பெருங்காயம்

பெருங்காயம்
பெருங்காயம் தயாரிக்கப்படும் தாவரமான பெருலா அசபோடிடாவின் வரைபடம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத:
இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Apiales
குடும்பம்:
பேரினம்:
Ferula
இனம்:
F. assafoetida
இருசொற் பெயரீடு
Ferula assafoetida
கரோலஸ் லின்னேயஸ்

பெருங்காயம் (Ferula assa-foetida) (பாரரசீகம்: انگدان அங்கதான்), மாற்றுவிதமாக அசபேடிடா, உச்சரிப்பு /æsəˈfɛtɪdə/[1] (இது சாத்தானின் சாணம், நாற்றமடிக்கும் பசை, கடவுளின் உணவு என்ற புனைப்பெயர்களிலும் காயம் (மலையாளம்), இங்கு (பெங்காலி, மராத்தி, குசராத்தி, இந்தி, உருது, நேபாளி), இங்குவ (தெலுங்கு), இன்கு (கன்னடம்), பெருங்காயம் (தமிழ்), என்று பல மொழிப் பெயர்களிலும் அறியப்படுகின்றது. இது பாரசீகத்தை (இன்றைய ஈரான்) பிறப்பிடமாகக் கொண்ட பெருங்காய இனம் ஆகும்.[2][3][4] பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கின்றது. ஆனால் இதனை பயன்படுத்தி சமைத்த உணவுகளில் மென்மையான வாசனையையும், சுவையையும் தருவதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.[5] இது வெங்காய இனப் பூண்டுகளின் மணத்தை நினைவூட்டுகின்றது.

பயன்கள்

தொகு

சமைத்தல்

தொகு

இது சாம்பார் போன்ற கதம்ப காய்கறி உணவுப் பதார்த்தங்களில் சுவையூட்டுப் பொருளாகவும், ஊறுகாய்களில் செரிமானத்திற்கு உதவும் பொருளாகவும் பயன்படுகின்றது. சமைக்காத போது அதிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் கடுமையாக இருப்பதால், அதை காற்றுப்புகா கொள்கலன்களில் அடைத்து வைக்கப்படுகிறது. அவ்வாறு செய்யாவிட்டால் பெருங்காயத்திலிருந்து வெளிவரும் மணமானது அருகில் வைக்கப்பட்டுள்ள பிற மசாலாப் பொருட்களிலும் தொற்றிக்கொள்ளும். இருப்பினும், அதன் துர்நாற்றம் மற்றும் சுவை ஆகியவை மிதமாகவும் மற்றும் எண்ணெய் அல்லது நெய்யில் சூடாக்கிய அல்லது வதக்கிய வெங்காயம் பூண்டு ஆகியவற்றை நினைவூட்டுகின்றது.[6]

பெருங்குடல் காற்றுநீக்கி

தொகு

பெருங்காயம் குடலில் உள்ளிருக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் குறைக்கின்றது. வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது.[7]

