தோசை
தோசை என்பது அரிசி மற்றும் உளுந்து சேர்த்து அரைத்த மாவில் தயாரிக்கப்படுகிற தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆகும். தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. இது பொதுவாகத் தட்டையான தாள் போன்ற வட்ட வடிவம் கொண்டதெனினும் ஒரு சில விடுதிகளில் தட்டையான வடிவில் நெய்த்தோசையைச் சுட்டுவிட்டுப் பின்னர் கூம்பி வடிவிலும் பரிமாறுவர். மஞ்சள் சேர்க்கப்படாத தோசை பொதுவாக வெண்மையான நிறத்தில் இருக்கும். வெந்தயம் - தோசை மாவில் வெந்தயம் சிறிது அளவு சேர்த்து அரைக்கப்படும் அதனால் தோசைக்கு சற்று சிவந்த நிறம் ஏற்படும். இது சேர்ப்பதால் உடலுக்கும் நல்லது குளிர்ச்சியை தரும் .
தோசை | |
மாற்றுப் பெயர்கள் | தோசை, தோசா, தோச, சக்குளி, தோசே (சிங்களம்) |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா, இலங்கை |
ஆக்கியோன் | தென் இந்தியா |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி, உளுந்து |
வேறுபாடுகள் | மசாலா தோசை, ரவா தோசை, வெங்காய தோசை, நெய்த் தோசை |
பெயர்த் தோற்றம்
தொகுதோய்தல் என்றால் மாப்புளித்தல்; தோய் என்பது தோயை என்றாகி பின்னர் தோசை என்றாகியது.[1]
தோசைக்கல்லில் வட்டமாகத் தேய்த்து செய்யப்படும் உணவுப்பண்டமாதலால் தேய்+செய் என்ற சொற்களே மாறி தோசை என்றாகியது என்போரும் உள்ளனர்.
அது போக, தென்னிந்தியர்களின் இந்த உணவு பதார்தத்தை சமைக்கும் போது 1.மாவு எடுத்து ஊத்துகையில் "ஸ்ஸை" என்று சப்தமும் 2. மேலும் ஊத்தப்பட்ட மாவை கடாய் முழுவதும் பரப்புகையில் "ஸ்ஸை" என்று சப்தமும் இப்படி இரண்டு முறை சப்தங்கள் வருவதால் "தோஸை" என்று வடஇந்தியர்கள் பெயரிட்டிருக்கலாம். ஏனெனில், "தோ" என்றால் இந்தியில் இரண்டு என்று பொருள் எனும் கருத்தும் உண்டு.
உடன் பரிமாறுவன
தொகுதோசையினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் இந்த பதார்த்தங்கள் உபயோகப்படுகின்றன.
தோசை வகைகள்
தொகுதோசையில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில:
- சாதா தோசை (ரோஸ்ட்)
- கல் தோசை
- வெங்காய தோசை/ஆணியன் ரோஸ்ட்
- மசாலா தோசை/ரோஸ்ட் - பொதுவாக இவ்வகை தோசைக்குள் உருளைக் கிழங்கு மசாலாவை உள்ளடக்கி உருவாக்கப்படுகிறது.
- நெய் தோசை/ நெய் ரோஸ்ட்
- வெண்ணெய் தோசை
- பொடி தோசை
- பேப்பர் ரோஸ்ட்
- தக்காளி ரோஸ்ட்
- முட்டை தோசை (ஆம்ப்லெட்)
- கறி தோசை - தோசைக்குள் வெந்த இறைச்சியை வைத்து செய்யப்படும் தோசை.
- ரவா தோசை/ரோஸ்ட்
- நெய் ரவா ரோஸ்ட்
- குண்ணுத்தோசை
- செய்முறுக்கல் (முறுவலான தோசை)
- அடை தோசை (அடை)
- கீரை அடை தோசை
- கிழங்கு அடை தோசை
- கேழ்வரகு அடை தோசை
- கேழ்வரகு இனிப்பு அடை
- ஆப்பம்
- சாதா ஊத்தாப்பம்
- தக்காளி ஊத்தாப்பம்
- வெங்காய ஊத்தாப்பம் (ஆணியன் ஊத்தாப்பம்)
- செட்தோசை - வடைகறி மிகவும் பிரபலமான ஒரு உணவு. பெரும்பாலும் இந்த செட்தோசை மாவில் மஞ்சள் கலந்து தோசை தயார் செய்யப்படும்.
- வெந்தய தோசை - இந்த தோசை சர்க்கரை நோய் உள்ளவர்கள் பெரிது விரும்பி உண்ணும் ஒரு தோசை வகை. வெந்தய தோசை பார்க்க மஞ்சள் நிறமாக கட்சி அளிக்கும்.
- மரவள்ளி கிழங்கு தோசை - அரிசியுடன் மரவள்ளிக் கிழங்கை சமபங்காக இட்டு அரைத்துக் கொள்வார்கள்.
- நீர் தோசை (மிக மெல்லிய தோசை) (மங்களூரு)
பருத்தித்துறைத் தோசை
தொகுபருத்தித்துறைத் தோசை பெரும்பாலான ஈழத்தவர்களால் பேசப்படும், விரும்பி உண்ணப்படும் தோசையாகும். இத்தோசை உளுந்து, அரிசி, கோதுமை மாவு என்பன கலந்து செய்யப்படும். இத் தோசைக்கு வெந்தயம் கண்டிப்பாகச் சேர்க்கப்படும். இதற்கான கலவை தென்னங்கள்ளோ அன்றி பனங்கள்ளோ விட்டுப் புளிக்க விடப்படும். பருத்தித்துறையில் இருக்கும் ஓடக்கரை வீதிகளில் விற்கப்படும் இத் தோசைக்கு மவுசு அதிகம். பல்வேறு நகரங்களில் இருந்தும் பலர் இத்தோசைக்காகவே பருத்தித்துறைக்கு வந்து சாப்பிட்டுப் போவார்கள்.
தோசை பல்வேறு பெயர்களில் தென்னிந்திய மொழிகளில் அழைக்கப்படுகின்றது. அதன் ஒலிபெயர்ப்பும், உச்சரிப்பும் பின்வருமாறு:
மொழி | ஒலிபெயர்ப்பு | உச்சரிப்பு (IPA) |
---|---|---|
தமிழ்: தோசை | dōsai | t̪oːsʌj |
கன்னடம்: ದೋಸೆ | dōse | d̪oːse |
மலையாளம்: ദോശ | dōsa | d̪oːɕa |
தெலுங்கு: దోసె[2] | dōse | d̪oːɕe |
துளு: ದೋಸೆ | dōse | d̪oːse |
காட்சியகம்
தொகு-
அரைத்த மாவு
-
தோசைக் கல்லில் மாவு ஊற்றப் படுகின்றது
-
மாவு சமமாக பரப்பபடுகின்றது
-
சிறிது நேரம் வேக வைத்துத் திருப்பிப் போடப்பட்ட பின்பு
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ ஞா.தேவநேயப்பாவாணர். செந்தமிழ்ச் செல்வி, மார்ச்சு 1967, மொழியாராய்ச்சிக் கட்டுரைகள், பக்கம் 60, http://tamilvu.org/library/libindex.htm .
- ↑ http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/app/brown_query.py?qs=%E0%B0%A6%E0%B1%8B%E0%B0%B8%E0%B1%86&searchhws=yes