மோகன்லால்
மோகன்லால் என்று பரவலாக அறியப்படும் மோகன்லால் விஸ்வநாதன் (Mohanlal Viswanathan) (பிறப்பு 21 மே 1960), ஓர் இந்திய நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட விநியோகர் மற்றும் இயக்குநர் ஆவார், இவர் பெரும்பாலும் மலையாள, கன்னட சினிமாத் துறையில் பணிபுரிகிறார்.[3][4][5] மோகன்லால் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணிக் கதாநாயகராகத் திகழ்கிறார்.மேலும், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் .[6][7] மலையாள சினிமாவில் மோகன்லாலின் பங்களிப்புகளை இந்தியத் திரையுலகில் உள்ள சமகாலத்தவர்கள் பாராட்டியுள்ளனர்.[8][9][10] இந்திய அரசு இந்திய சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இவருக்கு இந்தியாவின் மூன்றாவது மற்றும் நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ 2001இலும் [11] 2019 இல் பத்ம பூசண்,[12] விருதும் வழங்கி கௌரவித்தது. 2009 ஆம் ஆண்டில், மாநிலப் பாதுக்காப்புப் படையில் துணைநிலை ஆளுநர் என்ற கௌரவப் பதவியைப் பெற்ற இந்தியாவின் முதல் நடிகர் ஆனார்.[13][14]
மோகன்லால் | |
---|---|
"ரன் கேரளா ரன்" 2015இல் நடைபெற்ற நிகழ்வில் லால் | |
பிறப்பு | மோகன்லால் விஸ்வநாதன்[1][2] 21 மே 1960 எலந்தூர், பத்தனம்திட்டா, கேரளம், இந்தியா |
மற்ற பெயர்கள் | லாலேட்டன், ஏட்டன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மகாத்மா காந்தி கல்லூரி |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1978–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | சுசித்ரா மோகன்லால் (தி. 1988) |
பிள்ளைகள் | 2,பிரணவ் மோகன்லால் உட்பட |
உறவினர்கள் | கே. பாலாஜி (மாமனார்) சுரேஷ் பாலாஜி (மைத்துனன்) |
விருதுகள் | See accolades |
புகழ்ப்பட்டம் | பத்மசிறீ (2001) துணைநிலை ஆளுநர் (கௌரவப் பதவி) (2009) பத்ம பூசண் (2019) |
வலைத்தளம் | |
www |
மோகன்லால் தனது 18வது வயதில் 1978 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான திரனோட்டம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார், ஆனால் தணிக்கைச் சிக்கல்களால் படம் 25 ஆண்டுகள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. 1980 ஆம் ஆண்டு காதல் திரைப்படமான மஞ்சில் விரிஞ்சா பூக்கள் திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் எதிரிக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[15][16] தொடர்ந்து எதிரிக் கதாப்பத்திரங்களில் நடித்த பின்னர் அடுத்த இரு ஆண்டுகளில் துணை நடிகராக நடித்தார்.1986 இல் பல வெற்றிகரமான படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகராக ஆனார்.அந்த ஆண்டு வெளியான ராஜாவிண்டே மகன் என்ற திரைப்படம் இவரை முன்னணி நடிகராக ஆக்கியது.[15] மோகன்லால் மலையாளப் படங்களில் மட்டுமல்லாது சில இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் அரசியல் திரைப்படமான இருவர் (1997),கம்பெனி (2002) எனும் இந்தித் திரைப்படம் மற்றும் தெலுங்குத் திரைப்படமான ஜனதா கேரேஜ் (2016) ஆகியவை இதில் குறிப்பிடத்தகுந்தன ஆகும்.[6][6]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுமோகன்லால் விஸ்வநாதன் 1960 மே 21 அன்று கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள எலந்தூர் கிராமத்தில் பிறந்தார். இவர் கேரள அரசின் முன்னாள் அதிகாரியும், சட்டச் செயலாளருமான விஸ்வநாதன் நாயர் மற்றும் சாந்தகுமாரி ஆகியோரின் இளைய பிள்ளை ஆவார்.[17][18] இவருக்கு பியாரேலால் என்ற மூத்த சகோதரர் இருந்தார் (இராணுவப் பயிற்சியின் போது 2000 இல் இறந்தார்).