பொண்ணு வீட்டுக்காரன்
பொண்ணு வீட்டுக்காரன் 1999ஆவது ஆண்டில் பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், பிரீத்தா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்தில் விஜய் ஆதிராஜ், கவுண்டமணி, விஜயகுமார், ராதாரவி ஆகியோர் துணைக்கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1999 சனவரி மாதத்தில் வெளியானது.[1][2]
பொண்ணு வீட்டுக்காரன் | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | என். விஷ்ணு ராம் |
திரைக்கதை | பி. வாசு |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் பிரீத்தா விஜயகுமார் |
ஒளிப்பதிவு | அசோக் ராஜன் |
படத்தொகுப்பு | பி. மோகன் ராஜ் |
கலையகம் | கங்கா கௌரி புரொடக்சன்சு |
வெளியீடு | 14 சனவரி 1999 |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- சத்யராஜ்
- பிரீத்தா விஜயகுமார்
- ராதாரவி
- கவுண்டமணி
- விஜயகுமார்
- ராஜீவ்
- நிழல்கள் ரவி
- கே. எஸ். ரவிக்குமார்
- விஜய் ஆதிராஜ்
- குஷ்பூ (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள் தொகு
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3]
எண் | பாடல்கள் | பாடியவர்கள் |
---|---|---|
1 | அண்ணன் என்ன | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
2 | நந்தவனக் குயிலே | இளையராஜா |
3 | நந்தவனக் குயிலே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
4 | பொண்ணு வீட்டு | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
5 | இளைய நிலவே | ஸ்ரீனிவாஸ்,பவதாரிணி |
6 | கேட்டுக்கம்மா | மனோ |