வெண்ணெய் தோசை

வெண்ணெய் தோசை (ஆங்கிலம்:Benne dosa, கன்னடம்: ಬೆಣ್ಣೆದೋಸೆ) என்பது தோசை வகைகளுள் ஒன்று. இது கர்நாடகா மாநிலத்தின் தாவணகெரே நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கர்நாடக உணவாகும்[1][2][3].

தாவணகெரே வெண்ணெய் தோசை
Bennnedose.jpg
மாற்றுப் பெயர்கள்தாவணகெரே வெண்ணெய் தோசை
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதாவணகெரே
முக்கிய சேர்பொருட்கள்அரிசி, வெண்ணெய்
Cookbook: தாவணகெரே வெண்ணெய் தோசை  Media: தாவணகெரே வெண்ணெய் தோசை

சாதாரணமாகச் சுடப்படும் தோசை மேல், எண்ணெய் அல்லது நெய்க்குப் பதிலாக, வெறும் வெண்ணெயை மட்டும் பயன்படுத்தி சுடுவதால் இது இப்பெயரால் அழைக்கப்படுகிறது. தோசைக்கு மேலே தாராளமாக வெண்ணெய் தூவப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதனால் இத் தோசை மென்மையாகவும் மணமாகவும் உள்ளது.

தாவணகெரேயுடன் தொடர்புபடுத்தப்படும் இந்த வெண்ணெய் தோசை, கர்நாடகாவின் பிரபலமான உணவு விடுதிகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் இத் தோசை கிடைக்கும் உணவு விடுதிகள் உள்ளன.[1][2][3]

தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வெண்ணெய் தோசைகள்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணெய்_தோசை&oldid=3084008" இருந்து மீள்விக்கப்பட்டது