ஹனுமான் ஜெயந்தி
இந்துப் பண்டிகைகளில் ஒன்று.
அனுமனை நினைவு கூர அனுமான் ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்.[1]
![]() அனுமார் கோயில், சரங்பூர் | |
கடைபிடிப்போர் | இந்துக்கள் |
---|---|
வகை | சமயம் சார்ந்த விழா |
கொண்டாட்டங்கள் | ஒரு நாள் |
தொடக்கம் | மார்கழி |
முடிவு | அமாவாசை |
நாள் | மூல நட்சத்திரம் |
நிகழ்வு | ஆண்டிற்கு ஒருமுறை |
ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர்.[2][3][4]
மேற்கோள்கள்தொகு
- ↑ "திருமலையில் அனுமன் ஜெயந்தி".
- ↑ "அனுமனுக்கு வெற்றிலை மாலை ஏன்?".
- ↑ "வெண்ணெய், வடை மாலை சாற்றுவது ஏன்?".
- ↑ Webdunia. "இன்று அனுமன் ஜெயந்தி".