பாக்ரி மொழி
ராஜஸ்தானி மொழியில் ஒரு கிளை மொழி
பாக்ரி மொழி, ராஜஸ்தானி மொழியின் ஒரு கிளை மொழி ஆகும். இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இம் மொழியைச் சுமார் ஐந்து மில்லியன் பேர் வரை பேசிவருகின்றனர். இம் மொழி பேசுவோர், ராஜஸ்தானின் ஹனுமன்கர், ஸ்ரீகங்காநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஹரியானாவின், சிர்சா, ஹிசார் ஆகிய மாவட்டங்களிலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஃபைரோஸ்பூர், முக்த்சார் மாவட்டங்களிலும், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பின் பகவல்பூர், பகவல்நகர் ஆகிய இடங்களிலும் கூடுதலாக வாழ்கின்றனர். இம் மொழி எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்னும் ஒழுங்கிலமைந்த சொற்றொடர்களைக் கொண்ட இந்தோ-ஆரிய மொழியாகும்.
பாக்ரி மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | bgq |
ISO 639-3 | bgq |