[19] மோகன்லாலுக்கு இவரது தாய்வழி மாமா கோபிநாதன் நாயர் பெயரிட்டார், அவர் முதலில் "மோகன்லால்" என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ரோஷன்லால் என்று பெயரிட முடிவு செய்தார். இருப்பினும், அவரது தந்தை மோகன்லாலுக்கு அவர்களின் குடும்பப் பெயரைக் கொடுப்பதைத் தவிர்த்தார். அவர்கள் அனைவருக்கும் குடும்பப்பெயராக இருக்கும் அவர்களின் சாதிப் பெயரை ( நாயர் ) வைக்கக் கூடாது என்பதில் அவரது தந்தை உறுதியாக இருந்தார்.[20] மோகன்லால் முடவன்முகில் திருவனந்தபுரத்தில் உள்ள தனது தந்தைவழி வீட்டில் வளர்ந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த பின்னர், திருவனந்தபுரம் மகாத்மா காந்தி கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[21][22] மோகன்லால் கம்ப்யூட்டர் பாய் என்ற மேடை நாடகத்தில் ஆறாம் வகுப்பு மாணவராக இருந்த போது முதன்முதலாக நடித்தார். அதில் தொண்ணூறு வயது முதியவராக நடித்தார்.[23]
1977 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் கேரள மாநில மல்யுத்த வாகையாளராக இருந்தார்.[24]
திரை வாழ்க்கை
தொகுஆரம்பகாலங்களில்
தொகுமோகன்லால் மற்றும் அவரது நண்பர்களான, மணியன்பிள்ளை ராஜு, சுரேஷ் குமார், உன்னி, பிரியதர்சன், இரவிக்குமார் மற்றும் இன்னும் சிலரால் தயாரிக்கப்பட்ட தீரனோட்டம் திரைப்படத்தின் மூலம் 1978 ஆம் ஆண்டில் மோகன்லால் நடிகராக அறிமுகமானார். குட்டப்பன் என்ற மனநலம் குன்றிய வேலைக்காரனாக மோகன்லால் நடித்தார். தணிக்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகவில்லை. படம் வெளியாக 25 வருடங்கள் ஆனது.[25]
சான்றுகள்
தொகு- ↑ President of India (22 March 2019). "President Kovind presents Padma Bhushan to Mohanlal". யூடியூப். இந்தியக் குடியரசுத் தலைவர். பார்க்கப்பட்ட நாள் 29 September 2022.
- ↑ Web desk (25 August 2020). "തനിക്ക് ജാതിവാൽ ഇല്ലാത്തതിന് കാരണം പറഞ്ഞ് മോഹൻലാൽ" (in ml). மாத்யமம். https://www.madhyamam.com/entertainment/movie-news/actor-mohanlal-reveals-the-secret-of-his-name-558738.
- ↑ Kumar, P. k Ajith (21 May 2020). "On Mohanlal's 60th birthday, remembering 10 of his finest performances" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 12 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200612102647/https://www.thehindu.com/entertainment/movies/on-mohanlals-60th-birthday-remembering-10-of-his-finest-performances/article31638507.ece.
- ↑ Kumar, P. k Ajith (20 May 2020). "Mohanlal at 60: An actor par excellence" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 19 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200619123905/https://www.thehindu.com/entertainment/movies/mohanlal-at-60-an-actor-par-excellence/article31633617.ece.
- ↑ Desk, India com Entertainment (21 May 2020). "Happy Birthday, Mohanlal: 11 Lesser-Known And Interesting Facts About The Top Malayalam Star". India News, Breaking News, Entertainment News | India.com (in ஆங்கிலம்). Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 28 August 2020.
- ↑ 6.0 6.1 6.2 .
- ↑ "'The complete actor' is not just a sobriquet, but Mohanlal's legacy" (in en). The Indian Express. 2022-05-21. https://indianexpress.com/article/entertainment/malayalam/the-complete-actor-is-not-just-a-sobriquet-but-mohanlal-legacy-7926705/.
