தோசைக் கல்
தோசைக் கல், தவா, தபா என்பது பெரிய தட்டையான அல்லது குழியான அல்லது குவியான வட்ட-வடிவ வாணலியானது உலோகப் பொருட்களால் உருவாக்கப்படுகிறது, வழக்கமாக தகட்டு உலோகம், வார்ப்பிரும்பு, அல்லது அலுமினியம் போன்ற பொருட்களினால் ஆனது. இது தெற்கு ஆசிய, மத்திய ஆசிய, மத்திய கிழக்கு சமையல் வகைகளில் தட்டையான உணவுப்பொருட்களை பொறிக்க பயன்படுகின்றது. மேற்கு ஆசியாவில், தோசைக் கல் எப்பொழுதும் குவி வடிவிலும், தெற்கு ஆசியாவில் தட்டையாகவும், குழி வடிவிலும் காணப்படுகின்றன. இது இந்தோ ஆரிய மொழிகளான பஞ்சாபி, ஹிந்தி மற்றும் உருதுவில் தவா அல்லது தபா என்றழைக்கப்படுகின்றது.[1]
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-01-08. Retrieved 2017-04-17.