பத்தனம்திட்டா மாவட்டம்

கேரளத்தில் உள்ள மாவட்டம்

பத்தனம்திட்டா மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்றாகும். இம்மாவட்டம் 1982ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் நாள் உருவாக்கப்பட்டது. பத்தனம்திட்டா இதன் தலைநகரம்.

பத்தனம்திட்டா
—  மாவட்டம்  —
பத்தனம்திட்டா
இருப்பிடம்: பத்தனம்திட்டா

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 9°16′N 76°47′E / 9.27°N 76.78°E / 9.27; 76.78
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் பத்தனம்திட்டா
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி பத்தனம்திட்டா
மக்கள் தொகை

அடர்த்தி

12,34,016 (2001)

574/km2 (1,487/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-

பத்தனம்திட்டா ஒரு நிலஞ்சூழ் மாவட்டம். இது கேரளத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள் இதன் வடக்கிலும் ஆலப்புழா மாவட்டம் மேற்கிலும் கொல்லம் மாவட்டம் தெற்கிலும் தமிழ் நாடு கிழக்கிலும் இதன் எல்லைகளாகும்.

இம்மாவட்டத்திலுள்ள குறிப்பிடத்தக்க ஊர்களாவன: பத்தனம்திட்டா, திருவல்லா, சபரிமலை, பந்தளம், அடூர். மாவட்டத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி காடுகளாகும். வேளாண்மையே இம்மாவட்டத்தின் முதன்மைத் தொழில். தென்னை, இரப்பர், தேயிலை, நெல், மிளகு போன்றவை மிகுதியாகப் பயிர்செய்யப்படுகின்றன.

பத்தனம்திட்டா இந்தியாவிலேயே போலியோ இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுள் முதல் மாவட்டமாகும்.

ஆட்சிப் பிரிவுகள்

தொகு

இந்த மாவட்டத்தை ரான்னி, கோழஞ்சேரி, அடூர், திருவல்லை, மல்லப்பள்ளி, கோன்னி ஆகிய வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2] பறக்கோடு, பந்தளம், குளநடை, இலந்தூர், கோன்னி, மல்லப்பள்ளி, ரான்னி, கோயிப்புறம், புளிக்கிழ் ஆகிய மண்டலங்களைக் கொண்டது.

சட்டமன்றத் தொகுதிகள்:[2]
மக்களவைத் தொகுதிகள்:[2]

வைணவத் திருத்தலங்கள்

தொகு

108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு வைணவத் திருத்தலங்கள் இம்மாவட்டத்தில் உள்ளது. அவைகள்:

சான்றுகள்

தொகு
  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தனம்திட்டா_மாவட்டம்&oldid=3632822" இலிருந்து மீள்விக்கப்பட்டது