இடுக்கி மாவட்டம்

இடுக்கி மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் தலைமையகம் பைனாவு நகரத்தில் உள்ளது. இடுக்கி மாவட்டமே கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம். இது கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாகும். தேவிகுளம், பெருமேடு (பீர்மேடு) வட்டங்களில் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே. இதன் பெரும்பாலான பகுதி (ஏறத்தாழ 97%) காடுகளும் மலைகளுமே.

இடுக்கி
மாவட்டம்
Sunrise at Munnar,Kerala.jpg
AnaimudiPeak DSC 4834.jpg
Periyar National Park 02.jpg
Mattupetty Dam reservoir, near Munnar, Kerala.jpg
Idukki013.jpg
Munnar Top station.jpg
மேலிருந்து கடிகார திசையில்:
மூணாறில் சூரிய உதயம் , பெரியாற்றுத் தேசியப் பூங்கா , இடுக்கி அணை , ஏலக்காய் மலையில் உள்ள தேயிலை தோட்டம் , மாட்டுப்பட்டி அணை மற்றும் ஆனைமுடி சிகரம்
இடுக்கி
இடுக்கி
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்
Government of Kerala Logo.svg
கேரளம்
பகுதிதெற்கு கேரளா
தலைமை இடம்பைனாவு
வட்டங்கள்
அரசு
 • மாவட்ட ஆட்சியர்ஸ்ரீமதி. ஷீபா ஜார்ஜ் , இ.ஆ.ப
 • காவல்துறை கண்காணிப்பாளர்ஸ்ரீ. வி.யு.குரியகோஸ் , இ.காப
பரப்பளவு[1]
 • மொத்தம்4,358 km2 (1,683 sq mi)
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம்11,08,974
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
இணையதளம்idukki.nic.in/en/

சுற்றுலாதொகு

இடுக்கி அணை, தேக்கடி, மூணாறு முதலியன இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தகுந்த சுற்றுலாப் பகுதிகள். இம்மாவட்டத்தில் சின்னாறு புரவலர்க்காடு, இரவிக்குளம் புரவலர்க்காடு முதலிய பாதுகாக்கப்பட்ட இடங்கள் உள்ளன.

குறிப்பிடத்தக்க இடங்கள்தொகு

கட்டப்பனை, குமுளி, மூணாறு, பைனாவு, தேக்கடி, பெருமேடு(பீர்மேடு), தேவிகுளம் முதலியன இம்மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க ஊர்களாகும். பெரியாறு பாயும் இடுக்கி மாவட்டத்திலேயே முல்லைப்பெரியாறு அணையும் உள்ளது.

 
மூணாறு தேயிலைத்தோட்டங்கள்

வரலாறுதொகு

இடுக்கி மாவட்டத்தின் தொன்மையான வரலாறு தெளிவாக அறியப்படவில்லை. இன்றைய இடுக்கி மாவட்டம் முன்னாளில் சேர நாட்டையும் கொங்கு நாட்டையும் சேர்ந்த பகுதியாக இருந்தது. கி.பி 800-1100 காலப்பகுதியில் தேவிகுளம், உடும்பஞ்சோளா, பீர்மேடு போன்றவை அடங்கிய உயர் மலைத்தொடர் பகுதிகள் வேம்பொளி நாட்டின் பட்குதியாக இருந்தன. 16 ஆவது நூற்றாண்டில் இடுக்கியின் பெரும்பகுதி பூஞ்சார் இராசா அவர்களின் ஆட்சிக்குகீழ் வந்தது.

இடுக்கியின் அண்மைக்கால வரலாறு, ஐரோப்பிய காப்பி-தேயிலைத் தோட்டப் பயிர்த்தொழில் முதலாளிகளின் செயற்பாடுகளில் இருந்து தொடங்குகின்றது. 1877 இல் பூஞ்சார் இராசா கேரள வர்மா கண்ணன் தேவன் மலைகளில் 590 சதுர கி.மீ (227 சதுர மைல்) இடத்தை சான் டேனியல் மன்ரோ (John Danial Manroe) என்னும் பிரித்தானிய தோட்டத் தொழில் முதலாளிக்கு குத்தகைக்கு விட்டார். அக்காலப் பகுதியில் இவ்விடம் அடர்ந்த காடுகளாக இருந்தது. சான் மன்ரோ வட திரிவிதாங்கூர் நிலத் தோட்டம் பயிர்த்தொழில் குமுகம் ஒன்றை நிறுவினார். இக் குமுகத்தின் உறுப்பினர்கள் உயர்நிலப்பகுதிகளில் பல தோட்டங்கள் நிறுவினர், சாலைகள் அமைத்தனர், போக்கு வரத்து வசதிகள் செய்தனர். இதன் பயனாய் வீடுகள் அமைப்பதும் விளைபொருள்களை எடுத்துச்செல்வதும் எளிதாயிற்று.

ஆட்சிப் பிரிவுகள்தொகு

 
சட்டப் பேரவையின் தொகுதிகள்
 
மக்களவை தொகுதிகள்

இது ஐந்து வட்டங்களைக் கொண்டுள்ளது.[3]

இந்த மாவட்டத்தில் தொடுபுழை மட்டுமே நகராட்சியாகும். இங்கு 8 மண்டல ஊராட்சிகளும், 51 ஊராட்சிகளும் உள்ளன.

சட்டமன்றம் மற்றும் மக்களவை தொகுதிகள்:

# சட்டப் பேரவையின் தொகுதிகள்[3] ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது # மக்களவை தொகுதிகள்[3] ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது
88 தேவிகுளம் சட்டமன்றத் தொகுதி SC 13 இடுக்கி

மக்களவைத் தொகுதி

எதுவுமில்லை
89 உடும்பன்சோலைசட்டமன்றத் தொகுதி எதுவுமில்லை
90 தொடுபுழை சட்டமன்றத் தொகுதி
91 இடுக்கி சட்டமன்றத் தொகுதி
92 பீர்மேடு சட்டமன்றத் தொகுதி

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. https://idukki.nic.in/en/
  2. https://idukki.nic.in/en/demography/
  3. 3.0 3.1 3.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-16 அன்று பார்க்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுக்கி_மாவட்டம்&oldid=3543433" இருந்து மீள்விக்கப்பட்டது