மருத்துவப் பயன்பாடுகள்

தொகு
  • செரிமான சக்தியை தூண்டுதல்: செரிமானப் பிரச்சினைகள் இருப்பின் பெருங்காயத் தண்ணீர் பலன் தரும். இது உடலின் செரிமானத்தை பாதிக்கும் நச்சுக்கள் இருப்பின் அதை நீக்கி செரிமான அமைப்பை சீராக செயலாற்ற உதவுகிறது. அதோடு வயிற்றின் அமில-கார அளவை சமன் செய்வதால் குடல் இயக்கமும் சீராக இருக்கும்.[8]
  • சளிக்காய்ச்சல் எதிர்ப்பு - 1918 ஆம் ஆண்டில் பெருங்காயம் பானிசு இன்புளுயன்சா தொற்று நோயை எதிர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. தைவான் நாட்டிலுள்ள “கயோஹ்சியூங் மருத்துவப் பல்கலைக்கழகத்திலுள்ள” விஞ்ஞானிகள், பெருங்காயத்தின் வேர்கள் சுவைன் புளு வைரசுH1N1 ஐ கொல்லும் இயற்கையான வைரஸ் எதிர்ப்பு மருந்து சேர்க்கைகளை உற்பத்தி செய்வதாக அறிக்கை வெளியிட்டனர். அமெரிக்க வேதியியல் குமுகத்தின் நேச்சுரல் புராடக்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள் இந்த சேர்மங்கள் இந்த வகையான ப்ளூ காய்ச்சலுக்கு எதிரான "புதிய மருந்து உருவாக்கத்திற்காக உறுதியளிக்கும் முன்னணி சேர்மங்களாகப் பயன்படுத்தப்படலாம்" என்று கூறினர்.[9][10]
  • நுண்ணுயிர்க் கொல்லி - பெருங்காயம் நாள்பட்ட மூச்சுக் குழாய் அழற்சி மற்றும் கக்குவான், இருமல் ஆகியவற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்துவதற்காக நன்கு ஆவணமாக்கப்பட்டதுடன் பாரம்பரிய மருந்துகளில் நுண்ணுயிர்கொல்லியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதே போன்று வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது.[11]
  • கருத்தடைப் பொருள்/கரு சிதைப்பான் - பெருங்காயம் கருத்தடைப் பொருள்/கரு சிதைப்பான் நடவடிக்கையைக் கொண்டிருப்பதாகவும் அறிக்கையிடப்படுகின்றது,[12] மேலும் அது பண்டைய பெருங்காய மசாலா இனங்கள் சில்பியம் ஆகியவற்றுக்குத் தொடர்புடையதாகவும் (அவற்றிற்கு கீழ்புற பதிலீடாகவும்) உள்ளது.
  • முயலகனடக்கி - பெருங்காயம் எண்ணெய்-பசை பாரம்பரிய யூனானி அதே போன்று எத்னோபொட்டானிக்கல் இலக்கியத்தில் முயலகனடக்கியாக அறிக்கையிடப்பட்டுள்ளது.[13]
  • வாட்டாவை சமன்படுத்துதல் - ஆயுர்வேதத்தில், பெருங்காயம் வட்டா தோஷாவை சமன்படுத்துதற்கான சிறந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.[14]

வட்டாரப் பயன்பாடு

தொகு
  • இந்தியாவில் ஜம்மு பகுதியில், வாயுத் தொல்லை மற்றும் மலச்சிக்கலுக்கான மருந்தாக 60% மக்களால் பெருங்காயம் பயன்படுத்தப்படுகின்றது.[15] இது பெரும்பாலும் குறிப்பாக வெங்காயம் அல்லது பூண்டு உண்ணாத இந்துக்களில் வணிக சாதியினர், ஜைன மதப் பற்றாளர்கள் மற்றும் வைஷ்ணவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. பல சைவ மற்றும் துவரம்பருப்பு உணவுகளில் சுவை மற்றும் மணம் சேர்க்க மற்றும் வாயுத் தொல்லையைக் குறைக்க பயன்படுத்தப்படுகின்றது.

மற்ற பயன்பாடுகள்

தொகு
  • இரை - ஜான் சி துவல் அவர்கள் 1936 ஆம் ஆண்டில் பெருங்காயத்தின் துர்நாற்றம் ஓநாயைக் கவரக்கூடியதாக உள்ளது என்று அறிக்கையிட்டார்.
  • ஆவிகளைத் தவிர்த்தல் - ஜமைக்காவில், ஆவிகள் (ஜமைக்காவின் மொழியில் "டப்பீஸ்") குழந்தையின் உச்சிப்பொட்டு வாயிலாக நுழைவதிலிருந்து தடுக்கும் பொருட்டு குழந்தையின் முன்புற உச்சிப்பொட்டில் (ஜமைக்காவின் மொழியில் "மோல்") பெருங்காயம் தடவப்படுகின்றது. ஆப்பிரிக்க-அமெரிக்க ஹூடூ பாரம்பரியத்தில், பெருங்காயம் பாதுகாத்தல் மற்றும் சாபமிடல் இரண்டிற்குமான சக்தியைக் கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் மந்திர சக்தி சடங்குகளில் பயன்படுகின்றது. சடங்காச்சார மந்திரத்தில் குறிப்பாக அரசர் சாலமனின் சாவியிலிருந்து, அது தீய சக்திகளிடமிருந்து வரும் மந்திர சக்திகளைத் தடுக்கவும் அதையே வெளிவரச் செய்யவும் அவற்றைக் கட்டவும் பெருங்காயம் பயன்படுகின்றது.

