இரவிக்குமார் (நடிகர்)
தென்னிந்திய திரைப்பட நடிகர்
இரவிக்குமார் மேனன் (Ravikumar Menon, 1953/1954 – 4 ஏப்ரல் 2025) இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் மலையாளம், தமிழ்த் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.[1] நூற்றிற்கும் மேற்பட்ட தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1970-களில் இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். உல்லாச யாத்திரா (1975) என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார்.[2]
இரவிக்குமார் | |
---|---|
பிறப்பு | 1953/1954 திருச்சூர், கேரளம், இந்தியா |
இறப்பு | 4 ஏப்பிரல் 2025 (அகவை 71) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1968–2024 |
பிள்ளைகள் | 2 |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇரவிக்குமார் கேரளம், திருச்சூரில் பிறந்தவர். 2025 ஏப்பிரல் 4 அன்று அவர் நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.[3][4]
திரைப்படவியல்
தொகுதமிழ்த் திரைப்படங்கள்
தொகு- சுவாதி நட்சத்திரம் (1974)
- அவர்கள் (1977)
- அவளின் இரவுகள் (1978)
- அலாவுதீனும் அற்புத விளக்கும் (1979)
- பகலில் ஒரு இரவு (1979)
- ஆனந்த ராகம் (1982)
- கண்ணோடு கண் (1983)
- மலபார் போலீஸ் (1999)
- பொண்ணு வீட்டுக்காரன் (1999)
- ரோஜாவனம் (1999)
- வண்ணத் தமிழ்ப்பாட்டு (2000)
- ரிஷி (2001)
- யூத் (2002)
- மாறன் (2002)
- ரமணா (2002)
- லேசா லேசா (2003)
- விசில் (2003)
- ஒரு கல்லூரியின் கதை (2005)
- குண்டக்க மண்டக்க (2005)
- ஜூன் ஆர் (2006)
- சிவாஜி (2007)
- வியாபாரி (2007)
- என் உயிரினும் மேலான (2007)
- வீட்ல விசேஷம் (2022)
தொலைக்காட்சி
தொகுஆண்டு | தொடர் | பாத்திரம் | அலைவரிசை | மொழி |
---|---|---|---|---|
1997 | இயந்திரப் பறவை | திரு. எஸ். பி. எஸ் | ராஜ் தொலைக்காட்சி | தமிழ் |
1999-2000 | ஜன்னல்: மரபுக் கவிதைகள் | நெல்லை அப்பன் | சன் தொலைக்காட்சி | |
2000-2001 | சித்தி | ஈஸ்வரபாண்டியன் / அன்புச்சேரன் | ||
2005-2006 | செல்வி | செல்வியின் தந்தை | ||
2007-2008 | அரசி | |||
2008 | கஸ்தூரி | |||
2009 | இதயம் | கங்காதரன் | ||
2009–2013 | செல்லமே | ஆவுடையப்பன் | ||
2011 | மஞ்சள் மகிமை | கலைஞர் தொலைக்காட்சி | ||
2011 | அக்னிபுத்ரி | ஏஷ்யாநெட் | மலையாளம் | |
2012 | சந்திரலேகா | சகாவு | ஏஷ்யாநெட் | மலையாளம் |
2013–2018 | வாணி ராணி | மாணிக்கம் | சன் தொலைக்காட்சி | தமிழ் |
2014–2016 | என் இனிய தோழியே | ராஜ் தொலைக்காட்சி | ||
2019–2020 | சாக்லேட் | பரேஸ்வரம் | சூர்யா தொலைக்காட்சி | மலையாளம் |
2019 | அய்யப்ப சரணம் | முனி | அம்ருதா தொலைக்காட்சி | |
2019 | அரண்மனை கிளி | சித்தர் | விஜய் தொலைக்காட்சி | தமிழ் |
2019–2020 | சாக்லேட் | நாராயணன் | சன் தொலைக்காட்சி | |
2020- | குடதாயி | பிளவர்ஸ் தொலைக்காட்சி | மலையாளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "I love playing negative roles: Ravikumar Menon".
- ↑ "Aaraattu: Mohanlal to reunite with THIS veteran star after 39 years for the upcoming action entertainer?". 2 February 2021.
- ↑ "Malayalam actor Ravikumar passes away at 71". The New Indian Express (in Indian English). 4 April 2025.
- ↑ "Noted Malayalam and Tamil actor Ravikumar passes away". தி இந்து (in Indian English). 4 April 2025.