பந்தளம் (Pandalam, പന്തളം) என்பது கேரளத்தில் பத்தனம்திட்டா ‎மாவட்டம், அடூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்தியாவில் உள்ள ‎கேரளத்தில், மிகவும் விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ‎பந்தளம் ஒன்றாகும். அது ஒரு புனிதமான ஊராக மக்களால் ‎கருதப்படுகிறது. மத்திய திருவிதாங்கூரில் நிலை கொண்ட ‎பந்தளம், கல்வி மற்றும் உடல் நல மையங்களுக்குப் பெயர் ‎போனதாகும். தரம் வாய்ந்த பள்ளிக்கூடங்கள் மற்றும் பட்டப் ‎படிப்பு, மேற்படிப்பு, பயிற்சி, ஆயுர்வேதம், பொறியியல் கல்லூரிகள் ‎போன்ற அனைத்து கல்வி நிலையங்களும் நிறுவனங்களும் இங்கு ‎அமையப்பெற்றுள்ளன.

பந்தளம்
—  town  —
பந்தளம்
இருப்பிடம்: பந்தளம்

, கேரளா , இந்தியா

அமைவிடம் 9°19′N 76°44′E / 9.32°N 76.73°E / 9.32; 76.73
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் பத்தனம்திட்டா
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி பந்தளம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

தலபுராணம்

தொகு

தலபுராணத்தின் படி, சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ‎இறைவனான சுவாமி ஐயப்பன் மண்ணுலகத்தில் பந்தள ‎மகாராஜாவின் மகனாக தற்காலிகமாக வாழ்ந்து வந்தார். இதன் ‎காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வரும் காலங்களில், ‎பந்தளத்தில், பந்தள மகாராஜாவின் அரண்மனைக்கு அருகே ‎குடிகொண்டிருக்கும் வலியகோயிக்கல் ஆலயத்திற்கு பெரும் ‎அளவில் வருகை தந்து, அங்கே இருக்கும் இறைவனை ‎பக்தியுடன் தொழுகின்றனர். இந்த ஆலயமானது அச்சன்கோவில் ‎ஆற்றோரத்தில் குடிகொண்டுள்ளது. மகரவிளக்கு திருவிழா ‎நடைபெறுவதற்கு மூன்று நாள் இருக்கும் பொழுது, சுவாமி ‎அய்யப்பனுக்கு சொந்தமான புனிதமான ஆபரணங்களை ‎‎(திருவாபரணம் என்று அறியப்படுவது) பந்தளத்தில் இருந்து ‎சபரிமலைக்கு கொண்டு செல்லும் வழக்கம் இன்றும் இருந்து ‎வருகிறது. ‎

பந்தளத்தில் காணப்படும் இதர புண்ணிய தலங்களானவை:

  • ‎மகாதேவர் கோவில், குறம்பல புத்தன்கவி பகவதி கோவில், ‎தொன்னல்லூர் பட்டுப்புறக்காவு பகவதி கோவில், கைப்புழா ஸ்ரீ ‎கிருஷ்ண சுவாமி கோவில், பூழிக்காடு ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில், ‎கடக்காடு மாயாயக்ஷிக்காவு ஸ்ரீ கிருஷ்னர் கோவில், பல ‎நூற்றாண்டுகள் பழமையான கடக்காட்டு ஜுமா மஸ்ஜித், ‎தும்பாமொன் பாரம்பரிய தேவாலயம் மற்றும் குறம்பலையில் ‎உள்ள செயின்ட் தோமாஸ் புனித தேவாலயம். ‎

வரலாறு

தொகு

தமிழ் நாட்டை ஆண்டு வந்த பாண்டிய மன்னர்களில் சிலர் போரில் ‎தோல்வி அடைந்ததால் ஊரை விட்டு ஓடிவந்ததாகவும், இங்கே ‎இருந்த நில உரிமையாளர்களில் ஒருவரான கைப்புழா தம்பனிடம் ‎இருந்து இங்கு நிலம் வாங்கியதாகவும், ஐதீகங்கள் கூறுகின்றன. ‎மேற்கு மலைத்தொடர்களின் இரண்டு பக்கங்களிலும் இருந்த ‎ராஜ்ஜியங்கள் பாண்டிய அரசரின் ஆட்சியில் இருந்துவந்தது. ‎பந்தளத்தின் மகாராஜா மார்த்தாண்ட வர்மா என்ற அரசன் ‎காயம்குளம் இராஜ்ஜியத்தை கைப்பற்ற உதவினார். இந்த ‎உதவிக்கு கைமாறாக, மார்த்தாண்ட வர்மா தனது ‎சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திய பொழுது, பந்தளத்தின் மீது ‎படையெடுத்து அதையும் தன சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்க ‎விரும்பவில்லை. ஒரு காலகட்டத்தில் பந்தள மகாராஜாவின் ‎தர்பார் இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா என்ற இடம் வரை ‎பரந்து விரிந்திருந்தது. 1820 ஆண்டில் பந்தளம் திருவிதாங்கூறுடன் ‎இணைக்கப்பட்டது. ‎

