அவியல் என்பது உணவுக்கு துணைப்பொருளாக பயன்படும் ஒரு கூட்டுவகையாகும். இது தென் தமிழக மாவட்டமான கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் கேரளத்தின் பிரசித்திப் பெற்ற கூட்டுவகையாகும்.

அவியல்

புராணக் கதை தொகு

அவியல் பாண்டவ சகோதரர்களுள் ஒருவரான 'வீமனால்'(பீமா) முதலில் கண்டுபிடிக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது. விராட பருவத்தின் பொழுது விராட மன்னனின் அரண்மனையில் சமையல்காரனாக பணியில் சேர்ந்த பல்லவிற்கு(வீமனின் மறுபெயர்) முதலில் சமைக்கத்தெரியாது. ஆயினும் அவர் சமையலறையிலிருந்த பல காய்கறிகளை ஒன்றாக வெட்டி, அவற்றை துருவிய தேங்காயுடன் சேர்த்து கொதிக்கவைத்து அவியலை தயார் செய்தார். வேறு சிலக் கதைகளில், விராட மன்னனின் அரண்மனைக்கு ஒரு சமயம் எதிர்பாராத விருந்தினர்கள் சிலர் வந்தனர் என்றும், அவர்களுக்கு உணவு பரிமாற பீமன் பணிக்கப்பட்டார், ஆனால் தனிப்பட்ட காய்கறி கொண்டு உணவினை தயாரிக்க போதுமான காய்கறிகள் சமையலறையில் இல்லை, அதனால் பீமன் கிடைத்த காய்கறிகள் அனைத்தையும் பயன்படுத்தி புதிய உணவினை தயார் செய்தார் என்றும் அதன் பெயரே அவியல் எனக் கருதப்படுகிறது.

மற்றொரு கதையில் கௌரவர்கள் வீமனுக்கு நஞ்சு கொடுத்து கை, கால்களை கட்டி கங்கையில் போட்டுவிட்டனர். சில நாட்கள் கழித்தும் வீமன் கிடைக்காததால் இறுதிச் சடங்கு செய்ய முடிவு செய்யப்பட்டது, ஆனால் நாகர்களின் துணை கொண்டு கங்கையிலிருந்து மீண்டு வந்தார் வீமன், அதனால் இறுதி சடங்கில் அர்ப்பணம் செய்யப்படவிருந்த உணவு வகைகளைத் தயாரிப்பதை நிறுத்தினர். ஆனால் உணவுப் பிரியரான வீமன் சமையலறையில் இருந்த அனைத்து காய்கறிகளையும் வீணாக்காமல் தயாரித்த உணவே அவியல் ஆகும்.[1]

மற்றொரு கதையில் கேரளாவின் திருவிதாங்கூர் நாட்டு அரசன் பெரும் விழா எடுத்தார், அதில் நாட்டிலுள்ள அனைவரும் கலந்து கொண்டதால் உணவுத்தட்டுப்பாடு வந்தது, சமையலறையில் வந்து பார்த்த அரசன், வீணாகப் போகும் நறுக்கிய காய்கறிகளின் துகள்களை கொண்டு உணவினை சமைக்க உத்தரவிட்டார், அதுவே அவியல் ஆகும்.[2]

தேவைப்படும் பொருள்கள் தொகு

சேனைக்கிழங்கு, கத்தரிக்காய், வாழைக்காய், வெள்ளரிக்காய், கேரட், தடியங்காய் (பூசணி|வெள்ளைப் பூசணி), புடலங்காய், முருங்கைக்காய், சீனி அவரைக்காய் (கொத்தவங்காய்), மிளகாய், தேங்காய், மஞ்சள்தூள், பூண்டு, புளி.

செய்முறை தொகு

காய்கறிகளை சிறியதாக நறுக்கி தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். தேங்காய் துருவி மிளகாய், மஞ்சள்தூள்,சீரகம், பூண்டு சேர்த்து இலேசாக அரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, வேகவைக்கப்பட்ட காய்கறிகளை போட வேண்டும். பின்னர் அரைத்த தேங்காய்க் கலவையை இதனுடன் சேர்க்க வேண்டும். இதனுடன் தேவையான உப்பு மற்றும் புளிக்கரைசல் (அல்லது) தயிர் சேர்த்து தேங்காய் எண்ணெய் கொண்டு கிளறி சில நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவேண்டும். [3]

உசாத்துணை தொகு

  1. "வீமனின் கண்டுபிடிப்பே அவியல்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2015.
  2. http://www.onamfestival.org/avial.html
  3. "அவியல்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவியல்&oldid=2677949" இலிருந்து மீள்விக்கப்பட்டது