சாம்பார்
சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும். இது காய்கறிகள், பருப்புடன் கொத்தமல்லி தூள், மிளகாய்ப் பொடி போன்றவற்றால் செய்யப்பட்ட ஒரு குழம்பு வகை துணை உணவுப் பொருள். தென்னிந்தியாவில் சமைக்கப்படும் சாம்பாரின் ருசி தனி தான். தென்னிந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் இது ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகின்றது. அடிப்படை மூலப் பொருட்கள் பருப்பு (துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பயற்றம்பருப்பு), புளிக்கரைசல், காய்கறிகள் என்றாலும், தயாரிக்கப்படும் விதம் ஊருக்கு ஊர் வேறுபடுகின்றது. முருங்கைக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். அரைத்துவிட்ட வெங்காய சாம்பார் மிகவும் சிறப்பானது. மராத்தியர்களின் உணவான சாம்பார், தமிழ்நாட்டில் கிபி 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் மராத்திய அரசு காலத்தில் அறிமுகமானது.[1] [2]
சாம்பார் | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | தமிழ்நாடு |
ஆக்கியோன் | தஞ்சாவூர் மராத்திய அரசு, கிபி 17-ஆம் நூற்றாண்டு |
முக்கிய சேர்பொருட்கள் | துவரம் பருப்பு, புளி, கொத்தமல்லி தூள் காய்கறிகள் மற்றும் மிளகாய்ப் பொடி |
தயாரிக்கும் முறை
தொகுபருப்பை தேவையான அளவு எடுத்து வேக வைத்தப்பின்னர் அதனுடன் காய்கறிகள் சேர்த்து வேக வைக்க வேண்டும். பொதுவாக எதாவது ஒரு காய்கறி அல்லது பல காய்கறிகள் பயன்படுத்துவர். கூட்டுக் காய்கறிகளாக கத்தரிக்காய், வெள்ளரிக்காய், தடியங்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றுடன் சிறிய வெங்காயத்தையும் சேர்த்து வேகவைப்பர். அதனுடன் சாம்பார் பொடி, உப்பு சேர்ந்தால் சுவையான சாம்பார் தயார். பொதுவாக வத்தல் மிளகாய், கொத்தமல்லி, பூண்டு, மஞ்சள் மற்றும் பொருள்களை இடித்து சாம்பார் பொடியாக பயன்படுத்துவர்.[3]
தமிழக கல்வெட்டு
தொகுசாம்பார் என்றும் சாம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த உணவு வகை தமிழகத்தில் பிறந்த ஒரு அறுசுவை உணவு.தமிழக கல்வெட்டு 1530 C.E பதிவின் வாயிலாக இது தமிழர்களின் பூர்வீக உணவு என்பது நமக்கு தெரிய வருகிறது அதாவது தஞ்சை வாழ் மாராத்தியர்களின் உணவு என்ற கருத்திலிருந்து முற்றிலும் விலகி நிற்க இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.
“அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,”(South Indian Inscriptions, IV, 503, 1530 CE, Srirangam Temple, East Wall, Second Prakara, a Nayak Era Gift to Sri Ranga Natha[4]) என்பதே அந்த கல்வெட்டின் பதிவு.
"கறியமுது பல சம்பாரம"---- பல காய்கறிகளை கொண்டு உணவு படைத்தல் என்று பொருள்.
"நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக"---- அதாவது நெய் சேர்ந்த உணவை பணம் ஒன்றுக்கு கொடு என்பதாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.
இப்போ மாராட்டியர்கள் கதைக்கு வருவோம் இவர்கள் ஆட்சி யின் கீழ் தஞ்சை 1675 காலம் தான் வந்தது இப்படி இருக்க சாம்பார் தஞ்சை மாராட்டியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதை முற்றிலும் மறுத்து கூறலாம் மாராட்டிய மாநிலத்தில் வேரும்பருப்பை தால் என கூறி உண்ணும் பழக்கமே இன்று வரை உள்ளது அங்கு சாம்பார் என்ற சொல்லே கிடையாது.தமிழில் சாம்பு என்றால் குறைத்தல் அரைத்தல் என்று பொருள் அரைத்த தேங்காய் அல்லது தானியங்கள் என்று கூறலாம்.