பூத கோலா
பூத கோலா அல்லது (பூத கோலம், பூத நேமா) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் துளு நாட்டுப் பகுதிகளான தட்சிணா கன்னடம், உடுப்பி மாவட்டம், கேரளாவின் காசர்கோடு பகுதிகளில் நடத்தப்படும் ஒரு நாட்டுப்புற சமய நாட்டிய நடைமுறையாகும்.[1][2][3][4][5] இதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உண்டு. இது பல வடிவங்களைக் கொண்டுள்ளது. இதில் பொதுவாக கடவுளின் பெயரால் அழைக்கப்படும் சக்தி வழிபாடு நடைபெறுகிறது. பெயர் பெற்ற பல தெய்வங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக கல்குடா, கல்லுர்ட்டி, பஞ்சூர்லி, பிலிபூடா, பிலிச்சாமுண்டி, போபர்யா, ஜூமாடி, தூமாவதி கோர்டப்பு (பாப்புசாமி), விஷ்ணுமூர்த்தி, கோடிசென்னையா முதலிய தெய்வங்கள் ஆகும். பூதகோலா என்பது ஆவி வழிபாட்டின் முக்கிய பகுதியாகும்.[6] இத்தகைய வழிபாடுகள் ஆவியுலகக் கோட்பாடுகளுடன் தொடர்புடையன. பூத கோலா நடனம் மலையாளிகளின் தெய்யம், கன்னடர்களின் பஞ்சூர்லி, நாக ஆராதனை, யக்சகானம் போன்றதே.
கர்நாடகாவில் உள்ள துளு மொழி பேசும் மக்களால் வழிபடப்படும் தெய்வங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இது மிகவும் பகட்டான நடனமாகும். பூதம் என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து பெறப்பட்டது. இது ஆவிகளைக் குறிக்கிறது. துளுவில் கோலா என்ற சொல் ஒரு நாடகம் அல்லது நிகழ்ச்சியைக் குறிக்கிறது. சுருக்கமாக பூத கோலா என்பது துளு மக்களின் ஆவிகள் மற்றும் தெய்வங்களுக்கு மரியாதை செலுத்தும் நடன வழிபாட்டைக் குறிக்கிறது. பூத கோலா நடனம் இசையுடன் கூடிய நடிப்பும் ஆராவாரமும் இருக்கும். நடனக் கலைஞர்கள் ஒரு விரிவான உடையை அணிவார்கள். பழைய துளுவில் உள்ள பாடல்கள் ஆவியின் தோற்றம், அது எப்படி அறியப்பட்டது என்பதைப் பற்றி பேசுகிறது.
துளு நாட்டில் பல தெய்வங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அதன் சொந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த தெய்வங்களில் பெரும்பாலானவை பட்டங்கள் மற்றும் பாத்திரங்களைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் மூதாதையரின் ஆவிகளும் காட்டு விலங்குகளும் வழிபடப்படுகின்றன. பூத கோலங்கள் வணங்கும் தெய்வம் பெரும்பாலும் மக்கள் பிரிவு, அவர்களின் சாதி அல்லது குழுவைப் பொறுத்தது. குடும்ப தெய்வங்கள், கிராம தெய்வங்கள் மற்றும் ராஜ்யங்களின் அரச தெய்வங்கள் கூட உள்ளன.
இந்த ஆட்டத்தின் வடிவத்தின் மையக் கருத்து வேளாண் நிலமும் ஆவிகளின் அம்சமும் ஆகும். ஆவிகள் ஆட்டக் கலைஞரை சிறிது நேரம் சொந்தமாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆட்டக் கலைஞருக்கு ஆவிகளின் விருப்பத்தின்படி செயல்படும் ஆற்றலையும் ஆவி அல்லது தெய்வத்தை ஒரு ஊடகமாக மாற்றும். முழு கிராமமும் பொதுவாக பூதா கோலா ஆட்டத்திற்காக கூடுகிறது.
சிறு திருட்டு முதல் குடும்ப சண்டைகள், கௌரவம் தொடர்பான பிரச்சினைகள் வரையிலான மோதல்கள் போன்ற பிரச்சினைகளை தீர்க்க கிராம மக்கள் பொதுவாக கிராமக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அப்போது பூத கோல ஆட்டம் ஆடுபவரின் வாயிலிருந்து வரும் சொல் புனித கட்டளையாக பார்க்கப்பட்டு அனைவராலும் பின்பற்றப்படுகிறது.
