உடுப்பி

கருநாடக மாநகரம்

உடுப்பி (Udupi) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மாநகரம் ஆகும். உடுப்பி நகரானது கல்வி, வணிகம், தொழில்துறை போன்றவற்றின் மையமான மங்களூருக்கு வடக்கே 55 கிமீ (34 மைல்) தொலைவிலும், மாநிலத் தலைநகரான பெங்களூருக்கு மேற்கே சாலை வழியாக சுமார் 422 கிமீ (262 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.

உடுப்பி
மாநகரம்
உடுப்பி கிருஷ்ணர் கோயில்
உடுப்பி கிருஷ்ணர் கோயில்
உடுப்பி is located in கருநாடகம்
உடுப்பி
உடுப்பி
ஆள்கூறுகள்: 13°20′20″N 74°44′42″E / 13.3389°N 74.7451°E / 13.3389; 74.7451
Countryஇந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்உடுப்பி மாவட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர்கே. சோபா
சட்டமன்ற உறுப்பினர்கே. ரகுபதி பட்
பரப்பளவு
 • மாநகரம்68.23 km2 (26.34 sq mi)
ஏற்றம்
27 m (89 ft)
மக்கள்தொகை
 (2011)[1][2]
 • மாநகரம்2,15,500
 • அடர்த்தி3,200/km2 (8,200/sq mi)
 • பெருநகர்
4,36,208
மொழிகள்
 • Administrativeகன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
576101 – 576108
தொலைபேசி குறியீடு0820
வாகனப் பதிவுKA-20
இணையதளம்www.udupicity.mrc.gov.in

இது உடுப்பி மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. மேலும் இது கர்நாடகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. உடுப்பி கர்நாடகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இங்கு பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு உள்ள கிருஷ்ணர் கோயிலுக்காக புகழ்பெற்றது. மேலும் இது கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.[3] இது பிரபலமான உடுப்பி உணவு வகைகளுக்காக இதன் பெயரைக் கொண்டுள்ளது. இது பரசுராம சேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாறு

தொகு

13 ஆம் நூற்றாண்டில், வைணவத் துறவி மத்துவர் இங்கு கிருஷ்ணர் கோயிலை நிறுவினார்.[4] துவைத வேதாந்த தத்துவத்தைப் பரப்புவதற்காக உடுப்பியில் அவரால் எட்டு மடங்கள் - அஷ்ட மடங்கள் - கன்னடத்தில் - ಅಷ್ಟ ಮಠಗಳು நிறுவப்பட்டன. இது இன்றைய உடுப்பி மாவட்டத்தில் ஒரு துடிப்பான கோயில் கலாச்சாரத்தை வேரூன்றியது.[4] இதனால் இப்பகுதியில் பிராமணர்களின் குடியேற்றம் குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்தது. மேலும் அவர்கள் பிராந்தியத்தின் மக்கள்தொகையில் 10 சதவீதம் உள்ளனர். இது தென்னிந்தியாவின் மற்ற பகுதிகளை விட மூன்று மடங்கு கூடுதலாகும்.[4]

மக்கள்தொகையியல்

தொகு
உடுப்பியில் சமயங்கள் (2011)[5]
சமயங்கள் Percent
இந்து
84.74%
இசுலாம்
8.04%
கிறித்துவம்
6.91%
பிறர்
0.31%

உடுப்பி நகரம் இந்தியாவின் கர்நாடகத்தில் இதே பெயரில் அமைந்துள்ள மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, உடுப்பி நகரத்தில் 33,987 குடும்பங்களும், 144,960 மக்களும் வசிக்கின்றனர். இவர்களில் 71,614 பேர் ஆண்கள், 73,346 பேர் பெண்களாவர்.[6] இந்த மக்களில் பட்டியல் சாதியினரின் தொகை 8,385 ஆகவும், பழங்குடியினரின் தொகை 6,774 ஆகவும் உள்ளது.[6] நகர மக்கள் தொகை 14.03% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது.[6]


 

உடுப்பியில் மொழிகள் (2011)[7]

  உருது (6.04%)
  தமிழ் (1.07%)
  பிற (3.40%)

உடுப்பி நகரத்தில் அதிகம் பேசப்படும் மொழி துளு ஆகும். மேலும் உடுப்பி நகரத்தில் கன்னடம், கொங்கணி மொழிகளும் பேசப்படுகின்றன. தக்கினி உருது மற்றும் பேரி போன்ற மொழிகள் இப்பகுதியில் உள்ள முஸ்லிம்களால் பேசப்படுகின்றன.

