ஆண்பால்
தமிழ்மொழியில் மக்களை உணர்த்தும் சொல் உயர்திணை. இவற்றில் ஆணைக் குறிக்கும் சொல் ஆண்பால். இது ஆண் ஒருவனை மட்டுமே குறிக்கும். அவன், இவன், உவன், எவன், மகன், பேடன், ஆடூஉ போன்றவையும் உயர்திணைப் பெயர்கள் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1]
வினைச்சொற்களில் அன், ஆன் என முடியும் சொற்கள் ஆண்பாலைக் குறிப்பன. [2]
கந்தன், ஒருவன், வந்தான் எனபன போன்று வருவன ஆண்பால்.