அடை
அடை அல்லது "அடை தோசை" (ⓘ) அடை தோசை என்பது ஒரு தோசை வகையை சார்ந்தது. இதில் அரிசி, பருப்பு வகைகள், சிறு தானியங்கள் ஆகியவற்றை பல விதமான சேர்க்கைகளில் (மசாலா/நறுமணப்பொடிகள்) உடன் ஊறவைத்து, தேங்காய், மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த மாவில் தோசையாக வட்டவடிவில் சுட்டு எடுக்கும் சுவைமிக்க உணவுப் பண்டம் ஆகும்.
வரலாறு
தொகுதோசைகள் தென்னிந்தியாவில் தோன்றின, ஆனால் அதன் துல்லியமான புவியியல் தோற்றம் தெரியவில்லை. வரலாற்றாசிரியர் பி. தங்கப்பன் நாயரின் கூற்றுப்படி, தோசை இன்றைய கர்நாடகாவில் உள்ள உடுப்பி நகரத்தில் தோன்றியது.[1][2] இருப்பினும், உணவு வரலாற்றாசிரியர் கே.டி. ஆச்சாரியாவின் கூற்றுப்படி, சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகள் பழங்காலத் தமிழ் நாட்டில் கிபி 1 ஆம் நூற்றாண்டில், இந்த உணவு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததாகக் கூறுகின்றன.[3] தோசை பற்றிய ஆரம்பகால எழுத்து குறிப்பு 8 ஆம் நூற்றாண்டில் இன்றைய தமிழ்நாட்டின் இலக்கியங்களில் தோன்றியதாக ஆச்சாரியா கூறுகிறார். அதே நேரத்தில் கன்னட இலக்கியத்தில் தோசை பற்றிய ஆரம்ப குறிப்பு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றுகிறது.[4]
பிரபலமான பாரம்பரியத்தில், தோசையின் தோற்றம் உடுப்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது. உடுப்பி உணவகங்களுடனான உணவின் தொடர்பு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[4] தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தோசை மென்மையாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். தோசையின் மெல்லிய மற்றும் மிருதுவான பதிப்பு முதன்முதலில் இன்றைய கர்நாடகாவில் தயாரிக்கப்பட்டது.[5] மேலும், தோசைக்கான செய்முறையை 12 ஆம் நூற்றாண்டு சமசுகிருதம் கலைக்களஞ்சியமான "மனசோல்லாசா"வில் காணலாம், இது இன்றைய கர்நாடகாவில் இருந்து ஆட்சி செய்த மூன்றாம் சோமேசுவரரால் தொகுக்கப்பட்டது.[6]
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தென்னிந்திய உணவுகள் வடக்கில் படிப்படியாக பிரபலமடைந்தன. டெல்லியில், கன்னாட் பிளேஸில் உள்ள "மெட்ராஸ் ஹோட்டல்"[7] தென்னிந்திய உணவு வகைகளை வழங்கும் உணவகங்களில் ஒன்றாகும்.[8] இது 1930களில் உடுப்பி உணவகங்களுடன் மும்பைக்கு வந்தது.[9]
தயாரிப்பு மற்றும் பரிமாறும் முறை
தொகு- தமிழ்நாட்டில் பொதுவாக அரிசியுடன் துவரம் பருப்பு சேர்த்து ஊறவைத்து, அதனுடன் சிவப்பு மிளகாய் (வரமிளகாய்), கருவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து 'அடை மாவு' தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயார் செய்த மாவு புளிக்க வைக்கத் தேவையில்லை. அன்றே பயன்படுத்த ஏதுவாக தயார் செய்யப்படுகிறது. இதற்குச் சிறந்த இணை உணவாக பல காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் அவியல் உள்ளது. நாட்டு சர்க்கரை அல்லது வெல்லத்தூள் சேர்த்து உண்பதும் வழக்கத்தில் உள்ளது.
- அக்காலத்தில் கத்தரிக்காய், வாழைப்பூ, தேங்காய், வெங்காயம் ஆகியவற்றையும் மிகப்பொடியாக அரிந்து 'அடை மாவின்' மீதுத் தூவிச் சமைப்பர். அடைக்கு இணை பதார்த்தமாக செட்டிநாடு கத்திரிக்காய் பால் கூட்டு சம்பிரதாயமாக தொட்டுக் கொள்ளப்பட்டது.
- தற்காலத்தில் அடை தோசைக்கு பாண்டிச்சேரி சட்னி சரியான இணை பதார்த்தமாக உள்ளது. அதன் செய்முறையானது வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், வரமிளகாய், தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் கருவேப்பிலை, கடுகுடன் எண்ணெயில் சேர்த்து தாளித்து இது தயாரிக்கப்படுகிறது.
- மேலும் பல விதமான சட்னிகள் மற்றும் சாம்பார் உடனும் அடைதோசை பரிமாறப்படுகிறது.
சான்றுகள்
தொகு- ↑ P. Thankappan Nair (2004). South Indians in Kolkata. Punthi Pustak. p. 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86791-50-7.
- ↑ Socians, The (2019-11-15). "Origin of Masala Dosa: Know How From a Sin Accompanied by a Bad Habit to Delicious South Indian Food". Socians (in ஆங்கிலம்). Archived from the original on 2022-11-17. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
- ↑ K. T. Achaya (November 2003). The Story of Our Food. Universities Press. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7371-293-X.
- ↑ 4.0 4.1 Charmaine O' Brien (15 December 2013). The Penguin Food Guide to India. Penguin Books Limited. p. 378. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5118-575-8.
- ↑ Vir Sanghvi (1 January 2004). Rude Food: The Collected Food Writings of Vir Sanghvi. Penguin Books India. pp. 109–110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-303139-0.
- ↑ K.T. Achaya (2003). The Story of Our Food. Universities Press. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7371-293-7.
- ↑ Bride at Ten, Mother at Fifteen: Autobiography of an Unknown Indian Woman, Sethu Ramaswamy, Namita Gokhale Editions, 2003
- ↑ Much Ado Over Coffee: Indian Coffee House Then And Now, Bhaswati Bhattacharya, Routledge, 2017
- ↑ "8 oldest Udupi restaurants in Mumbai". The Free Press Journal. 2019-05-31. https://www.freepressjournal.in/food/8-oldest-udupi-restaurants-in-mumbai.