ராதாரவி

இந்திய நடிகர்

ராதாரவி ஒரு தமிழ் நாட்டு நடிகரும், பா.ஜ.க அரசியல்வாதியும் ஆவார். இவருடைய தந்தை பிரபல தமிழ் நடிகர் எம். ஆர். ராதா ஆவார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் பதவில் இருக்கிறார். 2002-2006 காலகட்டத்தில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். சிறிது காலம் அதிமுகவிலிருந்து விலகியிருந்த அவர் 2010ல் மீண்டும் அக்கட்சியில் இணைந்தார்[2].

ராதாரவி
Radha Ravi at Jil Jung Juk Press Meet.jpg
ராதாரவி 2016ஆம் ஆண்டு ௭டுத்த புகைப்படம்
பிறப்புமெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் ரவி
29 சூலை 1952 (1952-07-29) (அகவை 70)[1]
திருச்சிராப்பள்ளி, மெட்ராஸ் மாகாணம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்புதுக்கல்லூரி, சென்னை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1976 – நடப்பு
உயரம்1.68m
அரசியல் கட்சிபா.ஜ.க
பெற்றோர்எம். ஆர். ராதா
தனலட்சுமியம்மாள்
உறவினர்கள்வாசு விக்ரம் (nephew), எம். ஆர். ஆர். வாசு (தம்பி)
ரதிகலா (தங்கை),
ராதிகா (half-sister),
நிரோசா (half-sister),
ராஜூ ராதா (half-brother),
மோகன் ராதா (half-brother)
ராதாரவி
சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2006
முன்னவர் வி. பெருமாள்
பின்வந்தவர் ஜி. செந்தமிழன்
தொகுதி சைதாப்பேட்டை

வாழ்க்கை குறிப்புதொகு

ஜூலை 30ம் தேதி எம்.ஆர்.ராதாவுக்கும் தனலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இவருக்கு எம். ஆர். ஆர். வாசு என்ற சகோதரனும், ரசியா, ராணி, ரதிகலா என்று மூன்று சகோதரிகளும் உள்ளனர். இவருடைய தந்தையின் இன்னொரு மனைவியான கீதா ராதாவிற்கு பிறந்தவர்கள் நிரோஷா, ராதிகா ஆவார்கள். தன் வாழ்க்கைப் பயணத்தினை நாடக நடிகராக தொடங்கினார். ஒன்பதாம் வகுப்பில் ஜூலியஸ் சீசராக நடித்தார். கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து நாடகத்தில் நடித்தார்.

மேலும் வி. கே. ராமசாமி, எம்.ஆர்.ஆர்.வாசு, டி.கே.சந்திரன் மற்றும் யுஏஏ போன்றவர்களின் நாடகங்களில் நடித்தார். 1980ல் தனியாக ஒரு நாடக கம்பேனியை தொடங்கினார். ரகசிய ராத்திரி எனும் கன்னட படத்தின் மூலம் தன்னுடைய திரைவாழ்க்கையை தொடங்கினார். கமலின் அறிமுகத்தினால் கே.பாலச்சந்தரின் மன்மதலீலை படத்தில் தோன்றினார். மன்மதலீலை படமே ராதாரவிக்கு முதல் தமிழ் திரைப்படமாக அமைந்தது.

டி. ராஜேந்தரரின் உயிருள்ளவரை உஷா என்ற படத்தில் முதன்முதலாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். வைதேகி காத்திருந்தாள் , உயர்ந்த உள்ளம் , சின்னத் தம்பி , பூவெளி , உழைப்பாளி, குரு சிஷ்யன் என தமிழ் திரையுலகில் பல வேடங்களில் தன் நடிப்பினை வெளிபடுத்தினார். வீரன் வேலுத்தம்பி என்ற படத்தில் நாயகனாகவும் நடித்தார்.

ராதிகாவின் தயாரிப்பான செல்லமே எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்திருந்தார்.

ராதாரவி நடித்துள்ள திரைப்படங்கள்தொகு

  1. மன்மதலீலை
  2. வீட்டுக்காரி
  3. காதல் ஓவியம்
  4. உயிருள்ளவரை உஷா
  5. சிவப்பு சூரியன்
  6. சூரக்கோட்டை சிங்கக்குட்டி
  7. பொய்கால் குதிரை
  8. இரு மேதைகள்
  9. மதுரை சூரன்
  10. அண்ணாமலை
  11. வீரன் வேலுத்தம்பி
  12. சின்ன முத்து
  13. அமரன்
  14. மருது
  15. பூமகள் ஊர்வலம்
  16. என்றென்றும் காதல்

தொலைக்காட்சியில்தொகு

  1. செல்லமே
  2. அன்பே வா

நடித்துக்கொண்டிருக்கும் படங்கள்தொகு

  1. கடமை கண்ணியம் கட்டுப்பாடு
  2. சுரல
  3. சேது சமுத்திரம் [3]
  4. நல்வரவு

மேற்கோள்கள்தொகு

  1. Profile of Actor Radha Ravi – Tamil Movie Data Base of. Tamilstar.com (29 July 1952). Retrieved on 30 December 2016.
  2. இராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.indiaglitz.com/channels/tamil/article/59778.html

மேலும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதாரவி&oldid=3643727" இருந்து மீள்விக்கப்பட்டது