கறிதோசை என்பது தமிழர்களின் மரபுவழி சிற்றுணவு ஆகும். கோழிக்கறி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி இவற்றில் ஏதாவது ஒன்றை நன்கு சமைத்து, அதில் சிறு பகுதியை எடுத்து தோசைக்குள் கறியை வைத்து செய்யப்படும் உணவிற்கு கறிதோசை என்று பெயர். தோசைமாவில் உள்ள அரிசியில் இருந்து மாவுச்சத்தும், தோசைமாவில் உள்ள உளுந்தில் இருந்து புரதச்சத்தும், கறியில் இருந்து புரதச்சத்தும் சேர்ந்து அனைத்து சத்துகளும் இந்த உணவினை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும். மதுரையில் இந்த உணவு அதிகம் உண்ணப்படுகிறது

அதே மாவை இட்லியாக ஊற்றி கறிஇட்லியாகவும் செய்யலாம். ஈழத்தில் கறிஇட்லி உணவு அதிகம் உண்ணப்படுகிறது.

வெளி இணைப்புகள் தொகு

கறிதோசை குறித்து https://www.youtube.com/watch?v=9tbCfBbz-FU https://www.youtube.com/watch?v=dkzV240CvD8 https://www.youtube.com/watch?v=rHnHxwqCPQo

"https://ta.wikipedia.org/w/index.php?title=கறிதோசை&oldid=2977191" இலிருந்து மீள்விக்கப்பட்டது