வணிகம் மற்றும் வர்த்தகம் ‎

தொகு

மத்திய திருவிதாங்கூறில் காணப்படும் குருந்தோட்டயம் சந்தை, பல ‎நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்துவந்தது, (தற்பொழுது ‎பந்தளம் சந்தை என அறியப்படுவது) வேளாண் பொருட்களுக்கான ‎மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற சந்தையாகும். 1990 ஆண்டுகளின் ‎இறுதிவரை இந்த பட்டிணத்தின் நடுவில் செயல்பட்டுவந்த இந்த ‎சந்தை, ஆட்பெருக்கம் காரணமாக மற்றும் மேலும் வசதிகள் ‎வழங்குவதற்காக, பந்தளம் மற்றும் மாவேலிக்கரையை ‎இணைக்கும் சாலையில் அமைந்த ஒரு விரிவான இடத்திற்கு, ‎நாளடைவில் மாற்றப்பட்டது. பந்தளம் இப்பொழுது, போதிய ‎வசதிகளுடன், நாட்டிலுள்ள இதர அனைத்து நகரங்களுடன் ‎நன்றாக இணைக்கப்பட்ட, மிக முக்கியமான மற்றும் ‎நவீனமயமாக்கப்பட்ட முதன்மை நகரமாகும்.‎

அரசியல்

தொகு

பந்தளம் ஒரு பஞ்சயத்து மற்றும் ஒரு சட்டப் பேரவைத் ‎தொகுதியாகும். இந்த பஞ்சாயத்து ஒரு முறை ‎முனிசிபாலிட்டியாக மாற்றப்பட்டது பின்னர் திரும்பவும் ‎பஞ்சாயத்தாக மாற்றப்பட்டது. பத்தனம்திட்ட மாவட்டம் ‎துவங்குவதற்கு முன்பு, பந்தளம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ‎மாவேலிக்கரை வட்டத்தை சார்ந்து இருந்து வந்தது. கேரளத்தில் ‎அமைந்துள்ள அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் இங்கே ‎பந்தளத்தில் வலுவாக செயல்பட்டு வருகின்றன. இங்கிருப்போர் ‎பொதுவாக எல்டிஎப் கட்சியை சார்ந்த வாக்காளர்களை பேரவைக்கு ‎தெரிவு செய்து கொண்டிருந்தனர். சமீபத்தில் நடந்த பேரவைக்கான ‎தேர்வில், பந்தளத்தில் யுடிஎப் கட்சி வெற்றி ‎பெற்றுள்ளது.பந்தளத்தின் மேலவை தொகுதி 2011 ஆண்டிற்கான ‎பேரவை தேர்தலில் கைவிடப்படும். பந்தளம் தற்பொழுது ‎பத்தனம்திட்ட லோக் சபா தொகுதியின் ஒரு அங்கமாகும்.‎

செல்லும் வழி ‎

தொகு

சாலை, இரயில் மற்றும் வான்வழியில் பந்தளம் அடைவதற்கான ‎வழிகளும், தூரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:‎

சாலை ‎

தொகு

‎* கேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து, ‎வடக்கே 105 கிலோமீட்டர் தொலைவில் ‎ ‎* கொச்சி, கேரளாவின் வணிக தலை நகரத்தில் இருந்து ‎தெற்கே 120 கிலோமீட்டர் தொலைவில் ‎ ‎* கோட்டயத்தில் இருந்து 51 கிலோமீட்டர் தெற்கே ‎

ரயில்

தொகு

‎•‎ செங்கன்னூர் இரயில் நிலையத்தில் இருந்து 16 கிலோமீட்டர் ‎தொலைவில் ‎ ‎•‎ மாவேலிக்கர இரயில் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் ‎தொலைவில் ‎ ‎•‎ காயம்குளம் இரயில் நிலையத்தில் இருந்து 27 கிலோமீட்டர் ‎தொலைவில் ‎

வான்வழி

தொகு

‎•‎ திருவனந்தபுரம் சர்வதேச விமான தளத்தில்இருந்து 119 ‎கிலோமீட்டர் தொலைவில் ‎ ‎•‎ கொச்சி சர்வதேச விமான தளத்தில்இருந்து 140 கிலோமீட்டர் ‎தொலைவில் ‎

புகழ் பெற்ற மக்கள் ‎

தொகு

‎•‎ பந்தளம் கேரள வர்மா - கவி ‎ ‎•‎ பந்தளம் கே. பி.-கவி ‎ ‎•‎ எம்.என்.கோவிந்தன் நாயர் - அரசியல்வாதி ‎•‎ பந்தளம் பி. ஆர்.- அரசியல்வாதி ‎ ‎•‎ பி. கே. மந்த்ரி - கேலிச் சித்திர ஓவியர் ‎•‎ வி.எஸ்.வலியதன் - கலைஞர் (ராஜா ரவி வர்மா விருது ‎பெற்றவர்)‎ ‎•‎ கடம்மனிட்ட வாசுதேவன் பிள்ளை - படையணி கலையில் ‎வித்தகர், வினைஞர் ‎ ‎•‎ பந்தளம் சுதாகரன் - அரசியல்வாதி, முன்னாள் கேரள ‎அரசின் ஆய அமைச்சர் ‎•‎ பந்தளம் பாலன் - பாடகர்.‎

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

‎•‎ பந்தளம் பிரவசி அச்சொசியேசன் ஷர்ஜாஹ் மற்றும்; ‎நோர்தேர்ன் எமிரேட்ஸ் ‎ ‎•‎ பந்தளம் பிரவசி அச்சொசியேசன், துபாய், யுஏஈ புகைப்பட தொகுப்பு

குறிப்புதவிகள்

தொகு

‎[1]‎ பத்தனம்திட்ட மாவட்டத்தில் காணப்படும் ஊர்கள் மற்றும் ‎நகரங்கள்.‎

‎[2‎

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தளம்&oldid=3636153" இலிருந்து மீள்விக்கப்பட்டது