பெரியாற்றுத் தேசியப் பூங்கா
பெரியாறு தேசியப்பூங்கா கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்கா இடுக்கி மாவட்டம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் பரவியுள்ளது. இப்பகுதியின் பரப்பளவு 777 சதுர கிலோமீட்டர்கள். இதில் 350 ச.கி.மீ பெரியாறு வனவிலங்குக் காப்பகமாக (புலிகள் காப்பகம்) அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவானது தேக்கடி என்றும் அழைக்கப்படுகிறது.
பெரியாறு தேசியப்பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
பெரியாறு ஏரி | |
அமைவிடம் | இடுக்கி மாவட்டம், இந்தியா |
அருகாமை நகரம் | கொச்சி, இந்தியா |
பரப்பளவு | 305 கிமீ² |
நிறுவப்பட்டது | 1982 |
வருகையாளர்கள் | 180,000 (in 1986) |
உயிரின வளம்
தொகுஇப்பகுதியில் 62 வகையான பாலூட்டிகளும் 320 வகையான பறவைகளும் 38 வகையான மீனினங்களும் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.