அரசியல்

தொகு

உடுப்பி நகரமானது உடுப்பி சிக்மகளூர் மக்களவைத் தொகுதி மற்றும் உடுப்பி சிக்மகளூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக சோபா கரந்த்லாஜே,வும்,[8][9] சட்டமன்ற உறுப்பினராக கே ரகுபதி பட் ஆகியோர் உள்ளனர்.[10]

குடிமை நிர்வாகம்

தொகு

முன்னர் நகர மன்றத்தைக் கொண்டிருந்த உடுப்பி, 1995 இல் நடைமுறைக்கு வந்த மாநகர அவையைக் கொண்டுள்ளது.[11] உடுப்பியைச் சுற்றியுள்ள மணிப்பால்,[12] பர்கல, மல்பே, உத்யவர, சந்தேகாட்டே போன்ற பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு மாநகர மன்றம் உருவாக்கப்பட்டது.

உடுப்பி நகரத்தில் மாநகராட்சியானது 35 வார்டுகளுடன் [13] 75.92 சதுர கிலோமீட்டர் ( 29.31 சமுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது.[6] இதற்கு மாநகராட்சி ஆணையர் ஆனந்த் சி கல்லோலிகர் பொறுப்பதிகாரியாக உள்ளார்.[14][15] நகர மன்றமானது நலவாழ்வு, நகர்ப்புற திட்டமிடல், தொழில்நுட்ப பிரிவு, வருவாய், நிதி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு போன்றவற்றிற்கான துறைகளைக் கொண்டுள்ளது.[16]

குடிமைப் பயன்பாடு

தொகு

உடுப்பி நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் [17] மற்றும் நகர வளர்ச்சிக் குழுமத்தால் நகரத்தின் பெருந்திட்டம் (மாஸ்டர்பிளான் பரணிடப்பட்டது 2018-09-20 at the வந்தவழி இயந்திரம்) தயாரிக்கப்படுகிறது.[18]

நகரத்தின் முதன்மையான குடிநீர் ஆதாரமாக பாஜே வென்டட் அணையில் சேமிக்கப்படும் தண்ணீர் உள்ளது.[19] சாணேபெட்டுவில் உள்ள சுவர்ணா ஆற்றில் உள்ள நீரை உறிஞ்சி எடுத்து அதன் நீர் சேமிப்பை பெருக்க நகராட்சி முயற்சிக்கிறது.[19][20] திறமையாக நீர் விநியோகம் செய்வதற்காக நகரம் மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[21] 2018 ஆம் ஆண்டில் 24 மணி நேரமும் நீர் வழங்குவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து $75 மில்லியன் கடனையும் பெற்றது.[22][23]

நகரம் திறந்த வடிகால்களையும் மூடிய வடிகால்களையும் கொண்டுள்ளது.[6] 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி புதைசாக்கடை வலையமைப்பு நகரின் 20% பரப்பளவில் மட்டுமே உள்ளது. ஆனால் இது தற்போதுள்ள 82 கிலோமீட்டரிலிருந்து 143 கிலோமீட்டராக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.[11] நகராட்சி பகுதியில் 46 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) கழிவுநீர் உருவாகிறது. இது நிட்டூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது.[24]

