சண்டக்கோழி

லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சண்டக்கோழி (Sandakozhi) என்பது 2005 ஆம் ஆண்டில், வெளியான தமிழ்-மொழி மசாலாப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை விக்ரம் கிருஷ்ணா என்பவர், ஜி.கே பிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரிக்க, லிங்குசாமி என்பவர் எழுதி மற்றும் இயக்கியுள்ளார்.

சண்டக்கோழி
இயக்கம்லிங்குசாமி
தயாரிப்புஜி.கே பிலிம் கார்ப்பரேஷன்
கதைஎஸ். ராமகிருஷ்ணன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புவிஷால்
மீரா ஜாஸ்மின்
ராஜ்கிரண்
லால்
சுமன் செட்டி
தலைவாசல் விஜய்
கஞ்சா கறுப்பு
ஒளிப்பதிவுஜீவா
நீரவ் ஷா
விநியோகம்விக்ரம் கிருஷ்ணா
வெளியீடு16 திசம்பர் 2005
ஓட்டம்151 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படம் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால், சுமன் செட்டி, தலைவாசல் விஜய் மற்றும் கஞ்சா கறுப்பு ஆகியோர் நடிப்பில், 16 திசம்பர் 2005 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் 2005 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது.[1]

இப்படமானது 'பாண்டம் கோடி' என்ற பெயரில் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 19 மே 2006 அன்று வெளியிடப்பட்டது மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[2] அத்துடன் கன்னட மொழியில் 'வாயுபுத்ரா' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இதன் தொடர்சியாக 2018 இல் சண்டக்கோழி 2 படம் வெளியிடப்பட்டது.

கதை தொகு

பாலு (விஷால்) கல்லூரியில் படிக்கும் மாணவன் பரீட்சை நடைபெறுவதற்கு முந்தைய நாள் பதற்றநிலையிலிருக்கும் மாணவர்களைச் சமாதானப்படுத்தும் மாணவன். பின்னர் அவர்களினால் பாராட்டினையும் பெறுகின்றார் பாலு. பின்னர் தனது நண்பன் வேண்டுகோளுக்கிணைய அவனின் சொந்த ஊருக்குச் செல்லும் பாலு, அங்கு நண்பனின் தங்கையான ஹேமாவுடன் (மீரா ஜாஸ்மின்) காதல் கொள்கின்றார். மேலும் அவ்வூரில் காசி என்பவனான காடையர்களின் தலைவனைப் பற்றியும் அறிந்து கொள்ளும் பாலு அவனின் கூட்டாளிகளினால் ஒருவன் கொலை செய்யப்படுவதனையும் பார்க்கின்றான். பின்னர் பாலு தன் சொந்த ஊர் திரும்பும் வழியில் காசி ஒருவனை அரிவாளுடன் வெட்டுவதற்குத் துரத்துகின்றான் அச்சமயம் காசியைத் தடுத்து நிறுத்தும் பாலு, அவன் தான் காசி என்பதனை தெரிந்தபிறகு அவனைத் தாக்கவும் செய்கின்றான். பின்னர் தனது ஊரான மதுரையையும் வந்தடைகின்றான் பாலு.

பாலுவைப் பழிவாங்குவதற்காக அலைந்து திரியும் காசியும் மதுரையை வந்தடைகின்றான்.அங்கு மதுரையில் மிகப்பெரிய செல்வாக்குடைய துரையின் மகனே பாலு என்பதனையும் அறிந்து கொள்கின்றான் காசி. ஒன்றிரண்டு முறை கொல்ல முயற்சித்தும் தோல்வியடையும் காசியிடம், மதுரையில் பாலு குடும்பத்திற்கு எதிரான உறவினர் ஒருவர் தன் உதவியை வழங்குகின்றார். கோவில் திருவிழாவில் துரை தவறுதலாக வெட்டப்படவே, காசி அங்கு பாலுவைக் கொல்ல வந்திருப்பதனைத் தெரிந்து கொள்ளும் பாலுவின் தந்தையும் அவரின் காவலாளிகளும் அவ்வூர் மக்கள் பலரும் சேர்ந்து காசியின் குழுவைத் தேடுகின்றனர்.பின்னர் காசிக்கு அடைக்கலம் கொடுத்திருந்தவனை அறிந்து அவ்விடத்திற்கும் செல்கின்றனர்.அங்கு பாலுவுடன் நேருக்கு நேர் மோதும்படியும் காசிக்கு கூறினார் பாலுவின் தந்தையான துறை.பாலு காசியை வெல்கின்றானா என்பதே கதையின் முடிவு.

நடிகர்கள் தொகு

உற்பத்தி தொகு

இந்த படம் முதலில் விஜய் மற்றும் ஜோதிகாவுக்கு கதை சொல்லப்பட்டது, ஆனால் சில காரணங்களால் இருவரும் விலக, இருவருக்கும் பதிலாக விஷால் மற்றும் மீரா ஜாஸ்மின் தேர்வு செய்யப்பட்டனர்.[3] பின்னர் இருவரும் நடிப்பு, நடனம் என பல பயிற்சிகளை எடுத்துக்கொண்டு அந்த கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்தார்கள்.[4]

விஷால் மற்றும் லால் மோதும் சண்டைக் காட்சி திண்டுக்கல்லில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சென்னையில் உள்ள இடங்களில் பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளன. ராஜ்கிரணுக்கான அறிமுகப் பாடல் தேனியில் படமாக்கப்பட்டது.

ஒலிப்பதிவு தொகு

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மொத்தம் 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார், இயக்குநர் லிங்குசாமி மற்றும் விஷாலுடன் முதன்முறையாக இணைந்து பணியாற்றும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது, இதன் ஒலித்தட்டுகள் 25 நவம்பர் 2005 அன்று வெளியிடப்பட்டது.

தொடர்ச்சி தொகு

திசம்பர் 2015 இல், லிங்குசாமி மீண்டும் விஷாலை வைத்து சண்டக்கோழியின் தொடர்ச்சியை இயக்குவதாக அறிவித்தார், அது கைவிடப்பட்டது. இருப்பினும், இந்த திட்டம் 2017 இல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது, அதன் தொடர்ச்சியாக விஷால் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இப்படம் விஷால், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் 18 அக்டோபர் 2018, அன்று வெளியானது.[5]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டக்கோழி&oldid=3831198" இருந்து மீள்விக்கப்பட்டது