உத்தரை மகாபாரத கதாபாத்திரங்களில் ஒருத்தி. விராடனின் மகள். உத்தரனின் சகோதரி.இவள் திரேதா யுகத்தின் அவதாரமாவாள் என்று உப புராணங்களில் ஒன்றான மானவ புராணம் கூறுகிறது. அர்ச்சுனன்- சுபத்திரை ஆகியவர்களின் மகனான அபிமன்யுவை மணம் செய்தாள். அபிமன்யு பாரதப் போரில் இறந்ததால் இள வயதில் விதவையானாள். பாரதப் போரில் அபிமன்யு இறந்த பின் உத்தரைக்குப் பிறந்த குழந்தையே குரு வம்சத்தின் ஒரே வாரிசு ஆகும். அக்குழந்தையான பரீட்சித்து பின்னர் அஸ்தினாபுர அரசனானான்.[1][2][3]


மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தரை&oldid=3769104" இருந்து மீள்விக்கப்பட்டது