புவியியலும் காலநிலையும்

தொகு

உடுப்பி சராசரி கடல் மட்டத்திலிருந்து 27 மீ (89 அடி) உயரத்தில் உள்ளது.[25] உடுப்பியின் தட்பவெப்பம் கோடையில் வெப்பமாதாகவும், குளிர்காலத்தில் இதமானதாகவும் இருக்கும். கோடை காலத்தில் (மார்ச் முதல் மே வரை) வெப்பநிலை 38 °செ (100 °பா) வரை இருக்கும். மேலும் குளிர்காலத்தில் (திசம்பர் முதல் பெப்ரவரி வரை) பொதுவாக 32 முதல் 20 °செ (90 முதல் 68 °பா) வரை இருக்கும். உடுப்பி கடலோரப் பகுதி என்பதால், இங்கு சில கடற்கரைகள் சுற்றுலா தலங்களாக உள்ளன. காப் கடற்கரை, மல்பே கடற்கரை ஆகிய இரண்டும் உடுப்பியில் உள்ள கடற்கரைகளாகும்.

பருவமழை காலம் என்பது சூன் முதல் செப்டம்பர் வரையான காலம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 4,000 மிமீ (160 அங்குலம்) மழைப்பொழிவு இருக்கும். பலத்த காற்றும் வீசும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், உடுப்பி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 32.8
(91)
33.5
(92.3)
33.6
(92.5)
34.2
(93.6)
33.3
(91.9)
29.7
(85.5)
28.0
(82.4)
28.4
(83.1)
29.5
(85.1)
30.9
(87.6)
32.3
(90.1)
32.8
(91)
31.58
(88.85)
தாழ் சராசரி °C (°F) 20.8
(69.4)
21.8
(71.2)
23.6
(74.5)
25
(77)
25.1
(77.2)
23.4
(74.1)
22.9
(73.2)
23
(73)
23.1
(73.6)
23.1
(73.6)
22.4
(72.3)
21.2
(70.2)
22.95
(73.31)
பொழிவு mm (inches) 1.1
(0.043)
0.2
(0.008)
2.9
(0.114)
24.4
(0.961)
183.2
(7.213)
1177.2
(46.346)
1350.4
(53.165)
787.3
(30.996)
292.1
(11.5)
190.8
(7.512)
70.9
(2.791)
16.4
(0.646)
4,096.9
(161.295)
[சான்று தேவை]

கலாச்சாரம்

தொகு
 
உடுப்பியில் யட்சகானா
 
பெள்ளெ பிரம்மஸ்தானத்தில் நாகபத்ரி

பூத கோலா, ஆடி கலஞ்சம், கரங்கோலு, நாக ஆராதனே ஆகியவை உடுப்பியின் சில கலாச்சார மரபுகளாகும். மகர சங்கராந்தி, நாக பஞ்சமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளை மக்கள் கொண்டாடுகின்றனர். யக்சகானம் போன்ற நாட்டுப்புறக் கலைகளும் இங்கு பிரபலம்.

உள்ளூர் பாரம்பரியங்களை காக்க ஆர்வம் உள்ளோரை ஊக்குவிக்க ரதபீதி கெளெயரு, கலாவிருந்தா ஆகிய இலாப நோக்கற்ற அமைப்புகள் உதவுகின்றன கிருஷ்ண ஜெயந்தியின் போது, உடுப்பியில் பாரம்பரியமாக நடத்தப்படும் பாரம்பரிய நாட்டுப்புற நடனமான புலி வேசம் தெருக்களில் நிகழ்த்ததப்படுகிறது.

சமையல்

தொகு
 
மசாலா தோசை உடுப்பி உணவு வகைகளில் ஒன்றாகும்.

உடுப்பி என்ற சொலானது தற்போது உலகம் முழுவதும் காணப்படும் சைவ உணவு வகைக்கு பிரபலமாக உள்ளது.  இந்த சமையலின் தோற்றம் கிருஷ்ணர் மடத்துடன் தொடர்புடையதக உள்ளது. இறைவன் கிருஷ்ணருக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான உணவு படையலாக வழங்கப்படுகிறது. மேலும் சதுர்மாதத்தின் போது (மழைக்காலத்தின் நான்கு மாத காலம்) பொருட்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகளும், பல்வேறு தேவைகளும் பருவகால மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களை உள்ளடக்கி உருவாகபட்ட உணவுகளில் புதுமைக்கு வழிவகுத்தன.[26] கிருஷ்ணருக்கு படைக்க உணவு சமைத்த சிவல்லி மத்வ பிராமணர்களால் தயாரிக்கபட்ட இந்த உணவு உடுப்பியில் உள்ள கிருஷ்ண மடத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. உடுப்பி உணவு வகைகளில் நிபுணத்துவம் பெற்ற உணவகங்கள் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெருநகரங்களிலும், நகரங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன.

