எர்ணாகுளம்
எர்ணாக்குளம் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். எர்ணாகுளம் மாவட்டத்தின் ஒரு பகுதியான இது கொச்சி பெருநகர்ப் பகுதியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. எர்ணாக்குளம் என்ற பெயர் சிவபெருமான் பெயரான எர்ணாக்குளத்து அப்பன் என்ற பெயரில் இருந்து வந்ததாக அறியலாம். வர்த்தகத் தலைநகராக விளங்கும் எர்ணாக்குளத்தில் தான் கேரள மாநிலத்தின் உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது.