தமிழ் இலக்கணப் படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. எழுவாய் என்பது ஒரு சொற்றொடரில் செயலை காட்டும் சொல்மீது யார், எது எவை என வினவும் போது கிடைக்கும் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற சொற்றொடரில் 'கண்ணன்' எழுவாய் ஆகும். பெரும்பான்மையாக எழுவாய் தொடரின் முதலில் வரும். [1]

தோன்றா எழுவாய்

தொகு

சொற்றொடரில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது காணப்படுமாயின் அது 'தோன்றா எழுவாய்' எனப்படும்.எ.கா: "தூவலை என்னிடம் தந்தான்." இங்கு யார் தந்தான்? என வினவினால் 'அவன்' அல்லது 'ஒரு பெயர்' பதிலாக வரும். இதுவே இ ங்கு எழுவாய் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "a05112l3". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-11-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுவாய்&oldid=4151086" இலிருந்து மீள்விக்கப்பட்டது