நிலத்தின் வளத்தை மேம்படுத்தவும், நோய் அல்லது துரதிர்ஷ்டத்தைத் தடுக்கவும் ஆலோசனைகளையும் ஆசீர்வாதங்களையும் பூத கோல ஆட்டம் ஆடுபவர்களிடம் கேட்கின்றனர். பூத கோலா நடனக் கலைஞர்கள் கண்ணைக் கவரும் சில ஆடைகளையும் முகமூடிகளையும் வைத்திருக்கிறார்கள்.
பூத கோலாவின் வரையறை
தொகுஇந்த பூதம் எனும் சொல் துளு மொழியில்: ஆவி, கடவுள் என்பதிலிருந்து பெறப்பட்டது. 'கோலா என்ற சொல் பாரம்பரியமாக ஒரு ஆவியை வழிபடுவதைக் குறிக்கிறது. புத்தா கோலா அல்லது நேமா என்பது பொதுவாக வருடாந்திர சடங்கு நிகழ்ச்சியாகும். இதில் உள்ளூர் ஆவிகள் அல்லது தெய்வங்களான நளிகே, பாம்பட அல்லது பரவா சமூகங்கள் போன்ற சில அட்டவணைப்படுத்தப்பட்ட சாதிகளின் பூசாரிகளால் வழிப்படுத்தப்படுகிறது. துளு நாட்டுப் பகுதியில் உள்ள பிராமணர் அல்லாத துளு மக்களிடையே சிலை வழிபாடு பரவலாக உள்ளது. கோலா என்ற சொல் பாரம்பரியமாக ஒரு ஆவியை வழிபடுவதைக் குறிக்கிறது. ஆனால் நேமா என்பது பல ஆவிகளை வழிபடுத்துவதை உள்ளடக்கியது.
செயல்திறன்
தொகுபூத கோலா அல்லது தெய்வீகச் சடங்கு நிகழ்ச்சியானது இசை, நடனம், மந்திரம் மற்றும் விரிவான வண்ண ஆடைகள், முகமூடிகள் உள்ளடக்கியது. பழைய துளுவில் உள்ள நூல்கள் தெய்வத்தின் தோற்றத்தை விளக்குகின்றன. அது எப்படி அதன் தற்போதைய இடத்திற்கு வந்தது என்பதைக் கூறுகின்றன. இக்காப்பியங்கள் பத்தனை எனப்படும்.[7][8][9][10][11][12][13][14][15][16][17][18][19][20]
கடவுளின் வகைகள்
தொகுபிரம்மமேரு, கொடமணிதாய, குக்கிந்தாய, ஜூமாதி, சரள ஜூமாதி, பஞ்ச ஜூமாதி, லெக்கிசிரி, பஞ்சூர்லி குப்பே , ரக்தாபஞ்சூர்லி, ஜாரந்தயா, உருந்தரய்யா, ஹொசதேவதா (போகுவாடா), துக்கட்டேரி, குளிகா, பப்பரிய, நீச்சா, துக்கலயா, மகிசந்தாய, வார்த்தே, கொரகஜ்ஜா, சாமுண்டி, பைதேருகுலு, உக்கத்திரி, கல்லுருட்டி, ஷிராடி, உள்ளால்தி, ஒக்குபல்லாளா, கொர்தப்பு, உள்ளாயா, கொரதி, சிரி, மந்திரிதேவதா மற்றும் ரக்தமாதி ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. பூதங்கள் அல்லது ஆவிகள் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.
ஜுமாதியின் சில நிகழ்வுகள் கழுத்துக்குக் கீழே (மார்பகங்கள்) பெண்ணாகக் குறிப்பிடப்படுகின்றன. அதே சமயம் ஆணின் தலையில் மீசை இருக்கும். மானுடவியல் தெய்வங்கள் (பூதங்கள்), கலப்பு வடிவங்கள் கொண்டுள்ளது. (உதாரணமாக, காசர்கோடு பகுதியில் கொட்லமொகரு மலராயா காட்டுப்பன்றியின் தலையும் ஒரு பெண்ணின் உடலைக் கொண்டுள்ளது).
மக்கள் வழிபடும் முக்கியத்துவத்தைப் பொறுத்து, பூதஙகள் அல்லது தெய்வங்கள் குடும்பத் தெய்வங்களாக (குடும்ப பூதம்), உள்ளூர் அல்லது கிராம தெய்வங்களாக (ஜாகேதா பூதம், ஊரத பூதம்)இருக்கலாம்.
பூத வழிபாட்டின் வகைகள்
தொகுதெற்கு கன்னடத்தில் பூத கோலா, பாண்டி, நேமா, அகெலு-தம்பிலா என நான்கு வகைப்படும்.
