முதன்மை பட்டியைத் திறக்கவும்

மகர சங்கராந்தி

சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாள்

மகர சங்கராந்தி, அல்லது சங்கராந்தி சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். இது துவக்கத்தில் குளிர்கால கதிர்த்திருப்பத்துடன் இயைந்திருக்கலாம். தற்போது இது சனவரி 14 அன்று நிகழ்கிறது. இன்றிலிருந்து பகல் நேரம் கூடுதலாவது கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால் அறுவடை திருவிழாவாகவும் சூரியனுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

மகர சங்கராந்தி
Kite shop in Lucknow.jpg
வண்ணமய பட்டங்கள் லக்னோ கடையொன்றில் விற்கப்படுதல்
அதிகாரப்பூர்வ பெயர்மகர சங்கராந்தி
பிற பெயர்(கள்)சகாரத்
கடைபிடிப்போர்இந்துக்கள், இந்தியர்கள்
வகைகாலநிலை, வழமை
முக்கியத்துவம்அறுவடை திருநாள், குளிர்கால கதிர்த்திருப்பம்
கொண்டாட்டங்கள்பட்டம் விடுதல்
நாள்சனவரி 14

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நோபாளம், மியான்மர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும் கூட மகர சங்கராந்தி விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

புவி சூரியனைச் சுற்றி வந்தாலும் இந்திய தொன்மவியலில் பனிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது. சமசுகிருதத்தில் சங்கரமண எனில் நகரத் துவங்கு எனப் பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று.இந்தியாவின் பரந்த நிலப்பரப்பு,வானிலை மற்றும் பன்முக பண்பாடு காரணமாக பல்வேறு பெயர்களிலும் பல்வேறு வரலாறுகளுடனும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, மகர சங்கராந்தி அன்று துவங்குகிறது.

வட்டார வழக்கங்கள்தொகு

 
வாரணாசி கூரைகள்மீது பட்டம் விடுதல்

சங்கராந்தி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் பலவாறு கொண்டாடப்படுகிறது:

இந்தியாவில்தொகு

இந்தியாவில் பல பெயர்களில் இந்த அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

பிற நாடுகளில்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகர_சங்கராந்தி&oldid=2305091" இருந்து மீள்விக்கப்பட்டது