உடுப்பி ஒரு பக்கம் சைவ சமையலுக்குப் பிரபலமானது என்றாலும், மங்களூர் சமையலைப் போன்ற அசைவ உணவுகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. இவற்றில் சில கோரி ரொட்டி, நீர் தோசை, கோரி புளிமுஞ்சி, கோழிக்கறி சுக்கா, மீன் குழம்பு, மீன் வறுவல் மற்றும் பலவாக உள்ளன.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Udupi District Population Census 2011, Karnataka literacy sex ratio and density". census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 24 September 2018.
  2. "Cities having population 1 lakh and above, Census 2011" (PDF). பார்க்கப்பட்ட நாள் 24 September 2018.
  3. "Karnataka / Udupi News : Temple town gearing up for the grand Paryaya". தி இந்து. 2005-12-31. பார்க்கப்பட்ட நாள் 2016-12-05.
  4. 4.0 4.1 4.2 Chinmay Tumbe, India Moving: A History of Migration (2019), p.42
  5. "C-01 Population By Religious Community: Karnataka". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "Census of India 2011, Karnataka, Town Amenities Handboox". Census of India. பார்க்கப்பட்ட நாள் 7 September 2020.
  7. "Table C-16 Population by Mother Tongue: Karnataka (Urban)". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்.
  8. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-09-05.
  9. "Udupi City Municipal Council".[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "Udupi: Waste management unit - Residents oppose, MLA negotiates". www.daijiworld.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
  11. 11.0 11.1 "Udupi underground drainage to be expanded, 82 to 143 km". www.mangaloretoday.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
  12. Udupi Manipal பரணிடப்பட்டது 4 அக்டோபர் 2014 at the வந்தவழி இயந்திரம் from Manipal World News
  13. "Udupi City Municipal Council".[தொடர்பிழந்த இணைப்பு]
  14. "Udupi Municipal Council City Staff".[தொடர்பிழந்த இணைப்பு]
  15. "Udupi divided into 3 zones for daily water supply". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-03-10. பார்க்கப்பட்ட நாள் 2020-09-05.
  16. "Udupi City Council". 13 October 2020. Archived from the original on 25 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "'First-of-its-kind, UUDA layout to come up in Udupi' - Raghavendra Kini". www.daijiworld.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
  18. "Directorate of Town and Country Planning". Archived from the original on 23 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 8 September 2020.
  19. 19.0 19.1 Jaideep Shenoy (Apr 9, 2020). "Karnataka: Udupi CMC authorities augment water storage at Baje dam | Mangaluru News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
  20. "CMC pumping water from Baje dam for Udupi". www.mangaloretoday.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
  21. "Udupi divided into 3 zones for daily water supply". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-03-10. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
  22. Tripathy, Antara. "Karnataka's four coastal towns of Kundapura, Mangalore Puttur and Udupi and improve sanitation infrastructure for Mangalore town with GOI & ADB $75 Million LoanIBG News | IBG News" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
  23. "ADB to lend $75 million for 24-hour water supply in four Karnataka towns". https://www.business-standard.com/article/economy-policy/adb-to-lend-75-million-for-24-hour-water-supply-in-four-karnataka-towns-118112700918_1.html. 
  24. "Waste water treatment plant proposed at Nittur". https://www.thehindu.com/news/cities/Mangalore/waste-water-treatment-plant-proposed-at-nittur/article25805441.ece. 
  25. "Elevation of Udupi town, Karnataka". பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
  26. "'Jackfruit Mela-2015' brings Jackfruit lovers together". www.newskarnataka.com. Archived from the original on 2016-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுப்பி&oldid=3816093" இலிருந்து மீள்விக்கப்பட்டது