ராஜ்கிரண்
நடிகர்
ராஜ்கிரண் (பிறப்பு: ஆகஸ்ட் 26, 1954) இந்தியத் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். இவருடைய இயற்பெயர் காதர் என்பதாகும். திரையுலகில் இவருடைய ராஜ்கிரண் என்ற பெயரே மிகப் பிரபலமானது. தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்தவர்.
ராஜ்கிரண் | |
---|---|
பிறப்பு | ஆகத்து 26, 1954 கீழக்கரை, இராமநாதபுரம் மாவட்டம் |
பணி | திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1991-தற்போது |
திரை வாழ்க்கை
தொகுஇவர் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர் இவரே.[1]
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
தொகு- என்னைப்பெத்த ராசா
- என் ராசாவின் மனசிலே
- அரண்மனைக் கிளி
- வேங்கை
- முனி
- கிரீடம்
- பாண்டவர்பூமி
- நந்தா
- சண்டக்கோழி
- திருத்தணி
- கிரீடம்
திரைப்பட விபரம்
தொகுநடித்த திரைப்படங்கள்
தொகுஇது இவர் நடித்துள்ள திரைப்படங்களின் பட்டியலாகும். இது முழுமையான பட்டியல் அல்ல.
ஆண்டு | திரைப்படம் | மொழி | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1989 | என்ன பெத்த ராசா | தமிழ் | ஜானி | நடிகராக அறிமுகம் |
1991 | என் ராசாவின் மனசிலே | தமிழ் | மாயாண்டி | கதாநாயகனாக அறிமுகம் |
1993 | அரண்மனைக்கிளி | தமிழ் | ராசையா | |
1995 | எல்லாமே என் ராசாதான் | தமிழ் | சிங்கரசு | |
1996 | மாணிக்கம் | தமிழ் | ||
1997 | பாசமுள்ள பாண்டியரே | தமிழ் | பாண்டியன் | |
1998 | பொண்ணு விளையிற பூமி | தமிழ் | பழனிச்சாமி | |
1998 | தலைமுறை | தமிழ் | பாண்டித் துரை | |
1998 | வீரத்தாலாட்டு | தமிழ் | ||
2001 | நந்தா | தமிழ் | பெரியவர் | சிறந்த துணை நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது |
2001 | பாண்டவர் பூமி | தமிழ் | தனசேகரன் | சிறந்த துணை நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது |
2003 | கொஞ்சி பேசலாம் | தமிழ் | முத்துப்பாண்டி | |
2004 | ஜெய் | தமிழ் | நல்லமுத்து | |
2004 | கோவில் | தமிழ் | பெரியசாமி | |
2005 | சண்டக்கோழி | தமிழ் | துரை | சிறந்த துணை நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது |
2005 | செவ்வேல் | தமிழ் | சுடலை | |
2005 | தவமாய் தவமிருந்து | தமிழ் | முத்தையா | சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் |
2007 | கிரீடம் | தமிழ் | ராஜராஜன் | |
2007 | முனி | தமிழ் | முனியாண்டி | |
2007 | தொட்டால் பூ மலரும் | தமிழ் | வரதராசன் | |
2011 | காவலன் | தமிழ் | முத்துராமலிங்கம் | |
2011 | பொன்னர் சங்கர் | தமிழ் | ராக்கி அண்ணன் | |
2011 | வேங்கை | தமிழ் | வீரபாண்டி | |
2012 | திருத்தணி | தமிழ் | துரைபாண்டி | |
2014 | மஞ்சப்பை | தமிழ் | வெங்கடசாமி | |
2015 | கொம்பன் | தமிழ் | முத்தையா | |
2015 | சிவப்பு | தமிழ் | முன் தயாரிப்பு | |
2016 | "ரஜினி முருகன்" | தமிழ் | அய்யங்காளை | |
2017 | "ப. பாண்டி" | தமிழ் | பாண்டி | |
2018 | சண்டக்கோழி 2 |
தமிழ் || அய்யா |
சண்டக்கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் |
இயக்கிய மற்றும் தயாரித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | பங்காற்றியது | மொழி | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|---|
இயக்குநர் | கதையாசிரியர் | தயாரிப்பாளர் | ||||
1988 | ராசாவே உன்னெ நம்பி | தமிழ் | ||||
1989 | என்ன பெத்த ராசா | தமிழ் | ||||
1991 | என் ராசாவின் மனசிலே | தமிழ் | ||||
1993 | அரண்மனைக்கிளி | தமிழ் | ||||
1995 | எல்லாமே என் ராசாதான் | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-10. பார்க்கப்பட்ட நாள் 2015-07-29.