சிவல்லி பிராமணர்கள்

சிவல்லி பிராமணர் (Shivalli Brahmins) என்பவர்கள் துளு நாட்டில் வாழும் ஒரு இந்து சமூகமாகும். அவை இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதலாவது உடுப்பியின் வைணவத் துறவி மத்துவாச்சாரியரால் நிறுவப்பட்ட துவைதத் தத்துவத்தை பின்பற்றுபவர்கள் சிவல்லி மத்வ பிராமணர்கள் என்றும், இரண்டாவதாக ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் சிவல்லி சுமார்த்தப் பிராமணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் மத்வ பிராமணர்கள், அவர்களில் சிலர் மட்டுமே சுமார்த்தர்கள். [1] [2]

சிவல்லி பிராமணர்கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
உடுப்பி மாவட்டம், கருநாடகம்
தெற்கு கன்னட மாவட்டம், கருநாடகம்
காசர்கோடு மாவட்டம், கேரளம்
சிமோகா மாவட்டம், கருநாடகம்
மொழி(கள்)
துளு , கன்னடம்
சமயங்கள்
இந்து சமயம்
பிரிவின் அடிப்படையில்:
சுமார்த்தம்
மத்வ பிராமணர்கள்
வேதம்
இருக்கு வேதம்
யசுர் வேதம்

சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள்

தொகு

சடங்குகள்

தொகு
 
ஒரு இளம் சிவல்லி பிராமணச் சிறுவன் தனது உபநயனத்தின் போது

சிவல்லி பிராமண ஆண்கள் ஏழு வயதாகும்போது உபநயனம் என்னும் சடங்கை செய்து கொண்டு வேதம் படிப்பதற்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்கிறார்கள். [3] இது பிரம்மோபதேசம் என்றும் அழைக்கப்படுகிறது. சிறுவனின் இடது தோள்பட்டையில் மூன்று பருத்தி இழைகளைக் கொண்ட ஒரு புனித நூலை அணிவிப்பதே உபநயனத்தின் முக்கிய சடங்காகும். இவ்வாறு உபநயனம் செய்விக்கப்பட்ட சிறுவன் பிரம்மச்சாரி என அழைக்கப்படுகிறான். தினமும் மூன்றுவேளை சந்தியாவந்தனம் செய்து காயத்திரி மந்திரம் செபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறான். [4]

துளு நாட்டில் (தற்போதைய உடுப்பி, தென் கன்னடம் மற்றும் காசர்கோடு மாவட்டங்களை உள்ளடக்கியது) ஒவ்வொரு சிவல்லி மத்வப் பிராமணக் குடும்பமும் அதன் சொந்த தெய்வங்களை கொண்டிருக்கும். இந்த தெய்வங்களை வீட்டு உறுப்பினர்கள் வணங்கினர். இன்று நவீனமயமாக்கல் காரணமாக அவை சில வீடுகளில் மட்டுமே பின்பற்றப்படுகின்றன.

திருமணம்

தொகு

சிவல்லி மத்வ பிராமணர்களின் இன்றைய திருமணங்கள் நான்கு நாள் விழாவாகும். இது இன்றைய வாழ்க்கையின் வேகமான வேகத்தால் சில நேரங்களில் ஒரே நாளில் ஒடுக்கப்படுகிறது. [5] மூன்று நாள் சடங்கில், திருமண செயல்முறை நாந்தி என்ற சடங்குடன் தொடங்குகிறது (அதாவது ஆரம்பம் என்று பொருள்). நாந்தி, மணமகன் மற்றும் மணமகளின் வீடுகளில் தனித்தனியாக நடைபெறுகிறது. அதே நேரத்தில், மணமகனும், மணமகளும் எண்ணெய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றைப் பூசி, சூடான நீரில் குளிக்கிறார்கள். பிற சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன. திருமணமானது ஒரு கோயில், மண்டபம் அல்லது அரங்கத்தில் முகூர்த்தம் என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறுகிறது. பொதுவாக திருமணமான மறுநாளே, மணமகனின் வீட்டில் பிகாரா அதனா (ஒரு வகையான திருமண வரவேற்பு) என்று அழைக்கப்படும் ஒரு விழா நடைபெறுகிறது. மேலும் சத்தியநாராயண பூசையும், பிரசாத உணவைத் தொடர்ந்து பிற சடங்குகளும் நடைபெறுகின்றன.

பண்டிகைகள்

தொகு

சிவல்லி பிராமணர்கள் விநாயக சதுர்த்தி, தீபாவளி, நவராத்திரி, சங்கராந்தி, மத்வநவமி, கிருட்டிண செயந்தி, மகா சிவராத்திரி, பிசு பர்பா (துளு புத்தாண்டு), இராம நவமி, அனுமான் செயந்தி போன்ற அனைத்து முக்கிய இந்து பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். இவர்கள் நாகரதானையும் பூட்டா கோலாவின் சடங்குகளையும் நம்புகிறார்கள்.  

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. B. N. Sri Sathyan. Karnataka State Gazetteer: South Kanara.
  2. Krishnendu Ray. Curried Cultures: Globalization, Food, and South Asia.
  3. "Upanayana Ceremony".
  4. "Upper castes families look to other communities". deccanchronicle.com. Archived from the original on 2016-01-14. பார்க்கப்பட்ட நாள் 2010-02-01.
  5. Milton, Lawrence (2009-03-29). "They-sell-food-spread-hospitality". timesofindia.indiatimes.com இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811033029/http://articles.timesofindia.indiatimes.com/2009-03-29/mysore/28013336_1_heritage-city-mysore-dakshina-kannada-district. பார்த்த நாள்: 2010-02-02. 

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவல்லி_பிராமணர்கள்&oldid=3523112" இலிருந்து மீள்விக்கப்பட்டது