நல்லெண்ணெய்

நல்லெண்ணெய் என்று பரவலாக வழங்கப்படுவது, எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யாகும். எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். எண்ணெய் என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணெய் என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. இது பொதுவாக சமையலுக்குப் பயன்படுகிறது. இதை தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சீனர்கள், கொரியர்கள், சப்பானியர்கள் தங்கள் சமையலில் நல்லெண்ணெயை உபயோகிக்கின்றனர்.

நல்லெண்ணெய்
Sesame seed oil in clear glass vial
உணவாற்றல்3699 கிசூ (884 கலோரி)
0.00 g
100.00 g
நிறைவுற்றது14.200 g
ஒற்றைநிறைவுறாதது39.700 g
பல்நிறைவுறாதது41.700 g
0.00 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து சி
(0%)
0.0 மிகி
உயிர்ச்சத்து ஈ
(9%)
1.40 மிகி
உயிர்ச்சத்து கே
(13%)
13.6 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(0%)
0 மிகி
இரும்பு
(0%)
0.00 மிகி
மக்னீசியம்
(0%)
0 மிகி
பாசுபரசு
(0%)
0 மிகி
பொட்டாசியம்
(0%)
0 மிகி
சோடியம்
(0%)
0 மிகி
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

நல்லெண்ணெய் இந்திய மருத்துவ முறைகளில் பல பயன்பாடுகளைப் பெற்றுள்ளது. இது எதிர் ஆக்சிகரணியாக செயல்பட்டு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இது பிடித்துவிடல், உருவுதல் போன்ற ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாகப் பயன்படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லெண்ணெய்&oldid=3683487" இலிருந்து மீள்விக்கப்பட்டது