- ↑ "Mohanlal is India's pride, Kerala's treasure: Vijay to Dhanush, best quotes by Tamil actors on the Malayalam superstar. Rajinikanth, Suriya and more..." The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
- ↑ "Mohanlal is the greatest actor we have in our country: Suriya on his 'Kaappaan' co-star". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2 July 2021.
- ↑ "My admiration increases: Amitabh Bachchan after watching the trailer of Mohanlal's Marakkar - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 July 2021.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Mohanlal conferred with Padma Bhushan". The New Indian Express. 25 January 2019. Archived from the original on 26 January 2019. பார்க்கப்பட்ட நாள் 25 January 2019.
- ↑ "Malayalam superstar Mohanlal joins Territorial Army". Hindustan Times (in ஆங்கிலம்). 9 July 2009. பார்க்கப்பட்ட நாள் 25 July 2021.
- ↑ "Mohanlal enters Territorial Army training unit". The New Indian Express. Archived from the original on 25 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 25 July 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 15.0 15.1 Warrier, Shobha. "25 years, 25 landmarks". Rediff.com. Archived from the original on 21 July 2020. பார்க்கப்பட்ட நாள் 21 July 2020.
- ↑ "I have nothing to prove in Bollywood: Mohanlal". டெக்கன் ஹெரால்டு. Press Trust of India. 17 April 2012 இம் மூலத்தில் இருந்து 13 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170113014138/http://www.deccanherald.com/content/242650/i-have-nothing-prove-bollywood.html.
- ↑ Mohanlal Birth Place பரணிடப்பட்டது 25 ஏப்பிரல் 2017 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ NDTV Food Desk (21 May 2017). "Happy Birthday Mohanlal: The South Indian Superstar's Health Mantra". என்டிடிவி இம் மூலத்தில் இருந்து 23 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171223142407/https://food.ndtv.com/health/mohanlal-diet-and-fitness-1694810.
- ↑ Lalettan – The most versatile and iconic figure in Indian cinema பரணிடப்பட்டது 3 செப்டெம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ The Cue. "'ആദ്യം നല്കാന് ഉദ്ദേശിച്ച പേര് റോഷന് ലാല്, പേരിനൊപ്പം ജാതി വേണ്ടെന്നത് അച്ഛന്റെ തീരുമാനം'; മോഹന്ലാല്" (in மலையாளம்). The Cue. பார்க்கப்பட்ட நாள் 29 September 2022.
- ↑ Entertainment, Art &. "Mohanlal Biography". LIFESTYLE LOUNGE. iloveindia.com. Archived from the original on 21 October 2014. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
- ↑ .com, Mohanlalonline. "LAL'S BIOGRAPHY". Mohanlalonline.com. Archived from the original on 5 January 2015. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
- ↑ "Kerala / Thiruvananthapuram News : Centenary celebrations of Model School inaugurated". தி இந்து (Chennai, India). 25 May 2009 இம் மூலத்தில் இருந்து 30 மே 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090530061910/http://www.hindu.com/2009/05/25/stories/2009052558020300.htm.
- ↑ Prakash, Asha (25 October 2012). "After SRK, Mohanlal to get a Taekwondo blackbelt". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 4 February 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160204084353/http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/After-SRK-Mohanlal-to-get-a-Taekwondo-blackbelt/articleshow/16940066.cms.
- ↑ "I have nothing to prove in Bollywood: Mohanlal". டெக்கன் ஹெரால்டு. Press Trust of India. 17 April 2012. http://www.deccanherald.com/content/242650/i-have-nothing-prove-bollywood.html.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Mohanlal
- மோகன்லால் ஃபார் யு - வலைப்பதிவு பரணிடப்பட்டது 2015-02-03 at the வந்தவழி இயந்திரம்
- மோகன்லால் அவர்களின் அதிகாரபூர்வமான வலைப்பதிவு பரணிடப்பட்டது 2010-02-10 at the வந்தவழி இயந்திரம்
- மோகன்லால் அவர்களுடன் நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்பு பரணிடப்பட்டது 2016-03-19 at the வந்தவழி இயந்திரம்
- கேரள அரசின் அதிகாரபூர்வமான தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் வலைத்தளம். பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்