உழைப்பாளி (திரைப்படம்)

பி. வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உழைப்பாளி (Uzhaippali) 1993 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் பி. வாசு இயக்கிய இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த், ராதாரவி, ரோஜா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

உழைப்பாளி
இயக்கம்பி. வாசு
தயாரிப்புபி. வெங்கட்ராம ரெட்டி
கதைபி. வாசு
இசை
நடிப்புரஜினிகாந்த்
ரோஜா செல்வமணி
ராதாரவி
எஸ். எஸ். சந்திரன்
நிழல்கள் ரவி
விஜயகுமார்
ஒளிப்பதிவுஎம். சி. சேகர்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
கலையகம்விஜயா புரொடக்சன்ஸ்
விநியோகம்சந்தமாமா விஜயா ஒருங்கிணைந்த வினியோகம்
வெளியீடு24 சூன் 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விநியோகஸ்தர்கள் சங்கம் ரஜினியின் திரைப்படங்களை வெளியிட தடை விதித்ததால் விநியோகஸ்தர்கள் யாருமே இந்த படத்தை வாங்க முன்வரவில்லை. எனவே படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினை காரணமாக கமல்ஹாசனை சந்தித்த ரஜினி, அதற்கு அடுத்த நாள் உழைப்பாளி திரைப்படம் விநியோகஸ்தர்கள் ஆதரவு இல்லாமல் திரையரங்குகளில் நேராக வெளியிடப்படும் என அறிவித்தார். விநியோகஸ்தர்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் 100 க்கும் மேற்பட்ட நாட்கள் திரையரங்கில் தொடர்ந்து வெற்றியாக ஓடி சாதனை படைத்தது.[1][2]

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இது, விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தயாரித்த திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்புக்காக சிக்மகளூர் சென்றபோது, ரஜினிக்கு ஓட்டலில் தங்குவதற்கு அறை கிடைக்காததால் அவர் தனது காருக்குள்ளேயே படுத்து தூங்கினார்.[3]

பாடல்கள்

தொகு
உழைப்பாளி
பாடல்கள்
வெளியீடு1993
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா
இளையராஜா காலவரிசை
'எஜமான்
(1993)
உழைப்பாளி 'வள்ளி
(1993)

இப்படத்தின் பாடல்களுக்கு இளையராஜாவும், பின்னணி இசையை அவரது இரண்டாவது மகனான கார்த்திக் ராஜாவும் இசையமைத்திருந்தனர். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "முத்திரை எப்போது "  எஸ். பி. பாலசுப்பிரமணியம், கவிதா கிருஷ்ணமூர்த்தி  
2. "ஒரு கோலக் கிளி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
3. "ஒரு மைனா"  மனோ, சித்ரா  
4. "உழைப்பாளி இல்லாத"  மனோ  
5. "உழைப்பாளியும் நானே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா  
6. "அம்மா அம்மா (ஆண்)"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
7. "அம்மா அம்மா (பெண்)"  சுனந்தா  

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உழைப்பாளி_(திரைப்படம்)&oldid=4146410" இலிருந்து மீள்விக்கப்பட்டது