அரியான்வி
அரியான்வி (தேவநாகரி: हरियाणवी ஹரியாண்வி), இந்திய - ஆரிய மொழியாகும். இந்த மொழியை பேசும் மக்கள் இந்திய மாநிலங்களான அரியானாவிலும், தில்லியிலும் வாழ்கின்றனர். இந்த மொழியை தேவநாகரி எழுத்துகளில் எழுதுகின்றனர். இதை இந்தியின் வட்டார வழக்காகவும் கருதுகின்றனர். இது பிராஜ் பாஷா எனும் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது.[4] இந்த மொழியில் உள்ள 60% சொற்கள் பாக்ரி மொழியிலும் உள்ளன.[5]
அரியான்வி | |
---|---|
हरियाणवी | |
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | அரியானா, தில்லி |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (13 மில்லியன் (1.3 கோடி) காட்டடப்பட்டது: 1992)[1] மக்கள்தொகை கணக்கெடுப்பில் அரியான்வி மொழி இந்தியின் வட்டார மொழியாக குறிப்பிடப்பட்டுள்ளது.[2] |
இந்தோ - ஈரோப்பியம்
| |
தேவநாகரி | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | அதிகாரப்பூர்வ மொழியாக இல்லை |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | bgc |
மொழிக் குறிப்பு | hary1238[3] |
இந்தியாவில் ஹரிவி மொழி பகுதி |
அடிப்படை வாக்கியங்கள்
தொகுஇந்த மொழியின் அடிப்படை வாக்கியங்கள் சிலவற்றை எடுத்துக்காட்டாக தந்துள்ளோம்.
ஹரியாண்வி | பொருள் |
---|---|
து கித் ஜாவே சே? | நீ எங்கே போகிறாய்? |
து கே கரே சே? | நீ என்ன செய்கிறாய்? |
கே நாம் சே தேரா? | உன் பெயர் என்ன? |
கே காயா தானே? | நீ என்ன சாப்பிட்டாய்? |
மன்னே கோனி பேரா | எனக்கு தெரியாது |
யா மாரி சோரி சே | அவள் என் மகள் |
யா மாரா சோரா சே | அவன் என் மகன் |
சல் சலா கே | வா,போகலாம் |
சுப் ரே | அமைதியாய் இரு |
சான்றுகள்
தொகு- ↑ அரியான்வி reference at எத்னொலோக் (16th ed., 2009)
- ↑ [1]
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Haryanvi". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ http://www.ethnologue.com/show_language.asp?code=bgc
- ↑ http://www.ethnologue.com/show_language.asp?code=bgq
இணைப்புகள்
தொகு- அரியான்வி மொழி பாடல்களும், வீடியோக்களும் பரணிடப்பட்டது 2016-01-13 at the வந்தவழி இயந்திரம்