இந்திரஜா

இந்திய நடிகை

இராஜாத்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இந்திரஜா என்ற திரைப் பெயரைக் கொண்டவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்பட்டுள்ளார். இவர் ஒரு சில தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். [2] [3]

இந்திரஜா
பிறப்புஇராஜாத்தி[1]
30, சூன் 1978
சென்னை
பணி
செயற்பாட்டுக்
காலம்
1993 – 2007
2014 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
முகமது அப்சர்
பிள்ளைகள்1

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இந்திராஜாவின் உண்மையான பெயர் இராஜத்தி என்பதாகும். இவர் தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு கருநாடக இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் மூன்று சகோதரிகளில் மூத்தவர், மற்ற இருவர் பாரதி மற்றும் சோபா என்பவர்களாவர். பள்ளி நாட்களில், இவர் பாடல் மற்றும் நாடக போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். பயிற்சிபெற்ற பாரம்பரிய இசைப் பாடகரும், நடனக் கலைஞரான இவர் குச்சிப்புடி நடன வடிவத்தை மாதவபெட்டி மூர்த்தியிடம் கற்றுக்கொண்டார்.[2] இவர் ஒரு பத்திரிகையாளராக ஆகவேண்டுமென்று தயாராகி கொண்டிருந்தார்.[4] [5] இவர் தக்க திமி தா போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தொழில் தொகு

ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி படத்தில் இந்திரஜா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். வளர்ந்த பிறகு இவர் நடித்த முதல் திரைப்படமான ஜந்தர் மந்தர், படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயரான 'இந்திரஜா' என்பதையே தன் திரைப் பெயராக ஏற்றுக்கொண்டார். பின்னர், எஸ். வி. கிருஷ்ண ரெட்டியின் யமலீலா இவரை உடனடி நட்சத்திரமாக மாற்றியது. இப்படம் ஓராண்டு கடந்தும் ஓடியது. [2] இவர் தடயம் மற்றும் ராஜாவின் பார்வையிலே ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் வெற்றிப் படங்களாக அமையாததால் தமிழ்த் திரைப்படங்களில் மேலும் முன்னேற முடியவில்லை.

இவர் பல வெற்றிகரமான மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவற்றில் 1999 ஆண்டில் மோகன்லாலடன் இண்ந்து நடித்த அதிரடி நாடகப் படமான உஸ்த்த், 2002 ஆண்டில் சுரேஷ் கோபியுடன் இணைந்து திகில் குற்றவியல் திரைப்படமான எப்.ஐ.ஆர், 2002 ஆண்டில் மம்மூட்டியுடன் இணைந்து நகைச்சுவை-நாடகப்படமான குரோனிக் பேச்சிலர், 2004 ஆண்டில் ஜெயராமுக்கு ஜோடியாக நகைச்சுவை நாடகப்படமான மயிலாட்டம், 2005 ஆண்டில் கலாபவன் மணியுடன் இணைந்து நடித்த பென் ஜான்சன் போன்றவை குறிப்பிடத்தக்க படங்களாகும். திருமணத்திற்கு பிறகு ஒரு இடைவெளிக்குப் பிறகு, பல தெலுங்கு திரைப்படங்களில் சில குறிப்பிடத்தக்க பாத்திரங்களை ஏற்று இவர் திரையுலகத்துக்குத் திரும்பியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இந்திரஜா 7 செப்டம்பர் 2005 அன்று நடிகர் முகமது அப்சரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். [6]