மேற்கில் வரலாறு

தொகு

பெருங்காயம் ஆரம்பகாலத்தில் மத்தியதரைக் கடல் பகுதியில் பிரபலமாக இருந்தது. பின்னர் அது பாரசீக தேசத்தின் வழியாக நிலப்பகுதியின் ஊடே வந்ததாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இப்போது ஐரோப்பிய சமையலில் இதன் பயன்பாடு பொதுவாக மறக்கப்பட்டு விட்டது. இருப்பினும் இன்னமும் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயன்பாடு வடகிழக்கு பாரசீக பயணத்திலிருந்து திரும்பிய பின்னர் மாவீரன் அலெக்ஸாண்டரின் படையெடுப்பு வெற்றியிலிருந்து ஐரோப்பாவில் தொடங்கியது. அவர்கள் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள “கிட்டத்தட்டசைரென் சில்பியம்'”' போன்றதான தாவரத்தைக் கண்டறிந்தனர் என்று கருதப்பட்டது. இருப்பினும் அது குறைந்த சுவையுடையது.[16]

ரோமானியப் பேரரசு வீழ்ச்சிக்குப் பின்னர் 16 ஆம் நூற்றாண்டு வரையில், ஐரோப்பாவில் பெருங்காயத்தின் பயன்பாடு அரிதாகவே இருந்தது. எப்போதும் கண்டுபிடிக்க முடியாததாக இருந்தது. அது மருந்தாகவே பார்க்கப்பட்டது. "சமையல் பொருளாகப் பயன்படுத்தினால், அது அதன் மிகவும் மோசமான மணத்தின் காரணமாக ஒவ்வொரு உணவையும் அழிக்கின்றது" என்று கார்சியா டே ஓர்ட்டாவின் ஐரோப்பிய விருந்தாளி கூறியதாகவும் அதற்கு “அறிவுகெட்டவரே, அவ்வாறு ஒன்றுமில்லை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் மருந்தாகவும் சமையலிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதை வாங்க முடிந்த அனைத்து இந்தியர்களும், அதை வாங்கி அவர்களின் உணவிற்கு சேர்க்கின்றனர்” என்று கார்சியா பதிலளித்தார்.[16]

வேளாண்மை மற்றும் உற்பத்தி

தொகு

கோந்து போன்ற பசை, அசபோடிடா தாவர தண்டிலிருந்து பிழியப்பட்ட சாற்றை காய வைப்பதால் கிடைக்கிறது.மேலும் வேரானது மசாலாப் பொருளாக பயன்படுகின்றது. பசையானது புதிதாக இருக்கும் போது சாம்பல்நிற வெண்மையாகவும், காய்ந்து வறண்ட பின்னர் அடர்ந்த மஞ்சள் நிறத்திற்குச் சென்று விடுகின்றது. பெருங்காயப் பசையானது வெப்பம் தாங்காது. மேலும், இது பாரம்பரியமாக கற்கள் அல்லது சுத்தியல் கொண்டு உடைத்து பயன்படுத்தப்படகிறது. இன்று, பெரும்பாலும் பொதுவாகக் கிடைக்கின்ற வடிவமான கூட்டுப் பெருங்காயம் தூளானது, 30% பெருங்காயப் பசையுடன் அரிசி மாவு மற்றும் அரேபிய கோந்து கலந்து கிடைக்கின்றது.

பெருங்காயம் என்பது ஒரு பூண்டுத்தாவரம் ஆகும். மானாசியஸ், அம்பெல்லிபெரேயே குடும்பத்தின் பல்லாண்டுச் செடி, அபியாசேயே என்றும் அழைக்கப்படுகின்றது. இச்செடி சுற்றுவட்டத்தில் 30-40 செ.மீ இலைகளுடன் 2 மீட்டர்கள் வரை உயர வளருகின்றது. தண்டு இலைகள் அகன்ற அடிப்பகுதியைக் கொண்ட காம்புகளைக் கொண்டுள்ளன. பூக்களின் தண்டுகள் 2.5–3 மீட்டர்கள் உயரம் உள்ளன மற்றும் 10 செ.மீ கடினமாகவும் மறைவாகவும் உள்ளன. பசைநிறைந்த கோந்தைக் கொண்டிருக்கின்ற மேற்பட்டையில் பல செல் விலகிய நாளங்கள் உள்ளன. பூக்கள் வெளிர் பச்சை நிறத்தில் பெரிய கூட்டு குடைமஞ்சரிகளில் உற்பத்திசெய்யப்படுகின்றன. காய்கள் நீள்வட்டமாகவும், தட்டையான மெல்லியதாக சிவப்பு கலந்த மண்ணிறத்தில் உள்ளன. மேலும் அவை பால் போன்ற சாற்றைக் கொண்டுள்ளன. வேர்கள் கடினமாகவும், மிகுதியாகவும் மற்றும் சதைப்பிடிப்பாகவும் கானப்படுகின்றன. அவை தண்டுகளைப் போன்றே பசையை கொண்டுள்ளன. தாவரத்தின் அனைத்துப் பகுதிகளும் தனிப்பட்ட துர்நாற்ற மணத்தைக் கொண்டுள்ளன.[17]

பெருங்காயத்திலுள்ள உள்ளடக்கம்

தொகு

பொதுவாக பெருங்காயம் சுமார் 40-64% பசை, 25% பாரசீக கோந்து, 10-17% எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் 1.5-10% சாம்பல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பசைப் பகுதியானது அசரேனினோடேன்னல்கள் 'A' மற்றும் 'B', பைரூலிக் அமிலம், அம்பெல்லிஃபெரோன் மற்றும் நன்கு வரையறுக்கப்படாத சேர்மங்களைக் கொண்டுள்ளது.