- பூத கோலா: கிராமக் கடவுள்கள்களுக்காக நடனம் (கோலா) ஆடப்படும்.
- பண்டி: பண்டி என்பது கோலாவைப் (நடனம்) போன்றது. அதன் மீது ஒரு பருமனான தேர் வரையப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் நல்கே, பாம்படா, அஜாலா சமூகங்களைச் சேர்ந்த ஒரு பேயைக் குறிக்கிறது.
- நேமா: நேமா என்பது ஆவிகளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு தனிப்பட்ட விழா ஆகும். இது மிகவும் விருப்பமான ஒருவரின் வீட்டில் நடைபெறும்.
- அகெலு-தம்பிலா: இது குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே செய்யப்படும் பூஜையாகும், இதில் அரிசி, உணவுகள், இறைச்சி, மதுபானம் ஆகியவை வாழை இலையில் பரிமாறப்பட்டு, ஆவிகள், தெய்வங்கள், மறைந்த மூதாதையர்களுக்கு ஆண்டுதோறும் அல்லது விருப்பங்கள் நிறைவேறியவுடன் வழங்கப்படுகின்றன.
அண்டவியல்
தொகுஇனவியலாளர் பீட்டர் கிளாசின் கூற்றுப்படி, துளு பத்தண்ணா ஒரு பிரபஞ்சவியலை வெளிப்படுத்துகிறது. அது முற்றிலும் திராவிடமானது மற்றும் புராண இந்து அண்டவியலில் இருந்து வேறுபட்டது. உலகம் இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: முதலில், சாகுபடி செய்யப்பட்ட நிலம் (கிராமம்), இரண்டாவது தரிசு நிலங்கள் மற்றும் காடுகள், மூன்றாவது ஆத்மாக்களின் சாம்ராஜ்யம் (பூத லோகம்). கிராமம் மற்றும் காடு ஆகியவை உறுதியான உலகின் ஒரு பகுதியாகும். அதே சமயம் பூத-லோகம் அவற்றின் சுருக்கமான இணை ஆகும். காடு மற்றும் கிராமப்புறங்கள் ஆக்கிரமிப்பு, நோய், பசி மற்றும் இறப்பு ஆகியவற்றால் தொடர்ந்து மக்கள் அச்சுறுத்தப்படுவதைப் போலவே, உறுதியான உலகம் ஆவிகளின் அருவமான உலகத்தால் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறது. காடு உலகம் என்பது "காட்டு உலகம், ஒழுங்கற்ற, கட்டுப்பாடற்ற, பசி அழிவு".
எனவே காட்டுலகமும், ஆவி உலகமும் ஒன்றையொன்று பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. உழவனை அச்சுறுத்தும் வன விலங்குகளான புலி, பாம்பு, காட்டுப்பன்றி, கரடி, காட்டெருமைகளிடமிருந்து அவனது வயல்களை பாதுகாப்பதாற்கான அந்தந்த விலங்குகளின் முகத்தை முகமூடியான அணிந்து சமயச் சடங்குளில் பங்களிப்பது பன்ருளி போன்றவற்றின் பிரதிபலிப்புகளாகும்.
படக்காட்சிகள்
தொகு-
பூத வழிபாடான ஜூமுமதி பூத நடனம் ஆடுபவரின் அலங்காரம்
-
கோட்டி மற்றும் சென்னய்யா நடனம் ஆடுபவர் தானாக செய்து கொள்ளும் உடை அலங்காரம்.
-
வீட்டுக் கோயில், பெள்ளெ, உடுப்பி
-
கல்குடா பூதத்தின் பெண் இணையான கல்லுர்த்தி பூதம், ஒரு சிற்பியின் உடலில் தெய்வீக ஆவியை இறக்குகிறது.
-
பில்லவா சமூகத்தின் கோட்டி மற்றும் சென்னைய்யா எனும் கதாநாயகர்கள்
-
காட்டின் தெய்வமான குளிகன்
-
பன்றித் தலையின் உலோக முகமூடி அணிந்தவர்
-
சப்பரத்தில் வெள்ளிப் பன்றித் தலையின் உலோக முகமூடி
-
சப்பரத்தில் பன்றித் தலையின் உலோக முகமூடி
-
அரச குடும்ப காவல் தெய்வத்தின் முகமூடி
-
மொகவீர சமூகத்தின் காவல் தெய்வம்
-
பூத கோலா நடனத்தின் போது வண்ணப்பூக்களாலும் இலைகளாலும் செய்யப்படும் அலங்காரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Brückner, Heidrun (1987). "Bhuta Worship in Coastal Karnataka: An Oral Tulu Myth and Festival Ritual of Jumadi". Studien zur Indologie und Iranistik 13/14: 17–37.
