விராடன்
மகாபாரத கால அரசர்
விராடன் மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் ஒருவன். இவன் மத்சய நாட்டின் மன்னர் ஆவான். துரியோதனன் ஆகியோரிடம் சூதாட்டத்தில் தோற்று மறைந்து வாழ்ந்த காலத்தில், பாண்டவர்கள் இவனது அரசவையில் ஒரு ஆண்டுக்காலம் வாழ்ந்தனர்.[1] இவன் சுதேஷ்ணை என்பவளை மணந்து கொண்டான். இளவரசன் உத்தரனும், இளவரசி உத்தரையும் இவனது மக்களாவர்.
விராடனின் மைத்துனன் கீசகன் திரௌபதி மீது கொண்ட மையலால் வீமனால் கொல்லப்பட்டான். [2]
குருச்சேத்திரப் போரில் விராடன் மற்றும் அவரது மகன் உத்தரன் ஆகியோர், துரோணரால் கொல்லப்பட்டனர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ யுதிஷ்டிரன் விராடன் சந்திப்பு! - விராட பர்வம் பகுதி 7
- ↑ கீசகனைக் கொன்ற பீமன்! - விராட பர்வம் பகுதி 22ஆ