எள்
எள் | |
---|---|
![]() | |
எள் செடி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் (நிலைத்திணை) |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Lamiales |
குடும்பம்: | Pedaliaceae |
பேரினம்: | எள் (Sesamum) |
இனம்: | S. indicum |
இருசொற் பெயரீடு | |
Sesamum indicum ( கரோலசு லின்னேயசு |
எள் (Sesamum Indicum)[1] ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு (இதில் இருந்து எண்ணெய்க்குத் தைலம் என்று பெயர்). எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.
மருந்துப் பண்புகள்[மேற்கோள் தேவை]தொகு
- கறுப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது.
- வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
- எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும்[மேற்கோள் தேவை].
- இதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும்.
- இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.
- இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.
- எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளு விதையை இலேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குறையும்.
- தோலில் சொறி, சிரங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாகப் பூசினால் தோல் நோய்கள் அகலும்.
- நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் தோல் நோய்கள் அணுகாது.
- கறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, இலேசாக வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தச்சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.
- வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்[மேற்கோள் தேவை].
- எள்ளின் இலையையும் வேரையும் அரைத்துத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.
- உடற்சூடு, தலைப் பாரம் குறையும்.
எள்ளின் ஊட்டப்பொருள்களின் மதிப்புதொகு
எள்ளில் 20% புரதமும் 50% எண்ணெயும் 16% மாப்பொருளும் உள்ளன. பின்வரும் அட்டவணை எள் வித்தின் ஊட்டப்பொருள்களின் அளவைக் காட்டுகின்றது.[2]
தோல் நீக்கப்பட்ட வறுத்த எள் வித்தின் ஊட்டப்பொருள் மதிப்பு 100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து | ||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆற்றல் 570 kcal 2370 kJ | ||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||
ஐக்கிய அமெரிக்கா அரசின் வயதுக்கு வந்தவருக்கான, உட்கொள்ளல் பரிந்துரை . மூலத்தரவு: USDA Nutrient database |
தோல் நீக்கப்பட்ட உலர்த்திய எள் வித்தின் ஊட்டப்பொருள் அளவு 100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து | ||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆற்றல் 630 kcal 2640 kJ | ||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||
ஐக்கிய அமெரிக்கா அரசின் வயதுக்கு வந்தவருக்கான, உட்கொள்ளல் பரிந்துரை . மூலத்தரவு: USDA Nutrient database |