இந்தியத் திரைப்படத்துறை
இந்தியத் திரைப்படத்துறை என்பது இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களைக் குறிக்கும்.[8] தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், போஜ்புரி, வங்காள மொழி ஆகிய மொழிகளில் பெரும் திரைப்படத்துறைகள் செயல்படுகின்றன. இந்தியாவில் திரைப்படத்துறை மிகவும் பிரபலமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1800 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்திய மொழிகள்களில் இல் தயாரிக்கப்படுகின்றன.[9][10][11] சென்னை, கொல்கத்தா, ஐதராபாத்து, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு, புவனேஸ்வர் மற்றும் கவுகாத்தி. போன்ற நகரங்கள் இந்தியத் திரைப்பட உற்பத்திக்கு மிக முக்கியமாக விளங்குகின்றது.[12] 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி வருடாந்திர திரைப்பட வெளியீட்டில் நைஜீரியா நாட்டை விட இந்தியா முதலிடதில் உள்ளது.[13]
இந்தியத் திரைப்படத்துறை | |
---|---|
திரைகளின் எண்ணிக்கை | 6,780 ஒற்றை திரைகள் (2017)[1] 2,100பல திரைகள்(2016)[2][3] |
• தனிநபருக்கு | 9 ஒரு மில்லியனுக்கு (2015)[3] |
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2019)[4] | |
மொத்தம் | 2446 |
Number of admissions (2016)[5] | |
மொத்தம் | 20,000,000 (2020) |
• தனி நபருக்கு | 1.69 |
தேசியத் திரைப்படங்கள் | 1,713,600,000 |
நிகர நுழைவு வருமானம் (2017)[7] | |
மொத்தம் | ₹158.9 பில்லியன் $58.9 பில்லியன் |
தேசியத் திரைப்படங்கள் | $2.1 பில்லியன் (2015)[6] |
2000 ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியத் திரைப்படத்துறையின் ஒட்டுமொத்த வருவாய் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். மொழி வாரியாக பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தி மொழி திரைப்படத்துறை வசூல் ரீதியாக 43 சதவீதம் வருவாய் ஈட்டியது. தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் தெலுங்கு திரைப்படத்துறை 36 சதவீத வருவாய் ஈட்டியது. தென்னிந்தியத் திரைப்படத்துறை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துளு ஆகிய ஐந்து திரைப்படத் துறையை உள்ளடக்கியது.
இந்தியத்திரைப்படத்துறை உலகிலேயே அதிகளவில் திரைப்படங்கள் வெளியிடும் திரைத்துறைகளில் முதல் இடத்தில் உள்ளது. 2003ல் மட்டும் 877 திரைப்படங்களும் 1177 விவரணைப்படங்களும் இந்தியாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. மேலும் 2005 ஆம் ஆண்டின் கணிப்பின்படி இந்தியாவில் திரைப்பட அனுமதிச்சீட்டுக்களின் கட்டணம் மிகவும் குறைந்ததாகக் காணப்படுகின்றது அதாவது ஒரு அனுமதிச் சீட்டின் விலை 0.20 அமெரிக்க டாலர்களும்.அமெரிக்காவில் அனுமதிச்சீட்டின் விலை 6.41 டாலர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.மேலும் இந்தியாவில் அமைந்திருக்கும் ராமோஜி திரைப்பட நகரமே உலகின் மிகப் பெரிய திரைப்பட நகரம்.
இந்தியாவில் திரைப்படத்தின் அறிமுகம்
தொகு1896-1910
தொகுதிரைப்படம் இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி (Lumiere Brothers' Cinematography) என்னும் நிறுவனம் பம்பாயில் இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது. டைம்ஸ் ஆஃப் இண்டியா இது பற்றிய விரிவான தகவல்களை வெளியிட்டது. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் (Madras Photographic Store) அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது. 1897 ஆம் ஆண்டளவில் பம்பாயில் கிளிஃப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு நிழற்படக் கலையகத்தில் (Meadows Street Photography Studio) அன்றாடம் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.