- ↑ Brückner, Heidrun (1992). "Dhumavati-Bhuta" An Oral Tulu-Text Collected in the 19th Century. Edition, Translation, and Analysis.". Studien zur Indologie und Iranistik 13/14: 13–63.
- ↑ Brückner, Heidrun (1995). Fürstliche Fest: Text und Rituale der Tuḷu-Volksreligion an der Westküste Südindiens. Wiesbaden: Harrassowitz. pp. 199–201.
- ↑ Brückner, Heidrun (2009a). On an Auspicious Day, at Dawn ... Studies in Tulu Culture and Oral Literature. Wiesbaden: Harrassowitz.
- ↑ Brückner, Heidrun (2009b). "Der Gesang von der Büffelgottheit" in Wenn Masken Tanzen – Rituelles Theater und Bronzekunst aus Südindien edited by Johannes Beltz. Zürich: Rietberg Museum. pp. 57–64.
- ↑ Ishii, Miho (2015). "Wild Sacredness and the Poiesis of Transactional Networks: Relational Divinity and Spirit Possession in the Būta Ritual of South India.". Asian Ethnology 74 (1): 101–102. doi:10.18874/ae.74.1.05.
- ↑ Claus, Peter J. (1978). "Heroes and Heroines in the Conceptual Framework of Tulu Culture". Journal of Indian Folkloristics 1 (2): 28–42.
- ↑ Claus, Peter J. (1978). "Oral Traditions, Royal Cults and Material for the Reconsideration of the Caste System in South India". Journal of Indian Folkloristics 1 (1): 1–39.
- ↑ Claus, Peter J. (1979). "Spirit Possession and Spirit Mediumship from the Perspective of Tulu Oral Traditions". Culture, Medicine, and Psychiatry 3 (1): 29–52. doi:10.1007/BF00114691. பப்மெட்:498800.
- ↑ Brückner, Heidrun; Rai, Vivek (2015). The Tübingen Tulu Manuscript – Two South Indian Oral Epics Collected in the 19th Century. Wiesbaden: Harrassowitz.
- ↑ Brückner, Heidrun. (1993). "Kannālaye: The place of a Tuḷu Pāḍdana among Interrelated Oral Traditions." In Flags of Flame: Studies in South Asian Folk Culture, edited by Heidrun Brückner, Loyhar Lutze, and Aditya Malik. New Delhi: Manohar. pp. 283–334.
- ↑ Claus, Peter (1975). "The Siri Myth and Ritual: A Mass Possession Cult of South India.". Ethnology 14 (1): 47–58. doi:10.2307/3773206. https://archive.org/details/sim_ethnology_1975-01_14_1/page/47.
- ↑ Suzuki, Masataka (2008). "Bhūta and Daiva: Changing Cosmology of Rituals and Narratives in Karnataka.". Senri Ethnological Studies 71: 51–85.
- ↑ Claus, Peter James (1991a). "Kin Songs." In Gender, Genre, and Power in South Asian Expressive Traditions edited by Arjun Appadurai, Frank K. Korom and Margaret A. Mills. Delhi: Motilal. pp. 136–177.
- ↑ Claus, Peter J. (1991b). "Tulu PaaDdanas: Text and Performance." In Perspectives on Dakshina Kannada and Kodagu edited by the Editorial Committee. Mangalagangotri: Mangalore University Decennial Volume, Mangalore University. pp. 1–10.
- ↑ Claus, Peter J. (1993a). "GUNDERT.htm". class.csueastbay.edu. Archived from the original on 8 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Claus, Peter J. (1993b). "Text Variability and Authenticity in the Siri Cult." In Flags of Fame edited by Heidrun Brücker. New Delhi: Manohar. pp. 335–374.
- ↑ Claus, Peter J. (1997). "KUMAR and the Siri Myth / Ritual". class.csueastbay.edu. Archived from the original on 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Claus, Peter James (2001). "Variability of the Tulu paddanas.". Cahier de Littérature Orale 48: 129–158.
- ↑ Claus, Peter J. (1986). "Translating Performance." In Coastal Karnataka. Studies in Folkloristic and Linguistic Traditions of Dakshina Kannada Region of the Western Coast of India edited by U. P. Upadhyaya. Udupi: M. G. M. College Regional Research Centre. pp. 147–154.