முதன்மை பட்டியைத் திறக்கவும்

திரைப்படத்துறை

திரைப்படத்துறை திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடும் ஒரு தொழிற்துறையாகும். இதில் திரைப்பட தொழிற்நுட்ப, கலை மற்றும் வணிக துறையையும் உள்ளடக்கியது. உதாரணமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், படப்பிடிப்பு தளங்கள், ஒளிப்பதிவு, பட தயாரிப்பு, முன் தயாரிப்பு, பின் தயாரிப்பு, திரைப்பட விழாக்கள், விநியோகம், நடிகர்கள், திரைப்பட இயக்குநர்கள், மற்றும் பிற படப்பிடிப்பு குழுவினரையும் குறிக்கும். இத்துறை திரைப்படங்களை நேர்த்தியானவகையில் தயாரித்து முறையான விளம்பரங்கள் மூலம் அறிமுகப்படுத்தி, திரையரங்குகள் போன்ற தளங்களில் வெளியிட்டு வியாபாரம் செய்கிறது. இதில் தயாரிப்பாளர்கள் திரைப்படங்கள் தயாரிக்க முதலீடு செய்கிறார்கள். இயக்குநர்கள் பல நடிகர்களைக் கொண்டு இயக்கி படத்தை எடுக்கிறார்கள். விநியோகஸ்தர்கள் படத்தை விளம்பரப்படுத்தி பல நகரங்களில் வெளியிட்டு விற்கிறார்கள். ஒரே மொழித் திரைப்படங்கள் வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டோ, அல்லது படப்பிடிக்கப்பட்டோ மற்றொரு நாட்டில் வெளியிடவும் செய்யப்படுகிறது.

இவற்றையும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைப்படத்துறை&oldid=1400147" இருந்து மீள்விக்கப்பட்டது