இட்லிப் பொடி

இட்லிப் பொடி என்பது மிளகாய், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு அல்லது கடலைப் பருப்பு மற்றும் எள் ஒன்றாக சேர்க்கப்பட்ட பிறகு அரைக்கப்படும் கலவை இட்லிப் பொடியாகும். இட்லிப் பொடி இட்லி மட்டுமின்றி, தோசை மற்றும் பிற தென்னிந்திய உணவு வகைகளுடன் கலந்து உட்கொள்ளப்படுகிறது.

பெரும்பாலும் இட்லிப் பொடியானது, நல்லெண்ணெய் அல்லது நெய்யுடன் கலந்து உட்கொள்ளப்படுகிறது.

இட்லிப் பொடி செய்முறை

தொகு

பருப்பையும், வரமிளகாயையும் நன்றாக பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கியபின் சூடு தனியும் முன்பு பெருங்காயம் சேர்க்க வேண்டும். எள்ளை தனியாக வறுக்கவும். பிறகு அனைத்து கலைவையினையும் ஒன்றாக சேர்க்கவும்.

ஆறிய பிறகு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்தபின், மின்சாரத்தால் இயங்கும் ஆட்டாங்கல் அல்லது அம்மிக்கல் மூலமாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் பூண்டையும் இக்கலவையில் சேர்த்துக் கொள்ளலாம்.

சிறிதளவு அரிசியையும் மிளகுப் பொடியும் சேர்த்தால் இன்னும் சற்று வேறு சுவை கிடைக்கும்.

எள்ளிற்கு பதிலாக வெல்லம் சேர்த்தால் சன்று இனிப்பான சுவையும் கிடைக்கும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்லிப்_பொடி&oldid=3233542" இலிருந்து மீள்விக்கப்பட்டது