கீழக்கரை
கீழக்கரை (ஆங்கிலம்:Kilakarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.[4][5][6] கீழக்கரை நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
கீழக்கரை | |||||||
— இரண்டாம் நிலை நகராட்சி — | |||||||
ஆள்கூறு | 9°14′N 78°47′E / 9.23°N 78.78°E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | இராமநாதபுரம் | ||||||
வட்டம் | கீழக்கரை வட்டம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சி தலைவர் | |||||||
மக்கள் தொகை | 38,355 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 7,448 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 38,355 ஆகும். அதில் 19,685 ஆண்களும், 18,670பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 93.3% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 948 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4391 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 992 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,086 மற்றும் 0 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 17.6%, இசுலாமியர்கள் 79.92%, கிறித்தவர்கள் 1.16% மற்றும் பிறர் 1.32% ஆகவுள்ளனர்.[7]
அமைவிடம்
தொகுகீழக்கரை வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கடற்கரைப்பட்டினமாகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்து உள்ளது. இக்கடற்கரைப்பட்டினத்திற்கு நேரெதிராக அப்பா தீவும், தென் மேற்கே பாலைய முனைத் தீவும், ஆனைத்தீவும், நல்லதண்ணீர்த் தீவு, சுள்ளித் தீவு, உப்புத் தண்ணீர்த் தீவுகளும், தென்கிழக்கே, தளரித் தீவும், முல்லைத் தீவும் அமைந்துள்ளன. கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரையுள்ள பகுதிகளில், பார்கள் (பாறைகள்) சூழ்ந்து உள்ளது. இப்பகுதியில் பார்களுக்குள்ளே ஒரிடத்தில் மட்டும் சுமார் 150 பாகம் (fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிப் பாதை அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும்.
அந்த இடைவெளிப் பாதையைக் காட்டும் வகையில் இரண்டு கம்பங்கள் (Beacons) அமைக்கபட்டுள்ளன. கீழக்கரைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவுவாயிலாக அமைந்துள்ளது. கீழக்கரைத் துறைமுகத்தின் முக்கியச் சிறப்பம்சம் இங்கு வந்து நங்கூரமிடும் கப்பல்களெல்லாம் பெருங்காற்றிற்கும், பேரலைகளுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளாமலிருக்க இங்கு அமைத்துள்ள தீவுகளும் கடலோரத்தில் அமைந்துள்ள பார்களுமே இயற்கையரணாக அமைந்துள்ளன.
இது உப்புத் தண்ணீர்த் தீவுக்கு அருகாமையிலும், நல்லதண்ணீர்த் தீவுக்கும், ஆனைத்தீவுக்கும் இடையிலேயும் முத்துச்சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-06-01.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. Retrieved 2013-06-01.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-06-01.
- ↑ கீழக்கரை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்