துளு திரைப்படத்துறை
துளு திரைப்படத்துறை அல்லது கோஸ்டல் வுட் என்பது இந்தியத் திரைப்படத்துறையில் துளு மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும். ஆண்டுதோறும் 5 முதல் 7 படங்களைத் தயாரிக்கிறது. 1971ஆம் ஆண்டு என்ன தங்கடி என்ற முதல் துளு திரைப்படம் வெளியானது. கேரளா, கர்நாடகம் எல்லைப் பகுதியில் உள்ள துளு நாடு பகுதியில் இத்திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஆனால் தற்போது துளு திரைப்படம் மங்களூர், உடுப்பி, மும்பை, பெங்களூர் மற்றும் வளைகுடா நாடுகளில் ஒரே நேரத்தில் படங்கள் வெளியிடப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
2006 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற ஆசிய மற்றும் அரபு சினிமாவின் ஒசியனின் சினிஃபான் விழாவில் சிறந்த இந்திய திரைப்படத்திற்கான விருதை சுத்தா என்ற துளு திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை வென்றது. 2011 ஆம் ஆண்டில் ஒலியார்டோரி அசல் என்ற திரைப்படம் துளு திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் ஆகும். சாலி பொலிலு என்ற திரைப்படம் மிக நீண்ட காலமாக திரையிடப்பட்ட துளு திரைப்படம் ஆகும். இது அதிக வசூல் செய்யத திரைப்படம் மற்றும் மங்களூரில் உள்ள பி.வி.ஆர் சினிமாஸில் 470 நாட்களை வெற்றிகரமாக திரையிடப்பட்டது.
பிப்ரவரி 27, 2016 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா துளு திரைத்துறை குறித்து ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டது. அதாவது 1971 முதல் 2011 வரை 45 வருடமான துளு திரைத்துறையில் 40 ஆண்டுகளில் 45 திரைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன, அதேசமயம் 5 ஆண்டுகளில் பின்னர், 21 படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
முக்கிய சாதனைகள்
தொகுஆண்டு | திரைப்படம் | தயாரிப்பு | இயக்குநர் | Notes |
---|---|---|---|---|
1971 | என்னா தங்கடி | துளு திரைத்துறையில் வெளியான முதலாவது திரைப்படம் | ||
1971 | டேரேடா புடெடி | கே.என். டெய்லர் | துளு திரைத்துறையில் வெளியான இரண்டாவது திரைப்படம் | |
1972 | பிசாட்டி பாபு | சிறந்த துலு படமாக மாநில அரசு விருதைப் பெற்ற முதல் திரைப்படம். | ||
1973 | கொட்டி சென்னையா | விஷும்குமார் | முதல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட துளு திரைப்படம். | |
1978 | கரியானி கட்டண்டி கண்டானி | அரூர் பீமராவ். | முதல் துளு வண்ண திரைப்படம். | |
1993 | பங்கர் பாட்லர் | ரிச்சர்ட் காஸ்டெலினோ | இந்த திரைப்படம் துளு திரைத்துறையில் மிக உயர்ந்த தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றது. | |
'செப்டம்பர் 8' | ரிச்சர்ட் காஸ்டெலினோ | மங்களூரில் 24 மணி நேரத்தில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்தது. | ||
சுத்தா | எட்டாவது ஆசிய திரைப்பட விழாவில் "ஓசான் - சினிபான்" சிறந்த இந்திய படத்திற்கான விருதை வென்றது.[1] | |||
2014 | நிரல் | ஷோதன் பிரசாத், சான் பூஜாரி | ரஞ்சித் பாஜ்பே | இந்த திரைப்படம் வெளிநாடுகளில் முற்றிலும் தயாரிக்கப்பட்ட முதல் துளு திரைப்படம் (துபாய்). |
2014 | சாலி பொலிலு | பிரகாஷ் பாண்டேஸ்வர் | வீரேந்திர ஷெட்டி காவூர் | இந்த திரைப்படம் துலு திரையுலகில் அதிக வசூல் செய்த படமாகும். இது மங்களூரில் பி.வி.ஆர் சினிமாஸ் இல் 511 நாட்களை வெற்றிகரமாக திரையிடப்பட்டது. இஸ்ரேலில் திரையிடப்பட்ட முதல் துளு திரைப்படம். |
2014 | மேடிம் | விஜய்குமார் கோடியல்பெயில் | மராத்தி மொழியில் மறு ஆக்கம் செய்யப்பட்ட முதல் துளு திரைப்படம் ஆகும்.[2] | |
2015 | தண்ட் | ஷோதன் பிரசாத் | ரஞ்சித் பாஜ்பே | ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வெளியிட்ட திரைப்படம்.[3][4][5] |
2015 | சாண்டி கோரி | ஷர்மிளா கபிகாட், சச்சின் சுந்தர் | தேவதாஸ் கபிகாட் | மங்களூர் மற்றும் உடுப்பியில் 100 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. |
2019 | கிர்கிட் | மஞ்சுநாத் அத்தாவர் | ரூபேஷ் ஷெட்டி | இன்றுவரை அதிக வசூல் செய்த துளு திரைப்படம். |
மேற்கோள்கள்
தொகு- ↑ "It's been a roller-coaster for 40 years". Chennai, India: The Hindu. 20 May 2011 இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125185058/http://www.hindu.com/2011/05/20/stories/2011052062480200.htm. பார்த்த நாள்: 20 May 2011.
- ↑ "Details". www.vijaykarnatakaepaper.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-07.
- ↑ "'Dhand' becomes first Tulu movie to release in Australia, more shows planned in Mumbai". Dubai, UAE: Daijiworld.com. 23 Aug 2015 இம் மூலத்தில் இருந்து 29 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150729055258/http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=338233. பார்த்த நாள்: 20 May 2011.
- ↑ "In a first, Tulu Movie Dhand to be released in the UK on Oct 3rd". Dubai, UAE: Newskarnataka.com. 23 Aug 2015 இம் மூலத்தில் இருந்து 17 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160817103129/http://www.newskarnataka.com/nri/in-a-first-tulu-movie-dhand-to-be-released-in-the-uk-on-july-3rd#sthash.j6pTruXb.dpuf. பார்த்த நாள்: 20 May 2011.
- ↑ "'Dhand' Tulu film creates history in Israel with first houseful Indian film ever". namma.tv. பார்க்கப்பட்ட நாள் 4 July 2016.
வெளி இணைப்புகள்
தொகு- list of Tulu films at the Internet Movie Database (IMDb)