சொற்பிறப்பியல்

தொகு

பெருங்காயத்தின் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பெயர் பசைக்கான பாரசீக வார்த்தை (அசா) மற்றும் இலத்தீன் போய்டிடா ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. இது அதன் வலிமையான கந்தகம் கலந்த துர்நாற்றத்தைக் குறிக்கின்றது. அதன் காரமான துர்நாற்றத்தின் விளைவாக அது பல அருவருப்பான பெயர்களில் அழைக்கப்படுகின்றது. பிரெஞ்ச் மொழியில் அது (பிற பெயர்களுக்கு இடையே) மெர்டே டூ டியபிள் (தீய சக்தியின் மலம்) என்று கூறப்படுகின்றது; ஆங்கிலத்தின் சில வட்டார வழக்குகளில் கூட அது தீய சக்தியின் சாணம் என்றும் அழைக்கப்படுகின்றது, மேலும் அவற்றிற்கு ஒப்பான பெயர்களைப் பெரும்பாலான ஜெர்மானிய மொழிகளில் (உ.ம். ஜெர்மன் டேய்பெல்ஸ்ட்ரெக் ,[18] ஸ்வேதிஷ் டைவெல்ஸ்ட்ராக், டச் டூய்வெல்ஸ்ட்ரக், ஆப்ரிகனாஸ் டூய்வெல்ஸ்ட்ரக் ) கண்டுபிடிக்கலாம். பின்னிஷ் மொழியிலும் பிருன்பஸ்கா அல்லது பிருன்பிஹ்கா என்று அழைக்கப்படுகின்றது. துர்கிஷ்ஷில், அது சேய்டண்டெர்சி (பேயின் இனிப்பு), சேய்டன் போகு (பேயின் மலம்) அல்லது சேய்டனோடு (பேயின் மூலிகை) என்றும் கூறப்படுகின்றது. பல இந்தோ-ஆரிய மொழிகளில் அது ஹிங் அல்லது "ஹீங்" என்று அறியப்படுகின்றார். பல திராவிட மொழிகளில் பிற பெயர்கள் உள்ளன (உ.ம். தெலுகு இன்குவா, கன்னடம் இன்கு), தமிழ் (பெருங்காயம்) மற்றும் மலையாளம் காயம். அந்தச் செடிக்கான உண்மையான பெர்சிய பெயர் انگدان அங்கேடன், இது சில நேரங்களில் அரபு மொழியாக்கப்பட்டு انجدان அஞ்ஜேடன் எனவும் அழைக்கப்படலாம். பெருங்காயத்தின் வறண்ட தாவரச் சாறுக்கான பெர்சிய பெயர் آنغوزه அங்ஹோயஸேஹ் .

