ராஜா
2016

2021

சைரட் ஜலோ ஜி சைராட் மராத்தி அஜய்-அதுல்
Neevevvaro Boyfriend For Hire Gopi Sunder

பின்னணி குரல் கொடுத்த படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் யாருக்கு பின்னணி குரல் கொடுத்தார் குறிப்பு
2006 சில்லுனு ஒரு காதல் பூமிகா சாவ்லா
2007 உன்னாலே உன்னாலே தனிஷா முகெர்ஜி
சத்தம் போடாதே பத்மபிரியா
2008 ஜெயம் கொண்டான் லேகா வாஷிங்டன்
தாம் தூம் கங்கனா ரனாத்
சக்கரகட்டி வேதிகா குமார்
வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி
2009 தநா-07 ஏஎள் 4777 மீனாட்சி
யாவரும் நலம் நீத்து சந்திரா
மோதி விளையாடு காஜல் அகர்வால்
கண்டேன் காதலை தமன்னா
2010 அசல் சமீரா ரெட்டி
ராக்தா சரித்ரா ராதிகா அப்தே
தீராத விளையாட்டுப் பிள்ளை நீத்து சந்திரா
விண்ணைத்தாண்டி வருவாயா திரிஷா கிருஷ்ணன்
ஏ மாயா சேசவா சமந்தா ருத் பிரபு
சுறா தமன்னா
மன்மத பாணம் - (தெலுங்கு) திரிஷா கிருஷ்ணன்
2011 கோ கார்த்திகா நாயர்
நடுநிசி நாய்கள் சமீரா ரெட்டி
வந்தான் வென்றான் டாப்ஸே பண்ணு
2012 வேட்டை சமீரா ரெட்டி
மாற்றான் காஜல் அகர்வால்
2014 லிங்கா சோனாக்சி சின்கா

மேற்கோள்கள்

தொகு
  1. "savukku.net". www.savukku.net. Retrieved 2025-06-10.
  2. "Twitter / MaruPurujothTha: இதுவும் ..." twitter.com (in ஆங்கிலம்). Retrieved 2025-06-10.
  3. "``வைரமுத்துவை ஏன் என் திருமணத்துக்கு அழைத்தேன்! - விளக்கிய சின்மயி".விகடன் (12 அக்டோபர், 2018)
  4. "நடிகரை மணந்தார் பின்னணிப் பாடகி சின்மயி!". விகடன் ( மே 06, 2014)

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சின்மயி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்மயி&oldid=4289494" இலிருந்து மீள்விக்கப்பட்டது