ராசாவே உன்னெ நம்பி

1988 திரைப்படம்

ராசாவே உன்னெ நம்பி (Raasave Unnai Nambi) என்பது 1988ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். டி. கே. போஸ் இயக்கிய இப்படத்தை ராஜ்கிரண் தயாரித்துள்ளார். இப்படத்தில் ராமராஜன், ரேகா, பூர்ணம் விஸ்வநாதன், சரிதா ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1][2]

ராசாவே உன்னெ நம்பி
இயக்கம்டி. கே. போஸ்
தயாரிப்புராஜ்கிரண்
கதைசிராஜ்
திரைக்கதைசிராஜ்
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன்
ரேகா
பூர்ணம் விஸ்வநாதன்
சரிதா
ஒளிப்பதிவுபி. கணேசபாண்டியன்
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்ரெட் சன் ஆர்ட் கிரியேஷன்ஸ்
விநியோகம்ரெட் சன் ஆர்ட் கிரியேஷன்ஸ்
வெளியீடுஏப்ரல் 15, 1988 (1988-04-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்த படம் 100 நாட்கள் ஓடியது.[3]

மாலதி ( சரிதா ) ஒரு சிறிய ஊரில் பணிபுரிய வந்த ஒரு புதிய ஆசிரியை. அவர் பள்ளியின் மற்றொரு ஆசிரியரான இராஜா (ராமராஜன்) என்பவருக்கு சொந்தமான வீட்டில் தங்கி உள்ளார். இராஜாவின் அண்ணன் ஒரு இராணுவ அதிகாரி, எல்லோரும் அவரை பட்டாளத்தான் ( ராதா ரவி ) என்று அழைக்கிறார்கள். அவர் ஊரில் நன்கு மதிக்கப்படுபவர், ஒழுக்கக்கேடான எந்த செயலையும் கண்டிப்பவர். ஊரில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவரான வாசு ( மலேசியா வாசுதேவன் ) மீது பட்டாளத்தான் வெறுப்பு கொண்டுள்ளான். வாசுவின் தங்கை ரஞ்சித ( ரேகா ) இராஜாவுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வருகிறாள். இருவரும் காதலிக்கிறார்கள், ஆனால் இவர்களின் அண்ணன்களின் மோதல்களால் ஏற்பட்ட தவறான புரிதல்களால் பிரிந்துவிடுகின்றனர். இராஜா மாலதிக்கும், பட்டாளத்தனுக்கும் திருமணம் செய்விக்க ஏற்பாடு செய்கிறான், இருவரும் ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். சிறுவயதில் ஓடிப்போன ரஞ்சிதாவின் மற்றொரு சகோதரர் அருணாசலம் (இளவரசன்), பட்டாளத்தன் மீண்டும் பணிக்கு சென்ற சமயத்தில் ஊருக்குத் திரும்புகிறார். அருணாச்சலம் ஊருக்கு வருவதற்கு முன்பே அவனை மாலதி அறிந்திருந்தாள், அவர்களின் முந்தைய உறவு குடும்பத்திற்குள் பிரச்சினைகளை உண்டாக்குகிறது. மாலதி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. பட்டாளத்தான் ஊருக்குத் திரும்பும்போது குடும்பதிற்குள்ளான பிரச்சனைகள் ஒரு முக்கியமான கட்டத்தை அடைகின்றன.

நடிகர்கள்

தொகு

ஒலிப்பதிவு

தொகு

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4]

எண். பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் நீளம் (நி:நொ)
1 "காலை நேர ராகமே" சித்ரா கங்கை அமரன் 04: 09
2 "ராசாத்தி மனசுல" பி. சுசீலா, மனோ இளையராஜா 05: 10
3 "ராசாத்தி மனசுல" (சோகம்) பி. சுசீலா 05:13
3 "கம்மா கரையோரம்" மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா கங்கை அமரன் 04:22
5 "மயிலாட்டம் பாத்துப்புட்டு" மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் 04:35
6 "சீதைக்கொரு" மனோ 04:48

வரவேற்பு

தொகு

இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதிய விமர்சனத்தில் "கண்கவர் கிராமப்புறக் காட்சிகள், இளையராஜாவின் இசையும், பாடல்களும் படத்தின் நடையும், அதன் விதமும் அம்மன் கோயில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்களை உங்களுக்கு நினைவூட்டும். கதையானது பல தசாப்தம் பழையது " என்றது.[5] 1989 சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளில் சிறந்த பெண் பின்னணி பாடகியாக இப்பட்டத்தில் பாடிய சுசீலா தேர்ந்தெடுக்கபட்டார்.[6]

குறிப்புகள்

தொகு

 

  1. "Rasave Unnai Nambi". entertainment.oneindia.in. Archived from the original on 2021-07-09. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  2. "Rasave Unnai Nambi". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  3. Shankar (2017-08-22). "இராமராஜன்... இனி யார்க்கும் அமையாத அருமைகளின் சொந்தக்காரர்!". tamil.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
  4. "Raasave Unnai Nambi Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  5. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880408&printsec=frontpage&hl=en
  6. "Cinema Express readers choose Agni Nakshathiram". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19890311&printsec=frontpage. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசாவே_உன்னெ_நம்பி&oldid=3671307" இலிருந்து மீள்விக்கப்பட்டது