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ஆக்குசுபோர்டு ஆங்கில அகரமுதலி. அசபோய்டிடா. இரண்டாம் பதிப்பு, 1989.
  2. Farhadi, Faegheh; Asili, Javad; Iranshahy, Milad; Iranshahi, Mehrdad (November 2019). "NMR-based metabolomic study of asafoetida". Fitoterapia 139: 104361. doi:10.1016/j.fitote.2019.104361. பப்மெட்:31629871. 
  3. Farhadi, Faegheh; Iranshahi, Mehrdad; Taghizadeh, Seyedeh Faezeh; Asili, Javad (November 2020). "Volatile sulfur compounds: The possible metabolite pattern to identify the sources and types of asafoetida by headspace GC/MS analysis". Industrial Crops and Products 155: 112827. doi:10.1016/j.indcrop.2020.112827. 
  4. Barzegar, Alireza; Salim, Mohammad Amin; Badr, Parmis; Khosravi, Ahmadreza; Hemmati, Shiva; Seradj, Hassan; Iranshahi, Mehrdad; Mohagheghzadeh, Abdolali (April 2020). "Persian Asafoetida vs. Sagapenum: Challenges and Opportunities". Research Journal of Pharmacognosy 7 (2). doi:10.22127/rjp.2019.196452.1516. 
  5. https://www.herzindagi.com/tamil/health/how-to-use-asafoedita-in-tamil-article-222329
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-03. Retrieved 2010-03-09.
  7. எஸ். கே. கார்க், ஏ. சி. பனேர்ஜீயா, ஜே. வெர்மா. மற்றும் எம்.ஜே. அபிரகாம், எஃபெக்ட் ஆஃப் வேரியசு ட்ரீட்மெண்ட்ஸ் ஆஃப் பல்சஸ் ஆன் இன் விட்ரோ கேஸ் புரடெக்சன் பை செலெக்டேட் இண்டெஸ்டினல் கிளோஸ்ட்ரிடியா. ஜேர்னல் ஆப் புட் சயின்சஸ், தொகுதி 45, பிரதி 6 (பக்கம் 1601-1602).
  8. https://tamil.news18.com/photogallery/lifestyle/food-know-health-benefits-of-drinking-asafoetida-in-warm-water-hing-water-909715-page-4.html
  9. "Influenza A (H1N1) Antiviral and Cytotoxic Agents from Ferula assa-foetida". Journal of Natural Products xxx (xx). August 19, 2009 (Web). doi:10.1021/np900158f. 
  10. ஆன்சியண்ட் சைனீஸ் ரெமிடி மே வொர்க் பார் ப்ளூ http://www.livescience.com/health/090910-flu-remedy.html
  11. சீனிவாசன், கே.(2005)'ரோல் ஆப் ஸ்பைசஸ் பியண்ட் புட் ப்ளேவரிங்: நட்ராசியேடிகல்ஸ் வித் மல்டிபில் ஹெல்த் எபெக்ட்ஸ்',புட் சர்வதேச மதிப்புரைகள்,21:2,167 — 188
  12. ரிட்டில், ஜான் எம். 1992. கான்ட்ரசெப்ஷன் அன்ட் அபார்ஷன் ப்ரம் த ஆன்சியன்ட் வேர்ல்டு டு த ரெனென்ஸ்ஸன்சே. ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் பக். 28 அண்ட் ரெபரென்சஸ் தேர்இன்.
  13. டிரெடீஷனல் சிஸ்டம்ஸ் ஆப் மெடிசன் பை அப்டின், எம் இசட் அப்டின், ஒய் பி அப்ரொல். பப்ளிஷ்டு 2006 ஆல்பா சயின்ஸ் இண்டர்நேஷனல் லிமிட்டெட். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7319-707-5
  14. பக். 74, த ஆயுர்வேதிக் குக்புக் பை அம்டே மார்னிங்ஸ்டார் வித் ஊர்மிலா தேசாய், லோட்டஸ் லைட், 1991. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-914955-06-1
  15. ஹேமலா அகர்வால் அண்ட் நிதி கோட்வால். புட்ஸ் யூஸ்டு அஸ் எத்னோ-மெடிசன் இன் ஜம்மு. எத்னோ-மெட், 3(1): 65-68 (2009)
  16. 16.0 16.1 டேஞ்சரஸ் டேஸ்டர்ஸ்: த ஸ்டோரி ஆப் ஸ்பைஸஸ் பை ஆண்ட்ரூ டால்பி. வெளியீடு 2000 யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா பிரஸ் ஸ்பைசஸ்/ ஹிஸ்டரி 184 பக்கங்கள் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-23674-2
  17. அப்ஸ்ட்ராக்ட் ப்ரம் மெடிசனல் ப்ளாண்ட்ஸ் ஆப் த வேர்ல்டு, தொகுதி 3 கெமிக்கல் கான்ஸ்டியூண்ட்ஸ், டிரேடிஷனல் அண்ட் மார்டன் மெடிசினல் யூசஸ். ஹமனா பிரஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58829-129-5 (அச்சு) 978-1-59259-887-8 (ஆன்லைன்) DOI 10.1007/978-1-59259-887-8_6 ஆசிரியர்: இவான் ஏ. ரோஸ் http://www.springerlink.com/content/k358h1m6251u5053/[தொடர்பிழந்த இணைப்பு]
  18. தாமஸ் கார்லைல்ஸ் வெல் நோன் 19 சென்ட்சுரி நாவல் சர்டோர் ரெசார்டஸ் கன்சர்ன்ஸ் எ ஜெர்மன் பிளோசோபர் நேம்டு டேஃபுல்ஸ்ட்ராக்.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்காயம்&oldid=4231037" இலிருந்து மீள்விக்கப்பட்டது