மசாலா தோசை
மசாலா தோசை (Masala dosa) என்பது மிகவும் பிரபலமான தென்னிந்தியச் சிற்றுண்டி வகையான தோசைகளில் ஒன்று ஆகும். இது கர்நாடகத்தின் மங்களூரில் தோன்றி பரவியதாகக் கருதப்படுகிறது.[1] இது இந்தியா முழுவதும் உடுப்பி உணவகங்களின் வழியாக பிரபலமடைந்தது.[2] இது தென்னிந்தியாவில் புகழ்வாய்ந்ததாக உள்ளது.[3] என்றாலும் இந்தியா முழுவதிலும் கிடைக்கக்கூடியது.[4] ஏன் வெளிநாடுகளிலும் கூட கிடைக்கிறது.[5][6] மசாலா தோசை தயாரிப்பு முறை நகரத்துக்கு நகரம் இடம் மாறுபடுகிறது.[7]
சட்னியுடன் மசாலா தோசை | |
தொடங்கிய இடம் | கர்நாடகம், உடுப்பி |
---|---|
பகுதி | இந்தியா |
முக்கிய சேர்பொருட்கள் | தோசை மாவு, உருளைக் கிழங்கு |
வேறுபாடுகள் | மைசூர் மசால் தோசை, ரவை மசாலா தோசை, எலுமிச்சை மசாலா தோசை, தாள் மசாலா தோசை |
தயாரிப்பு முறை
தொகுஅரிசி, உளுந்து, மற்றும் வெந்தயம் ஊற வைத்து மாவாக அரைத்து தோசை மாவு தயாரிக்கப்படுகிறது. அந்த மாவை தோசைக் கல்லில் வார்த்து அது ஒரு பக்கம் வேகும் வரை காத்திருந்து வேகவைத்த முறுவலாகத் தோசை வெந்த உடன் சிறிது எலுமிச்சைச் சாறு கொத்துமல்லியுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு வெங்காயம், கடுகு மசாலாவை ஒரு கரண்டி வைத்து கமகம வாசத்துடன் பரிமாறலாம்.[8]
-
பேப்பர் மசாலா தோசை
-
மைசூர் மசாலா தோசை
-
சென்னை சிறப்பு மசாலா தோசை
-
Masala dosa
மேற்கோள்கள்
தொகு((reflist))
- ↑ Narayan Poojari (20 August 2017). "A taste of the coast". Deccan Chronicle.
- ↑ "India, Crisped on a Griddle: Classic Masala dosa". Food.ndtv.com. NDTV food.
- ↑ Praveen, M. P.; Krishnakumar, G. (13 June 2014). "Masala dosa slips out of reach". Chennai, India: The Hindu. http://www.thehindu.com/news/cities/Kochi/masala-dosa-slips-out-of-reach/article6110691.ece.
- ↑ "What A Masala dosa Costs Around The World". Huffingtonpost.in. Huffingtonpost India.
- ↑ Romig, Rollo (7 May 2014). "Masala dosa to Die For". The New York Times. https://www.nytimes.com/2014/05/11/magazine/masala-dosa-to-die-for.html?_r=0.
- ↑ "Dosa's complex spices hit the spot". Sfchronicle.com/. San Francisco chronicle.
- ↑ Ramnath, N.S.. "American Dosa". Forbes. https://www.forbes.com/2010/12/16/forbes-india-hunt-for-perfect-dosa-in-nyc.html.
- ↑ Vohra, Asha Rani (1993). Modern Cookery Book. Pustak Mahal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-223-0470-1.