திரைப்படவியல் தொகு

படங்கள் தொகு

ஆண்டு பெயர் பாத்திரம் மொழி(கள்) குறிப்பு
1993 உழைப்பாளி இளம் ஸ்ரீவித்யா தமிழ்
1993 புருஷ லட்சணம் திரைப்பட நடிகை தமிழ்
1994 ஹலோ பிரதர் அவராகவே தெலுங்கு "கன்னிபிட்டா ரோ" பாடலில் சிறப்புத் தோற்றம்
1994 ஜந்தர் மந்தர் இந்திரஜா தெலுங்கு
1994 யலீலா லில்லி தெலுங்கு
1994 அமைதிப்படை தாயம்மாளின் தோழி தமிழ்
1995 சோகாசு சூதா தரமா நீலு (நீலிமா தேவி) தெலுங்கு
1995 அம்மா தொங்கா மோகனா / கல்யாணி தெலுங்கு
1995 ராஜாவின் பார்வையிலே கௌரி தமிழ்
1995 பலராஜு பங்காரு பெல்லாம் நாகமணி தெலுங்கு
1995 ஆஸ்தி மூரேடு ஆசா பாரேடு மருத்துவர் தெலுங்கு
1995 வாடு பாவா தப்பு Priya தெலுங்கு
1995 சர்வர் சுந்தராம்கரி அபாய் தெலுங்கு
1995 எர்ரோடு சீதலு தெலுங்கு
1995 லவ் கேம் இந்து தெலுங்கு
1995 வஜ்ரம் - தெலுங்கு
1995 சுபமஸ்து சரோஜா தெலுங்கு
1995 ம்மி மீ அயனோச்சாடு சாரதா தெலுங்கு
1996 சம்பதாயம் கீதா தெலுங்கு
1996 பிட்டலா டோரா நிக்கி தெலுங்கு
1996 ஒன்ஸ்மோர் கல்யாணி தெலுங்கு
1996 ல்ல பூசலு ரேவதி தெலுங்கு
1996 ஜகதீக வீரடு லப்பூ தெலுங்கு
1996 பொப்புலி புலி ரதனி தெலுங்கு
1997 தடயம் தேவி தெலுங்கு, தமிழ்
1997 ஒக்க சின்ன மாட்டா கீதா தெலுங்கு
1997 ஜெய் பஜரங்கபளி ரம்யா தெலுங்கு
1997 இல்லாலு தெலுங்கு
1997 சிலக்கட்டுட்டு இந்திரஜா தெலுங்கு
1997 பெத்தனய்யா ஸ்ரவானி தெலுங்கு
1997 சின்னப்பாயி லலிதா தெலுங்கு கௌரவத் தோற்றம்
1998 வேலை சாருலதா தமிழ்
1998 கலவாரி செல்லேலு கனக மகா லட்சுமி - தெலுங்கு
1998 கடிபிடி கிருஷ்ணா - கன்னடம்
1999 தி குட்மேன் மும்தாஸ் மலையாளம்
1999 சூரிய புத்திரிகா தெலுங்கு
1999 இண்டிபெண்டன்ஸ் சிந்து மலையாளம்
1999 எப்.ஐ.ஆர் லலிதா மலையாளம்
1999 பிச்சோடி செட்டிலோ ராய் தெலுங்கு
1999 சின்னி சின்னி ஆசா ஆசா தெலுங்கு
1999 தெலங்கானா தெலுங்கு
1999 உஸ்தாத் க்ஷாமா மலையாளம்
1999 கூலி ராஜா சுமா கன்னடம்
1999 ப்ரத்யார்த்தா கன்னடம்
1999 அவளே நன்ன ஹுடுகி கன்னடம்
1999 தி கில்லர் சீத்தா கன்னடம்
2000 சமக்கா சரக்கா - தெலுங்கு
2000 முந்தைத்தே ஊரு ஹப்பா கன்னடம்
2000 சுந்தர புருஷா கதாநாயகி இர்வாசி கன்னடம்
2000 கடகா காயத்திரி கன்னடம்
2000 ஸ்ரதா சுதா மலையாளம்
2001 உன்னதங்கலைல் ஹேமா மலையாளம்
2002 கிருஷ்ணா கோபாலகிருஷ்ணா பாமா மலையாளம்
2003 செர்ரி அருந்ததி மலையாளம்
2003 அச்சந்தே கொச்சுமோல் டெய்சி மலையாளம்
2003 கிரோனிக் பேச்சுலர் பவானி ராஜசேகரன் மலையாளம்
2003 வார் அன்ட் லவ் கேப்டன் ஹேமா வர்மா மலையாளம்
2003 ரிலாஸ் சித்ரா மலையாளம்
2004 தலமேளம் அம்முகுட்டி மலையாளம்
2004 அக்னிநட்சத்திரம் அம்மு மலையாளம்
2004 எங்கள் அண்ணா பவானி தமிழ்
2004 மயிலாட்டம் மீனாட்சி மலையாளம்
2005 லோகநாதன் ஐஏஎஸ் மலையாளம்
2005 பென் ஜான்சன் கௌரி மலையாளம்
2006 ஹைவே போலிஸ் (2006 திரைப்படம்) ரஞ்சனி மலையாளம்
2006 நரகாசூரன் நீனா விஸ்வநாதன் மலையாளம்
2007 இந்திரஜித் சாகினா மலையாளம்
2014 திக்குலு சூடக்கு ராமையா பவானி தெலுங்கு
2015 பதுகு மருத்துவர் தீதா ரெட்டி தெலுங்கு
2015 லயன் சிபிஐ துணைத் தலைவர் இந்திராணி தெலுங்கு
2017 சதமானம் பவதி ஜான்சி தெலுங்கு
2017 சமந்தகமணி பானுமதி தெலுங்கு
2018 அக்னயதவாசி கிருஷ்ணவேணி பார்கவ் தெலுங்கு
2018 ஹேப்பி வெட்டிங் நீரஜா தெலுங்கு
2019 சாப்ட்வேர் சுதீர் சந்துவின் தாய் தெலுங்கு
TBA 12சி பாஷா பாய் மலையாளம் படப்பிடிப்பில்

தொலைக்காட்சி தொகு

நிகழ்ச்சி மொழி இலைவரிசை குறிப்புகள்
சுந்தரகாண்டா தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி
அசோகவனம் தமிழ் புதுயுகம் தொலைக்காட்சி, பாலிமர் தொலைக்காட்சி சுந்தரகாண்டாவின் மொழிமாற்றுப் பதிப்பு
பாசம் சன் தொலைக்காட்சி
ஆண் பாவம்
பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள் சிறப்புத் தோற்றம்
வள்ளி கதாபாத்திரம்-மதுமிதா சுப்பு

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரஜா&oldid=3763377" இருந்து மீள்விக்கப்பட்டது