பிரணவ் மோகன்லால்

இந்திய நடிகர்

பிரணவ் மோகன்லால் (Pranav Mohanlal) (பிறப்பு: 1990 சூலை 13) இவர் ஓர் இந்திய நடிகரும், பாடகரும் மற்றும் பாடலாசிரியரும் ஆவார். இவர் மலையாளத் திரையுலகில் பணியாற்றுகிறார். நடிகர் மோகன்லாலின் மகனான இவர் தனது தந்தையின் ஒன்னமான் (2002) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு குழந்தையாக நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் புனர்ஜனி என்ற படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக சிறந்த குழந்தைக் கலைஞருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். பின்னர் தனது படிப்பில் கவனம் செலுத்துவதற்காக நடிப்பிலிருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்தார். அதன்பிறகு திரைப்படங்களிலிருந்து விலகியிருந்தார். நடிப்பிற்குத் திரும்புவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் .

திரைப்படங்களில்

தொகு

2015 ஆம் ஆண்டில் ஜீது ஜோசப்பிடம் உதவி இயக்குநராக சேர்ந்த பிரணவ், பாபநாசம் மற்றும் லைஃப் ஆஃப் ஜோசூட்டி ஆகிய இரண்டு படங்களில் பணியாற்றினார். ஜீது இயக்கிய 2018 ஆம் ஆண்டு திரைப்படமான ஆதி திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் தோன்றினார். இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மலையாளப் படங்களில் ஒன்றாக இருந்தது. இந்த பாத்திரத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான "சிமா விருதை" வென்றார். "ஜிப்சி பெண்கள்" என்ற பாடலை எழுதி, பாடி, நிகழ்த்தியதன் மூலம் பாடகர்-பாடலாசிரியராக அறிமுகமானார்.

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பிரணவ் 1990 சூலை 13 அன்று [1] இந்தியாவின் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் சுசித்ரா ஆகியோரின் மகனாகப் பிறந்தார். இவருக்கு விஸ்மயா மோகன்லால் என்ற தங்கை உள்ளார். தமிழகத் திரைப்படத்துறையின் தயாரிப்பாளர் கே. பாலாஜி மற்றும் சுரேஷ் பாலாஜி ஆகியோர் இவருக்கு உறவினர் ஆவர். பிரணவ் தனது பள்ளிப்படிப்பை தமிழ்நாட்டின் ஊட்டியில் உள்ள ஒரு உறைவிடப் பள்ளியான எப்ரான் பள்ளியில் முடித்தார்.[2] ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[3] இவர் பொதுவெளியிலுருந்து விலகியே இருக்கிறார்.[4][5] ஊடகங்களிலிருந்து விலகியே இருக்கிறார். இதைப்பற்றி கேட்டபோது "நான் ஊடகத்தை வெறுக்கவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொள்வதிலிருந்து மக்களுக்கு எதுவும் நன்மை கிடைக்கவில்லை என்று நான் நம்புகிறேன்".[6]

குறிப்பு

தொகு
  1. Chandran, Cynthia (5 July 2017). "Suspense, is thy name Pranav?". தி டெக்கன் குரோனிக்கள். http://www.deccanchronicle.com/entertainment/mollywood/050717/suspense-is-thy-name-pranav.html. பார்த்த நாள்: 15 July 2017. 
  2. Mohanlal, Pranav (30 September 2016). "സ്കൂൾ കഴിഞ്ഞ് പ്രണവ് 'മുങ്ങിയത്' എങ്ങോട്ട്?". Mathrubhumi இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200216175128/https://www.mathrubhumi.com/travel/celebrity-travel/pranavmohanlal-travel-himalaya-malayalam-news-1.1392611. பார்த்த நாள்: 16 February 2020. 
  3. V. P., Nicy (1 September 2014). "Pranav Mohanlal Turns Assistant Director in Kamal Haasan's 'Papanasam'". International Business Times. https://www.ibtimes.co.in/pranav-mohanlal-turns-assistant-director-kamal-haasans-papanasam-608033. பார்த்த நாள்: 16 February 2020. 
  4. Warrier, Unni K. (12 July 2017). "Walking the parenting tightrope like a real superstar". மலையாள மனோரமா. https://english.manoramaonline.com/entertainment/interview/2017/07/12/mohanlal-about-pranav-malayalam-movie-aadhi.html. பார்த்த நாள்: 16 February 2020. 
  5. Prakash, Asha (8 July 2017). "Mohanlal opens up about Pranav". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/mohanlal-opens-up-about-pranav/articleshow/59504198.cms. பார்த்த நாள்: 16 February 2020. 
  6. Flix Mollywood (8 September 2017). "Is Pranav Mohanlal media shy?". தி நியூஸ் மினிட். https://www.thenewsminute.com/article/pranav-mohanlal-media-shy-68122. பார்த்த நாள்: 16 February 2020. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரணவ்_மோகன்லால்&oldid=4181361" இலிருந்து மீள்விக்கப்பட்டது