நுழைவுச் சீட்டு
தொகுநுழைவுச் சீட்டுக்களின் விற்பனை மற்றும் ஆண்டு தோறும் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை என்பவற்றின் அடிப்படையில், இந்தியத் திரைப்படத்துறை உலகிலேயே மிகப்பெரியது ஆகும். உலகிலேயே குறைந்த விலையில் நுழைவுச் சீட்டுக்கள் கிடைப்பது இந்தியாவிலேயே என்று கூறப்படுகின்றது. ஆசியா-பசிபிக் பகுதியின் 73% திரைப்படம் பார்ப்பவர்கள் இந்தியாவிலேயே உள்ளனர் என்பதுடன் ஆண்டுக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமானம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சி, பெருமளவிலான படம் பார்க்கும் இந்திய மக்களிலேயே தங்கியுள்ளது. இந்திய மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board of Film Certification of India) இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு மூன்று மாதமும் இந்தியாவின் மக்கள் தொகைக்குச் சமமான அளவினர் திரைப்பட அரங்குகளுக்குச் செல்கின்றனர். இந்தியாவில் மட்டுமன்றி, இந்திய மக்கள் பெருமளவில் வாழும் பல்வேறு நாடுகளிலும் இந்தியத் திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.
திரைப்படத்துறைகள்
தொகு- அசாமியத் திரைப்படத்துறை
- மேற்கு வங்காளத் திரைப்படத்துறை
- போச்புரித் திரைப்படத்துறை
- சக்மா திரைப்படத்துறை
- சத்திசுகரித் திரைப்படத்துறை
- டெக்கனி திரைப்படத்துறை
- தோக்ரி திரைப்படத்துறை
- குஜராத்தி திரைப்படத்துறை
- அரியான்வி திரைப்படத்துறை
- படுகத் திரைப்படத்துறை
- பாலிவுட்
- கன்னடத் திரைப்படத்துறை
- காஷ்மீரி திரைப்படத்துறை
- கொங்கணி திரைப்படத்துறை
- மலையாளத் திரைப்படத்துறை
- மணிப்பூர் திரைப்படத்துறை
- மராத்தித் திரைப்படத்துறை
- ஒடிசா திரைப்படத்துறை
- பஞ்சாபித் திரைப்படத்துறை
- ராஜஸ்தானியத் திரைப்படத்துறை
- சமசுகிருதத் திரைப்படத்துறை
- தமிழகத் திரைப்படத்துறை
- தெலுங்குத் திரைப்படத்துறை
- துளு திரைப்படத்துறை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Will single-screen theatres in India become history?". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 7 September 2019.
- ↑ Joshi, Hemant. "Bollywood The Indian Film Industry" (PDF). Deloitte. பார்க்கப்பட்ட நாள் 2 June 2017.
- ↑ 3.0 3.1 "Feature films: Cinema infrastructure - Capacity". UNESCO Institute for Statistics. UNESCO. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
- ↑ ""INDIAN FEATURE FILMS CERTIFIED IN 2019" (PDF), Filmfed, பார்க்கப்பட்ட நாள் 12 August 2020
- ↑ "Culture: Feature Films". UNESCO Institute for Statistics. 2015. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Indian film industry's gross box office earnings may reach $3.7 billion by 2020: Report - Latest News & Updates at Daily News & Analysis". 26 September 2016.
- ↑ "Value of the film industry in India". Statista. 2018. பார்க்கப்பட்ட நாள் 6 May 2019.
- ↑ Hasan Suroor (26 October 2012). "Arts : Sharmila Tagore honoured by Edinburgh University". The Hindu. http://www.thehindu.com/arts/sharmila-tagore-honoured-by-edinburgh-university/article4031942.ece. பார்த்த நாள்: 1 November 2012.
- ↑ "Leading film markets worldwide by number of films produced 2018". Statista (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 June 2020.
- ↑ "Tamil leads as India tops film production". Times of India. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Tamil-leads-as-India-tops-film-production/articleshow/21967065.cms. பார்த்த நாள்: 25 March 2015.
- ↑ "Electrolux-2nd" (PDF). Archived from the original (PDF) on 7 February 2012. பார்க்கப்பட்ட நாள் 6 February 2012.
- ↑ "Filming Hubs | Film Facilitation Office". ffo.gov.in. பார்க்கப்பட்ட நாள் 7 September 2020.
- ↑ "Nigeria surpasses Hollywood as world's second largest film producer – UN". United Nations. 5 May 2009. பார்க்கப்பட்ட நாள் 26 March 2013.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இந்தியத் திரைப்படத்துறை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Tamil Cinema Website - Gallery, Trailer & Videos - Kollywood.Co