ராம்பூர், உத்தரப் பிரதேசம்

ராம்பூர் (Rampur) வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரோகில்கண்ட் பிரதேசத்தில், மொராதாபாத் கோட்டத்தில் அமைந்த இராம்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்திய விடுதலைக்கு முன்னர் இந்நகரம் இசுலாமிய நவாப்புகள் ஆண்ட இராம்பூர் இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது.

ராம்பூர்
நகரம்
நடுவில்:ஜும்மா மசூதி, கடிகாரச் சுற்றுப்படி மேலிருந்து:இராம்பூர் இரயில்வே நிலையம், முகமதலி ஜௌகர் பல்கலைக்கழகம், ராசா நூலகம், ஆரியபட்டர் கோளரங்கம், காந்தி சமாதி
நடுவில்:ஜும்மா மசூதி, கடிகாரச் சுற்றுப்படி மேலிருந்து:இராம்பூர் இரயில்வே நிலையம், முகமதலி ஜௌகர் பல்கலைக்கழகம், ராசா நூலகம், ஆரியபட்டர் கோளரங்கம், காந்தி சமாதி
ராம்பூர் is located in உத்தரப் பிரதேசம்
ராம்பூர்
ராம்பூர்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராம்பூர் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°48′N 79°00′E / 28.8°N 79.0°E / 28.8; 79.0
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்இராம்பூர்
பிரதேசம்ரோகில்கண்ட்
கோட்டம்மொரதாபாத் கோட்டம்
பெயர்ச்சூட்டுராஜா ராம் சிங்
அரசு
 • நிர்வாகம்ராம்பூர் நகராட்சி R
பரப்பளவு
 • மொத்தம்84 km2 (32 sq mi)
பரப்பளவு தரவரிசை43
ஏற்றம்288 m (945 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்325,248
 • அடர்த்தி3,900/km2 (10,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்244901
தொலைபேசி குறியீடு0595
வாகனப் பதிவுUP-22
பாலின விகிதம்1000/927 /
எழுத்தறிவு55.08%
நகராட்சிராம்பூர் நகராட்சி
தில்லியிலிருந்து தொலைவு186 கிலோமீட்டர்கள் (116 mi)
லக்னோவிலிருந்து தொலைவு314 கிலோமீட்டர்கள் (195 mi)
இணையதளம்rampur.nic.in

2011-இல் இந்நகரத்தின் மக்கள் தொகை 3,25,248 ஆகும்.[1]இந்நகரம் இசுலாமிய மக்கள் பெரும்பான்மை கொண்ட நகரம் ஆகும்.[2]

இராம்பூர் கோட்டை, 1911

மக்கள் தொகை பரம்பல் தொகு

ராம்பூரின் சமயம்[3]
சமயம் விழுக்காடு
முஸ்லீம்கள்
70.02%
இந்துக்கள்
28.46%
சீக்கியர்கள்
1.00%
கிறித்தவர்கள்
0.24%
சமணர்கள்
0.17%
பிறர்†
.11%
Distribution of religions
Includesபௌத்தர்கள் (<0.03%).

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இராம்பூர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 3,25,248 ஆகும்.[4] பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 53.7% ஆக உள்ளது. மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 37,945 (11.7%) ஆக உள்ளனர். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.[5]

போக்குவரத்து தொகு

தொடருந்து தொகு

 
இராம்பூர் தொடருந்து நிலையம்

லக்னோ-மொராதாபாத் இருப்புப் பாதையில் அமைந்த இராம்பூர் தொடருந்து நிலையம்[6] மூன்று நடைமேடைகளைக் கொண்டது. இது இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்று வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பகுதிகளை தொடருந்துகள் மூலம் இணைக்கிறது. இதனருகில் உள்ள சந்திப்பு தொடருந்து நிலையம் 30 கிமீ தொலைவில் உள்ள மொராதாபாத்தில் உள்ளது.

சாலைப் போக்குவரத்து தொகு

பஞ்சாப் மாநிலத்தின் மலௌத்திலிருந்து, உத்தராகண்ட் மாநிலத்தின் பிதௌரகட்டிற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 9 இராம்பூர் வழியாகச் செல்கிறது.[7]

வானூர்தி நிலையம் தொகு

ராம்பூருக்கு அருகமைந்த வானூர்தி நிலையங்கள்:-

அருகமைந்த வானூர்தி நிலையம் சுருக்க எழுத்து தொலைவு (கிமீ)
புதுதில்லி
DEL
187
பந்த்நகர்
PGH
58
டேராடூன்
DED
175
சண்டிகர்
IXC
300

தட்ப வெப்பம் தொகு

இராம்பூர் நகரத்தின் கோடைக்கால வெப்பம் 43 °C முதல் 30 °C வரை இருக்கும். குளிர்கால வெப்பம் 25 °C to 5 °C வரை இருக்கும்.[8]

தட்பவெப்ப நிலைத் தகவல், ராம்பூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 17.1
(62.8)
20.5
(68.9)
25.6
(78.1)
32.4
(90.3)
31.4
(88.5)
31.7
(89.1)
29.5
(85.1)
29.4
(84.9)
29.1
(84.4)
27.8
(82)
24.7
(76.5)
20
(68)
26.16
(79.09)
தாழ் சராசரி °C (°F) 7
(45)
9.1
(48.4)
11.2
(52.2)
15.7
(60.3)
17.4
(63.3)
17.7
(63.9)
19.2
(66.6)
21.5
(70.7)
19.2
(66.6)
13.2
(55.8)
12.1
(53.8)
8
(46)
15.58
(60.04)
பொழிவு mm (inches) 18.2
(0.717)
24.5
(0.965)
12.1
(0.476)
12.4
(0.488)
21.6
(0.85)
99.1
(3.902)
168.1
(6.618)
207.1
(8.154)
99.3
(3.909)
27.1
(1.067)
6.1
(0.24)
9.0
(0.354)
58.5
(2.303)
ஆதாரம்: WWO

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rampur, Uttar Pradesh
என்பதின் ஊடகங்கள் உள்ளன.