அரியான்வி திரைப்படத்துறை

அரியான்வி திரைப்படத்துறை (Haryanvi cinema) என்பது இந்தியத் திரைப்படத்துறையில் அரியான்வி மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங்களைக் குறிக்கிறது. இந்திய மாநிலமான அரியானா மாநிலத்தில் அரியான்வி திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

வரலாறு தொகு

1984 இல் வெளியான 'சந்திரவால்'[1][2] என்ற திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற முதல் அரியான்வி மொழித் திரைப்படம் ஆகும்.[3] 2000 ஆம் ஆண்டில் 'அஸ்வினி சவுத்ரி' இயக்கத்தில், நடிகர் 'அசுதோஷ் ராணா' நடித்து வெளியான 'லாடோ' என்ற திரைப்படம் மற்றொரு வெற்றிகரமான அரியான்வி திரைப்படம் ஆகும். இது தேசிய திரைப்பட விருதில் புதுமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருதை வென்றுள்ளது.[4] இதுவே தேசிய விருது பெற்ற முதல் அரியான்வி மொழியித் திரைபபடம் ஆகும்.[5]

2014 இல் வெளியான 'பக்டி த ஹொனோர்' என்ற திரைப்படம் 62 வது தேசிய திரைப்பட விருது விழாவில் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளது. அதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் 'சத்ரங்கி' என்ற திரைப்படம் சிறந்த படத்திற்கான 63 வது தேசிய திரைப்பட விருதை வென்றுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. ""Chandrawal - Central Board of Film Certification"". Archived from the original on 5 April 2012. பார்க்கப்பட்ட நாள் 19 September 2011.
  2. Complete Index To World Film (CITWF). http://www.citwf.com/film58065.htm. 
  3. "Haryana may set up board to promote Haryanvi films". The Hindu. 3 October 2010 இம் மூலத்தில் இருந்து 8 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101008025813/http://www.hindu.com/2010/10/03/stories/2010100359290700.htm. பார்த்த நாள்: 17 March 2011. 
  4. Desk, Online (24 March 2015). "Complete List of The 62nd National Film Awards". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 12 August 2015.
  5. "President Honours Cinematic Excellence at 62nd National Film Awards - May 03,2015". outlookindia.com. 10 August 2015. பார்க்கப்பட்ட நாள் 12 August 2015.