பெண்பால்
தமிழ்மொழியில் மக்களை உணர்த்தும் சொல் உயர்திணை. இதில் பெண்ணைக் குறிக்கும் சொல் பெண்பால். இது பெண் ஒருத்தியை மட்டுமே குறிக்கும். அவள், இவள், உவள், எவள், பேடி, மகள், மகள், மகடூஉ போன்றவையும் உயர்திணைப் பெயர்கள் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1]
வினைச்சொற்களில் அள், ஆள் என முடியும் சொற்கள் பெண்பாலைக் குறிப்பன. [2]
உழத்தி, ஒருத்தி, வந்தனள், வந்தாள் என்பன போல் வருவன பெண்பால்.